நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 24 டிசம்பர், 2013

தமிழகத்தில் கணினி, இணையம் பரவ முதலில் செய்ய வேண்டுவன:



  • தமிழகத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்த்தட்டச்சு பழக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். 
  • தமிழக அரசு வழங்கியுள்ள விலையில்லா மடிக்கணினியில் தமிழ்த்தட்டச்சு பழகுவதற்குரிய மென்பொருள்கள் உள்ளன. இதனை மாணவர்கள் அறிந்து பழகுவதற்கு ஆசிரியர்கள், கணினி, இணைய ஆர்வலர்கள் தமிழகம் முழுவதும் அந்த அந்தப் பகுதிகளில் முன்னின்று உழைக்க வேண்டும். 
  • தமிழில் தட்டச்சிட 10 நிமையம் ஒதுக்கினால் போதும். விரைவில் கற்றுக்கொள்ளலாம். 
  • தமிழ் 99 விசைப்பலகை தமிழ் இலக்கண மரபுணர்ந்து உருவாக்கப்பட்டுள்ளதால் பழகுவதற்கு எளிது. 
  • தமிழக அரசு கல்வித்துறையின் சார்பில் தமிழ்த் தட்டச்சு வாரம் கொண்டாடி விழிப்புணர்வு உண்டாக்கலாம். 
  • சுழற்சங்கம், தொண்டு இயக்கங்கள், தமிழமைப்புகள், தமிழ்த் தட்டச்சுக்கு ஒருநாள் சிறப்புப் பயிலரங்குகள் நடத்துவதன் வழியாகத் தமிழ் வளர்ச்சிக்குத் துணைநிற்கலாம். 
  • அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி வழங்கிய பள்ளிகளுக்குப் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தலாம்.

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பயனுள்ள யோசனை ஐயா.
மாணவர்கள் பெரும்பாலோர் லாப் டாப்பை வெறும் படம் பார்க்கும், பாட்டு கேட்கும் கருவியாகத்தான் பயன்படுத்துகிறார்கள். இந்நிலை மாறியாக வேண்டும் ஐயா

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

மாணவர்களுடன் நெருங்கியத் தொடர்பில் உள்ள தங்களையொத்த ஆசிரியர்களின் கருத்தினை நன்றியுடன் ஏற்கின்றேன்.