நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

BIOGRAPHICAL NOTE ON POET BHARATHIDASAN


1891. Born in Puducherri, April 29; named Subburathinam by his parents Kanakasabai and Lakshmi.

1892.  Early education from his tutor Tiruppulisami Aiya.

1902. Starts composing poems

1908. Studies Tamil grammar and literature under the scholars Pu. A.Periasami and Bangaru Pattar. Stands first in the state in the Teachers Training Examination. Meets the great Poet Subramania Bharathi at the wedding  of Venu Nayakkar.

1909.   Becomes a teacher in a Government school at Niravi in Karaikkal.

1910. Drawn towards the Indian Nationalist Movement because of his contact with the freedom fighters Bharathi, V.V.S.Iyer, Dr. Varadarajulu and Sri Aurobindo who were in self exile at Putucceri. Helps Bharathi to publish his journal Intiya. Actively connected with the publication of nationalist journals like Manikkodi, Tainatu, Tecopakari, and Tecacevakan.

1916.  Death of Bharathidasan’s father, January 16.

1918. Wins a case against the French Government which got him sentenced to imprisonment for 15 months on a charge of treason.

1920.  Having been inspired by Gandhiji’s message, promotes the sale of khadi by carrying bundles of the cloth on his shoulders. Marriage to Palaniamma, daughter of Paradesiar.

1921. Death of  Subramania Bharathi September 11. Birth of first daughter Saraswathi,September 15.

1926.          Composes the devotional poems entitled Sri Mayilam Cuppiramaniar Tutiyamutu.

1928.     Joins  the Self - Respect Movement of Periyar E.V. Ramasamy. Starts writing poems to propagate the rationalistic ideas of the great social reformer. Birth of the poet’s son Gopathi (Mannar Mannan) Nov. 3.

1929.   Writes poems, essays and stories in Kutiyaracu and  Pakuttarivu Puratci leading organs of rationalistic thought.

1930.  Realeases a volume of poems including “Ciruvar Cirumiyar Teciyakitam”, “Tontar Nataippattu”, “Katar Irattinappattu”, Publication of Cancivi Parvatattin Caral and Talttappattor Camattuvappattu. Becomes the chief editor of the weekly Putuvai Muracu. December 10.

1931. Writes the essay “Cevvay Ulaka Yattirai” in Putuvai Muracu, January 5. Birth of the second daughter, Vasantha.

1933.    Birth of the third daughter, Ramani. Participates in the “Conference of the Atheists” organised under the presidentship of Ma. Singara Velar and writes in the conference register that he is a confirmed atheist. Takes the credit of writing the first poem on family planning.

1934 Stages the drama ‘Iranian Allatu Inaiyrra Viran’ under the Chairmanship of Periyar E.V.Ramasamy. Writes Mavalipuraccelavu” after a boat trip to Mamallapuram with P.Jivanantam, Kuttuci Gurusamy, Kunjitam, Mayilai Seeni Venkadasamy, Mayuram Natarajan, Swami Chidambaranar and Narana Duraikkannan.

1935.   With the help of Thambusami Mudaliar. releases Sri. Suppiramaniya Bharathi Kavita Mantalam, the first journal of   verse in India. Writes the dialogue and songs for the Tamil film Ramanujar.

1937.   Puratcikkavi, a short epic, released by L.Durairaj.

1938.   Bharathidasan Kavitaikal, Vol.-1 released by the poet with financial assistance by Kuttuci Gurusamy, Kunjitam Gurusamy and Narayana Samy Naidu. Hailed by Periyar E.V.Ramasamy as the organ voice of the Self - Respect Movement.

1939.   Writes the story, dialogue and songs for the film, Kavi Kalamekam.

1941.   Publication of Etirparata Muttam.

1942.   Publication of ‘Kutumpa Vilakku’, Part-I, Icaiyamutu I.

1944.  The poet’s eldest daughter, Saraswathi’s marriage with Pulavar Kannappar in the presence of Periyar. E.V. Ramasamy. Publication of Irunta Vitu, Katal Ninaivukal, Nalla Tirppu, Alakin Cirippu, Kutumpa Vilakku, Part-11.

1945 Publication of Pantiyan Paricu, Buys the house at 95, Perumal Koil Street, Publication of Tamiliyakkam, Etu Icai.

1946. The journal called Mullai published by PL. Muthiah under the patronage of Bharathidasan. The title, “Puratcik-Kavi” conferred on the poet at a meeting presided over by Navalar Somasundara Bharathi. Honoured with a cash award of Rs. 25,000 by Arignar Anna. Retires after serving as a Tamil teacher for thirty seven years, November 8.

