ஈரோடு மாவட்டம் பெருந்துறை மகாராசா கல்லூரி
மாணவர் மன்றத் தொடக்க விழாவும், இணையம் கற்போம் கருத்தரங்கும் 20.12.2013 வெளிக்கிழமை
காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெறுகின்றன. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் காலை
நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் தோ. இரா. பெரியசாமி அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார்.
கல்லூரியின் தாளாளர் திருவமை ப. தரணிதரன்
அவர்கள் தலைமையிலும் கல்லூரி முதல்வர் முனைவர்
சு. இராசலெட்சுமி அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும் மாணவர் மன்றத் தொடக்க விழாவில்
முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு மாணாக்கரின் ஆளுமை என்ற தலைப்பில் முற்பகலிலும்,
இணையம் கற்போம் என்ற தலைப்பில் பிற்பகலிலும் உரையாற்ற உள்ளார்.
முனைவர் ந. இராசேந்திரன்
அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக