நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 17 நவம்பர், 2022

பொன்னி ஆசிரியவுரைகள்நூல்: பொன்னி ஆசிரியவுரைகள்

பதிப்பாசிரியர்: முனைவர் மு.இளங்கோவன்

முதல் பதிப்பு: 2004

பக்கம்: 272

விலை: 130 - 00 உருவா


நூல் கிடைக்குமிடம்: 

வயல்வெளிப் பதிப்பகம்,

இடைக்கட்டு, உள்கோட்டை(அஞ்சல்),

கங்கைகொண்டசோழபுரம்(வழி),

உடையார்பாளையம்(வட்டம்),

அரியலூர் மாவட்டம் - 612 901

பேசி: 9442029053


1947 முதல் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி இலக்கிய இதழில் வெளியான ஆசிரியவுரைகளின் தொகுப்பு நூல் இஃது.  இதில் 98 தலைப்புகளில் அமைந்த ஆசிரியவுரைகள் (தலையங்கங்கள்) தொகுக்கப்பட்டுள்ளன. பதிப்பாசிரியர் மு.இளங்கோவனின் முன்னுரையில் அரிய தகவல்கள் பல அடங்கியுள்ளன.

பொருளடக்கம்:

 1. எங்கள் எண்ணம்
 2. தமிழ்ப் புலமைக்குப் பரிசு
 3. புரட்சிக் கவிஞர்
 4. கேளாக் காதினர்...
 5. இனியும் இழிநிலை!
 6. கல்வி நீரோடை
 7. எதிரிகளில் ஒருவன் விலகுகிறான்
 8. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
 9. தமிழியக்கம் தொடங்க...
 10. வேண்டாம் தமிழர் வெறுத்த இந்தி
 11. உணவுக் கட்டுப்பாடு
 12. தமிழ் வளர்ச்சி
 13. பெருந்தகை பிரிந்தார்!
 14. தடையுத்தரவு
 15. தூத்துக்குடி நோக்கி...
 16. வெற்றிப்பாதையில் பெரியார் பெரும்படை
 17. இந்தி வேண்டாம்!
 18. தீமை ஒழிந்தது!
 19. போர் முரசு கேட்கிறது!
 20. தீர்ப்பளிக்கும் திருச்சபை!
 21. அறப்போர் தொடங்கிற்று!
 22. முதல் அத்தியாயம்
 23. மொழிவழி மாகாணம்
 24. சென்னைத் தேர்தல்
 25. மீண்டும் அறப்போர்
 26. அரசியல் அமைப்பு மன்றம்
 27. வாழ்வளியுங்கள்!
 28. புதுக்கோட்டை மாவட்டம்
 29. குடந்தைப் போராட்டம்
 30. தமிழர் நெறி
 31. வீரர் சிதம்பரம் நினைவு
 32. வேலை நிறுத்தம்
 33. அம்பேத்கர் மசோதா
 34. வகுப்பு நீதி
 35. அட்லாண்டிக் ஒப்பந்தம்
 36. திருவாங்கூர்த் தமிழர்கள்
 37. உலகம் சிரிக்கும் உறவு
 38. நண்பர்கள் சந்திப்பு
 39. வேண்டாத இந்தி
 40. நீதியல்ல!
 41. தகாது! தவறு! வேண்டாம்!
 42. ஜூலை ஒன்பது துக்கநாள்!
 43. இந்தி ஏகாதிபத்தியம்
 44. இராண்டாண்டு வாழ்வு
 45. சென்னை தமிழருக்கே!
 46. திராவிட முன்னேற்றக்கழகம்
 47. சீனக்குடியரசு
 48. தமிழ் முதல் மொழியாம்!
 49. மாணவர் கடமை
 50. ஆந்திர மாகாணம்
 51. இலங்கைத் தமிழர் நிலை
 52. திருச்சி அழைக்கிறது வாரீர்!
 53. வியட்நாம்
 54. வரவும் செலவும்
 55. மாவீரனை நினையுங்கள்
 56. கிழக்கும் மேற்கும்
 57. முதல்மொழி எது?
 58. முத்தமிழ் வளர!
 59. வானொலி நிலையங்கள்
 60. முத்தமிழ் வளர்வது காணீர்!
 61. கல்வி நீரோடை
 62. உலகப்போருக்கு ஒத்திகை
 63. இந்தி கட்டாயமில்லை!
 64. வகுப்புரிமைக்கு ஆபத்து!
 65. உணவு நெருக்கடி
 66. புதிய காங்கிரஸ்
 67. அழைத்தார்கள்... சென்றிருக்கிறார்!
 68. சந்திப்பு
 69. சென்னைக்கு வருகை
 70. அணுக்குண்டு
 71. மறைந்த மாவீரர்
 72. நெசவாளர் தொல்லை
 73. தேர்தல் உற்சாகம்
 74. காஷ்மீரம்
 75. காங்கிரஸ் நெருக்கடி
 76. பொம்மை ஜப்பான்
 77. அம்பேத்கர் மசோதா
 78. காங்கிரஸ் சீர்திருத்தம்
 79. பாகிஸ்தான் துயரம்
 80. சர்ச்சில் வெற்றி
 81. தமிழ் மக்களுக்கு அழைப்பு
 82. தேர்தலோ தேர்தல்
 83. மக்கள் தீர்ப்பு
 84. மந்திரிசபை அமைப்பு
 85. மக்கள் விருப்பம்
 86. மந்திரிசபை அமைப்பு மக்கள் கடமை
 87. புதுக் கவர்னர்
 88. பெரிய மனிதரும் சின்னப் பதவியும்
 89. இலங்கை இந்தியர்
 90. ஒரே வழி
 91. தமிழுக்கு விழா
 92. பொன்னியின் புதுவாழ்வு
 93. புதுவையின் புரளி
 94. திருக்குறள் மாநாடு
 95. உணவுக்கொள்கை இங்கும்- அங்கும்
 96. தஞ்சை நில வாரப் பாதுகாப்பு மசோதா
 97. ஆந்திராவில் உரிமைஒளி தமிழகத்தில்...?
 98. புத்தாண்டு