1947. Releases the first two issues of the monthly Kuyil.  Publication of Caumiyan (drama), Bharathidasan Atticudi, Kavingar Pecukirar (Speeches).

1948. Kuyil from Putucceri, banned by the Government. The book Iranian Allatu Inaiyarra Viran and the staging of the drama banned by the Government of  Tamil Nadu. Publication of Katala Katamiya, Mullaikkatu, Intietirppuppatalkal, Patitta Penkal (Prose Drama), Katalmerkumilikal, Kutumpa Vilakku - III, Tiravitar Tiruppatal and Akattiyan Vitta Putukkarati.

1949.  Bharathidasan Kavitaikal, Vol-II, Cera Tantavam, Tamilacciyin Katti, Errappattu.

1950.  Kutumpa Vilakku IV, Kutumba Vilakku V

1951.   Amiltu Etu? Kalaikkuttiyin Katal.

1954. Ponkal Valttukkuviyal. Presides over the meeting of Official Language Committee at Kulittalai.

1955. Wins the assembly election and becomes the Protem Speaker of Pondicherry Legislative Assembly.

1956.   Tenaruvi (Songs)

1958. Tayinmelanai, Ilainar Ilakkiyam. Becomes a distinguished member of the Tamilkappulavar Kulu. 1959 Bharathidasan Natakankal, Kurincittittu. Continues to write Picirantaiyar Natakam. Starts writing Valluvar Ullam, a commentary on Tirukkural, November-1, Publication of Kuyil weekly.

1961.Shifts his family to Madras, Plans to film his masterpiece Pantiyan Paricu, Accepts a copy of Kamil Zvelebil’s Czech translation of Bharathidasan’s poems.

1962. Resumes the publication of the monthly, Kuyil, April 15. Birth of Anaittulakakkavinar Manram. Kannaki Purutcikkappiyam, Manimekalai Venpa,  Published. Honoured by Rajaji with a shield on behalf of Tamil Eluttalar Cankam.

1963.   Panmanittiral

1964.   Dies at the General Hospital, Madras, April 21.

1965.   Bharathidasan Memorial Mandapam built by Pondicherry Municipality at the Pappamma Koil Burning ghat, April 21.

1966.    Bharathidasan’s statue unveiled at the Chennai Marina beach on the occasion of the Second World Tamil conference at Madras.

1970.  Picirantaiyar gets the Sahitya Akademi Award for the year 1969.

1971. Bharathidasan’s birthday celebrations organised by the Government of Pondicherry. The poet’s house at Perumal Koil Street, becomes national property. Bharathidasan Memorial Library and Bharathidasan Museum, housed in the same building.

1972.   The poet’s life-size statue unveiled by the Government of Pondicherry, April 29.

1978.  The decision of the Government of Tamil Nadu to celebrate Bharathidasan’’s birthday as a public function. The plan to award Paventer award every year. The award for the year announced, April 29, 30.

1979.   Publication of L’Ecume de la mer, a French translation of Katal mel Kumilikal by L.Cadelis.

1982.  Inaguration of Bharathidasan University at Tiruchirapalli, April 29, Death of Savithri, Mannar Mannan’s wife and Bharathidsan’s daughter-in-law.

1986.          Publication of Mannar Mannan’s Biography of Bharathidasan authored by Mannar Mannan under the title Kruppukkuyilin Neruppukural, published which won the first prize awarded by MGR, Chief Minister of  Tamilnadu.

1989.   Death of Palaniyamma, wife of Bharathidasan, May 21.

1990. Bharathidasan centenary  was celebrated  by the Puducherry Government on August 26 and 27-1990. The Government of Tamilnadu nationalises the writings of Bharathidasan. Inauguration of Bhrathidasan centenary celebrations. Unveiling of the statue of Bharathidasan at Bharathidasan University by Hon’ble Mu.KARUNANIDHI, Chief Minister of Tamil Nadu.

1991.   Bharathidasan birth centenary celebration in Malaysia in September. Publication of Candi, a French transalation of Bharathidasan’s drama Karkantu by Mme.G.David.

1992. Bharathidasan Birth Centenary celebrations in Paris in May.

1993. Publication of the French translation of Picirantaiyar by L.Cadelis.

1994. The Government of  Tamilnadu instituted endowments in the name of  Bharathidasan in nine Universities.

1997. English Translations of Bharathidasan’s poems were brought out by the Puducherry

Institute of Linguistics and Culture on 10-5-1997
2001. The Central Government has issued a postage stamp with Bharathidasan Portrait on 9-10-2001

2005. A  documentary about the Bharathidasan Memorial Museum Cum Research Centre in Tamil, English & French was released by the Puducherry Arts and Culture  Department on 11-9-2005.


