நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 25 டிசம்பர், 2013

சென்னையில் 2013 - தமிழிசை விழாவும் மாவீரன் தீரன் சின்னமலை நாட்டிய நாடகமும்




அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இயங்கும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FETNA)”, தமிழகத்தில் இயங்கும் "இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையுடன் இணைந்து முதன்முறையாகச் சென்னையில் 2013, திசம்பர் 29 ம் நாள் ஞாயிற்றுக் கிழமை, மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ‘2013 - தமிழிசை விழாஎன்ற நிகழ்ச்சியை நடத்துகிறது.

நாள்: 29.12.2013, ஞாயிறு மாலை 4 முதல் 9 மணி வரை
இடம்: பசும்பொன் தேவர் மண்டபம்
100, பிபுல்லா சாலை, தியாகராயர் நகர்,
சென்னை 600 017.

              “2013 - தமிழிசை விழா​”​வில், ஞாயிறு மாலை 4:00 மணி முதல் 6:00 மணிவரை பாடகி சுசித்ரா பாலசுப்ரமணியம் அவர்கள் புறநானூற்றுப் பாடல்களையும், பாடகி அனுராதா கிருட்டிணமூர்த்தி அவர்கள் தமிழிசைப் பாடல்களையும் பாட இருக்கிறார்கள்.

மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை சிறப்பு விருந்தினர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையைச் சேர்ந்த முனைவர் சுந்தரவடிவேல் வரவேற்புரை நிகழ்த்த, மதுரை மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மருத்துவர் என்.சேதுராமன் அவர்கள் தலைமையேற்க இருக்கிறார்கள்.

திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. கே.பி.கே. செல்வராசு அவர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். GEM தொழிற்குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் திரு ஆர். வீரமணி அவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

 வேலூர் வி.ஐ.டி.பல்கலைக்கழகத்தின் நிறுவனர் கல்வியாளர் கோ.விசுவநாதன் அவர்கள், கூட்டுறவுத் துணி இயக்ககத்தின்(கோ ஆப்டெக்சு) மேலாண் இயக்குநர் திரு.சகாயம் இ.ஆ.ப, VGP நிறுவனத்தின் தலைவர்  திரு.V.G. சந்தோசம் ஆகியோர் சிறப்புரை ஆற்றவும் இருக்கிறார்கள்.

தமிழிசை விழாவின் முதன்மை நிகழ்வாக நடராஜ் நாட்டிய வித்யாலயாவழங்கும் மாவீரன் தீரன் சின்னமலை நாட்டிய நாடகம்அரங்கேற இருகிறது. 

நாட்டியம்: குரு: நாகை. என். பாலகுமார்; பாடல்கள்: கவிமுகில் கோபாலகிருட்டிணன்.

நிகழ்ச்சியின் நிறைவில், இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த இன்னிசை ஏந்தல்திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள் ன்றியுரை நிகழ்த்துவார்கள். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையைச் சேர்ந்த திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்கள்.


தமிழிசை விழாவைக் கடந்த சில வருடங்களாகவே அமெரிக்காவில் நடத்திவரும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை”, முதன்முதலாக அமெரிக்காவிற்கு வெளியே தாய்த்தமிழகத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் தமிழர்கள் வாழ்கின்ற உலகின் மற்ற பகுதிகளிலும் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற வேண்டும் ​ எனப் பேரவை விரும்புகிறது. தமிழிசையைப் பருகவும் தமிழ்நாடகம் காணவும் தமிழக உறவுகளை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை அன்புடன் அழைக்கின்றது.
தொடர்புக்கு:
இன்னிசை ஏந்தல் திருபுவனம் கு. ஆத்மநாதன் அவர்கள்,
என் 6, என் தெரு, கீழ்ப்பாக்கம் கார்டன்,
சென்னை – 600 010
தொலைபேசி(இல்லம்) : 00 91 44 6545 5989

செல்பேசி: 00 91 93801 25989


1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

விழா வெற்றி பெற வாழ்த்துகிறேன்