Courtesy: Illustrated Guide, Department of Arts and Culture,  Government of Puducherry.

சனி, 28 டிசம்பர், 2013

முனைவர் க.சுந்தரபாண்டியனின் தமிழில் பொருளிலக்கண வளர்ச்சி


முனைவர் க.சுந்தரபாண்டியன்

முனைவர் க.சுந்தரபாண்டியனின் தமிழில் பொருளிலக்கண வளர்ச்சி என்னும் ஆய்வு நூலை அண்மையில் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இந்த நூலாசிரியர் அண்மையில் குடியரசுத் தலைவரின் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்றவர். மேலும் திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராயத்தின் வளர்தமிழ் விருதும் பெற்ற பெருமைக்குரியவர். மாணவப் பருவத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பரிசில்களைப் பெற்றவர். இன்றையத் தமிழகச் சூழலில் குறிப்பிடத்தக்க இளைஞராக வளர்ந்து வருபவர். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பொறுப்புகளை ஏற்றுத் திறம்படப் பணிபுரிபவர்.


 முனைவர் க.சுந்தரபாண்டியன். சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரைச் சேர்ந்தவர். பெற்றோர் திருவாளர்கள் சி.கருத்தபாண்டி, .முத்துலட்சுமி. தொடக்கக் கல்வியைத் திண்டுக்கல், மரியநாதபுரம் புனித ஆரோக்கியம்மாள் தொடக்கப்பள்ளியிலும், உயர்நிலைக்கல்வியைத் திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளியிலும், மேல்நிலைக்கல்வியை மதுரை ஏ.வி. மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். இளங்கலை, முதுகலை, இளம் முனைவர்ப் பட்டங்களை மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்று பெற்றவர். கல்வியியல் படிப்பைப் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் பயின்று பெற்றவர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில்  தமிழில் பொருளிலக்கண வளர்ச்சி என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர்ப் பட்டம் பெற்றவர்.

தமிழில் பொருளிலக்கண வளர்ச்சி என்னும் இந்த நூலுக்கு முனைவர் பொற்கோ (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்), முனைவர் க.இராமசாமி ஆகியோரின் அரிய அணிந்துரைகள் நூலுக்கு அழகுசேர்க்கின்றன. நூலின் சிறப்பைச் சிறப்பாக எடுத்துரைக்கின்றன. தமிழில் பொருளிலக்கண வளர்ச்சி என்னும் இந்த நூல் முன்னுரை முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்களாக அமைந்துள்ளது

 முதல் இயல் காலந்தோறும் பொருளிலக்கண நூல்கள் என்ற தலைப்பில் அமைந்து தொல்காப்பியம் தொடங்கிப் பொருளிலக்கணம் கூறும் நூல்களை அறிமுகம் செய்கின்றது.

இரண்டாம் இயல் பொருளிலக்கண நூல்களின் அகமரபு என்று அமைந்து பொருளிலக்கண நூல்களில் அமையும் அகத்திணைச் செய்திகளைச் சிறப்பாக ஆராய்கின்றது.

தமிழிலக்கியத்தில் அகம்சார் கருத்துக்கள் என்று அமையும் மூன்றாம் இயல் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்களில் இடம்பெறும் அகம் சார்ந்த கருத்துக்களை ஆராய்ந்துள்ளது.

பொருளிலக்கண நூல்கள் சுட்டும்  புறமரபுகள் என்னும் நான்காம் இயல் புறத்திணை நூல்களில் குறிப்பிடப்படும் புறத்திணை சார்ந்த செய்திகளை ஆராய்கின்றது.

ஐந்தாம் இயல் தமிழிலக்கியத்தில் புறப்பொருள் கருத்துக்கள் என்று அமைந்து தமிழிலக்கியங்களில் புறப்பொருள் குறித்துப் பேசப்படும் செய்திகளை எடுத்துரைக்கின்றது. பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ள செய்திகள் தமிழ் இலக்கண ஆர்வலர்களுக்குப் பயன்படும் அரிய தகவல்களாகும்.


இலக்கணம் என்றால் அஞ்சி நடுங்கும் இன்றையத் தமிழ்ச்சூழலில் அரிய தலைப்பைத் தேர்ந்து ஆய்வு செய்துள்ள முனைவர் க. சுந்தரபாண்டியன் தொடர்ந்து இலக்கண ஆய்வுகளில் முன்னிற்க வேண்டும் என்பது நம் அவா. அவருக்கு நம் அன்பான வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

வெள்ளி, 27 டிசம்பர், 2013

பாவேந்தர் பாரதிதாசன் குறித்த அரிய செய்திகள்


திரையுலகில் பாவேந்தர்
திரைப்படத்துறையில் பாவேந்தர் பாரதிதாசன் பணியாற்றிய திரைப்படங்களின் விவரம்.

(திரைக்கதை - வசனம் - பாடல்கள்)
.எண்.            திரைப்படத்தின் பெயர்     கதாநாயகன்               ஆண்டு
1.            பாலாமணி () பக்காத்திருடன் , டி.கே.சண்முகம்   1937
2.            இராமானுஜர்             சங்கு சுப்ரமணியம்              1938
3.            கவிகாளமேகம்       டி.என்.ராஜரத்தினம்            1940
4.            சுலோசனா   டி.ஆர்.சுந்தரம்           1944
5.           ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி,       பி.எஸ்.கோவிந்தன்  1947
6.            பொன்முடி   பி.வி.நரசிம்மபாரதி             1949
7.            வளையாபதி              ஜி.முத்துக்கிருடடிணன்  1952
8.            பாண்டியன் பரிசு     சிவாஜி கணேசன்  (வெளிவரவில்லை)
9.            மகாகவி பாரதியார்                              (வெளிவரவில்லை)

திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாவேந்தரின் பாடல்கள்

.எண்.            பாடல்கள்      பாடல் இடம் பெற்றுள்ள ஆண்டு
                                        திரைப்படம்
1.        அனைத்துப் பாடல்களும்       பாலாமணி () பக்காத்திருடன்               1937
2.            அனைத்துப் பாடல்களும்                               ஸ்ரீ ராமானுஜர்           1938
3.            அனைத்துப் பாடல்களும்                               கவிகாள மேகம்      1940
4.            வெண்ணிலாவும் வானும் போல...       பொன்முடி   1950
5.            துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ... ஓர் இரவு        1951
6.            அதோ பாரடி அவரே என் கணவர்...        கல்யாணி     1952
7.            வாழ்க வாழ்க வாழ்கவே...                            பராசக்தி         1952
8.            பசியயன்று வந்தால் ஒரு பிடி சோறு...              பணம்                1952
9.            அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்?...               அந்தமான் கைதி   1952
10.          குளிர்த்தாமரை மலர்ப் பொய்கை...      வளையாபதி              1952
11.          குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி...      வளையாபதி              1952
12.          தாயகமே வாழ்க தாயகமே வாழ்க...    பூங்கோதை 1953
13.          பாண்டியன் என் சொல்லை.....                   திரும்பிப்பார்              1953
14.          ஆலையின் சங்கே நீ ஊதாயோ...            ரத்தக் கண்ணீர்         1954
15.          எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்        என் மகள்       1954
16.         நீலவான் ஆடைக்குள் உடல் ...கோமதியின்காதலன்               1955
17           ஆடற் கலைக்கழகு தேடப் பிறந்தவள்...          நானே ராஜா                1955
18           தலைவாரி பூச்சூடி உன்னை-பாட...       ரங்கோன் ராதா        1956
19.          கோரிக்கை யற்றுக் கிடக்கு தண்ணே...             குலதெய்வம்             1956
20.          ஒரே ஒரு பைசா தருவது பெரிசா...        பெற்ற மனம்              1960
21.          பாடிப் பாடிப் பாடி வாடி...  பெற்ற மனம்              1960
22.          மனதிற்குகந்த மயிலே வான்விட்டு...               பெற்ற மனம்              1960
23.          தமிழுக்கும் அமுதென்று பேர்-அந்த...                பஞ்சவர்ணக்கிளி  1965
24.          எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்...    கலங்கரை விளக்கம்          1965
25.          வலியோர் சிலர் எளியோர் தமை...       மணிமகுடம்              1966
26.          புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட            சந்திரோதயம்           1966
27.          எங்கெங்குக் காணிணும் சக்தியடா !...          நம்ம வீட்டுத் தெய்வம்    1970
28.          சித்திரச் சோலைகளே-உமை நன்கு....       நான் ஏன் பிறந்தேன்            1972
29.          புதியதோர் உலகம் செய்வோம் -             பல்லாண்டு வாழ்க               1975
30.          காலையிளம் பரிதியிலே ...         கண்ணன் ஒரு கைக் குழந்தை  1978
31.          அம்மா உன்றன் கைவளையாய் ...        நிஜங்கள்        1984
32.          கொலை வாளினை எடடா... சிவப்பதிகாரம்
32.          பெண்சிங்கம்
33.      உடும்பன்

பாவேந்தர் பாரதிதாசன் உரிமையாளராகவும் ஆசிரியராகவும்
பொறுப்பேற்று நடத்திய இதழ்களின் பெயர்ப் பட்டியல்

1.            புதுவை முரசு (வார இதழ்)             10-11-1930  -  9-11-1931
                பாண்டிச்சேரி, பிரஞ்சிந்தியா.

2.           ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம்            1935 ( பவ வருடம் பங்குனி
                (மாதாந்தக் கவிதைப் பத்திரிக்கை)       முதல் யுவவருடம்
                புதுச்சேரி.      புரட்டாசி வரை )

3.            குயில் (புத்தகம்) குயில் நிலையம்,      சனவரி 1946
                திருவல்லிக்கேணி, சென்னை.

4.            குயில் ( ஒரு பெயர்ப்பன்னூல் )                ஜூன் 1947
                பாரதிதாசன் பதிப்பகம்,
                95, பெருமாள் கோயில் தெரு.
                புதுச்சேரி, பிரஞ்சிந்தியா.

5.            குயில் (திங்கள் இதழ்)       1-9-1947   -  1-10-1948
                பழநியம்மா அச்சகம், பாண்டிச்சேரி.

6.            குயில் (தினசரி)       13-9-1947 - 26-10-1948
                பழநியம்மா அச்சகம், பாண்டிச்சேரி.

7.            குயில் (கிழமை இதழ்)      1-6-1958    -   7-2-1961
                பழநியம்மா அச்சகம், பாண்டிச்சேரி

8.            குயில் (திங்களிருமுறை)             15-4-1962   -  1-8-1962
                10, இராமன் தெரு, தி.நகர், சென்னை‡17.

 வள்ளுவர் உள்ளம் எனும் தலைப்பில் குயில் கிழமை இதழில்
பாரதிதாசன் எழுதிய திருக்குறள் உரைகள் பற்றிய விவரம்

( 1-12-1959 முதல் 22-07-1960 வரை )
அறத்துப்பால் / அதிகாரம்
                               
                               
1.            உலகின் தோற்றம்  (கடவுள் வாழ்த்து)              10
2.            வான் சிறப்பு                10
3.            நீத்தார் பெருமை    10
4.            அறன் வலியுறுத்தல்         10
5.            இல்வாழ்க்கைத் துணை நலம்  10
6.            வாழ்க்கைத் துணை நலம்             10
7.            மக்கட்பேறு 10
8.            அன்புடைமை           10
9.            விருந்தோம்பல்      3

பொருட்பால் / அதிகாரம்
10           கொடுங்கோன்மை              2
                உரை எழுதப்பட்ட திருக்குறளின் எண்ணிக்கை       85

பாரதிதாசன் ஆசிரியராகப் பணியாற்றிய இடங்கள்
.எண்ஊர்ப்பெயர்கள்    பகுதிகள்        ஆண்டு
1.            நிரவி,                காரைக்கால்               16-7-1907
2.            முத்திரைப்பாளையம்,     புதுச்சேரி       12-1-1912
3.            கூனிச்சம்பட்டு,       புதுச்சேரி       29-6-1914
4.            வில்லியனூர்,          புதுச்சேரி       29-3-1916
5.            ஆலங்குப்பம்,           புதுச்சேரி       7-7-1916
6.            திருநள்ளாறு,            காரைக்கால்               11-4-1917
7.            திருபுவனை                , புதுச்சேரி     27-9-1918
8.            திருமலைராயன்பட்டினம்,          காரைக்கால்               11-11-1921
9.            முத்தியால்பேட்டை,         புதுச்சேரி       13-5-1924
10.          புதுவை மிசியோன் வீதி ஆண்கள் பள்ளி,       புதுச்சேரி       17-8-1926
11.          புதுவை சுய்ர்கூப் வீதி பள்ளி,      புதுச்சேரி       26-11-1931
12.          கூனிச்சம்பட்டு,       புதுச்சேரி       10-8-1934
13.          நெட்டப்பாக்கம்,      புதுச்சேரி       19-9-1935
14.          புதுவை சுய்ர்கூப் வீதி பள்ளி,      புதுச்சேரி       5-1-1939
15.          நிரவி காரைக்கால்,              20-7-1944
16.          புதுவை மிசியோன் வீதி ஆண்கள் பள்ளி,       புதுச்சேரி       26-7-1944

நன்றி: புதுச்சேரி அரசு, கலை பண்பாட்டுத்துறையின் வெளியீடான விளக்கக் கையேடு