நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள ஜமால் முகமது கல்லூரியின் தமிழ் முதுகலை, மற்றும் உயராய்வுத்துறையின் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 22.09.2015 (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணிக்குத் தொடங்கி, நடைபெறுகின்றது. தமிழ்ச் சமூகம் - கலாச்சாரம்- கல்வி வணிகம் - இலக்கியங்களில் தகவல் தொடர்புச் சாதனங்களின் தாக்கமும் மாற்றமும் என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவை வெளியிடப்படுகின்றது.

பன்னாட்டுக் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் முனைவர் முகமது சாலிகு அவர்கள் தலைமையில் நடைபெறுகின்றது. பன்னாட்டுக் கருத்தரங்கில் மலேயா பல்கலைக்கழகத்தின் மொழித்துறை விரிவுரையாளரும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவருமான திரு. மன்னர் மன்னன் அவர்கள் கலந்துகொண்டு கருத்தரங்கைத் தொடங்கிவைத்து, தொடக்கவுரையாற்றுகின்றார். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு கட்டுரை படைக்கின்றனர்.

மாலையில் நடைபெறும் நிறைவு விழாவில் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பீ.மு.மன்சூர் அவர்கள் கலந்துகொண்டு கருத்தரங்க மதிப்பீட்டு உரை வழங்குகின்றார். புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தொழில்நுட்ப வளர்ச்சியும் தமிழ்வளர்ச்சியும் என்ற தலைப்பில் நிறைவுரையாற்றுகின்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் சிறப்பாகச் செய்துள்ளனர்.

தொடர்புக்கு: பேராசிரியர் சிராஜூதின் 0091 9865721142
வெள்ளி, 18 செப்டம்பர், 2015

டத்தோ சூ. பிரகதீஷ் குமார் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

டத்தோ சூ. பிரகதீஷ் குமார்

  பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் வெளிவருவதற்குப் பேருதவிபுரிந்து தமிழிசை வரலாற்றில் நிலைத்த புகழ் பெற்றவரும் பெரும் தொழிலதிபருமான எங்கள் அன்பிற்குரிய டத்தோ சூ. பிரகதீஷ் குமார் அவர்களுக்கு இன்று (செப்  18) பிறந்தநாள்! டத்தோ ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து, தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமைசேர்க்க என்நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.


இணைந்து வாழ்த்துவோர்: பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படத்தின் தயாரிப்புக் குழுவினர்.

திங்கள், 14 செப்டம்பர், 2015

International association on Tholkappiyam formed - R. SIVARAMANFirst meeting to be held in Paris in September to chalk out strategies to spread the work on Tamil grammar

A group of Tamil scholars have formed an International Association for Tholkappiyam to promote world-wide research on the oldest work on the grammar of the Tamil language. They also plan to conduct first meeting on September 27 in Paris to chalk out further strategies to spread the glory of the work.

“We have proposed to start the international association for promoting world-wide research on Tholkappiyam, and for bringing together Tholkappiyam scholars, and lovers of literature and grammar in general. This association aims at spreading the message and content as well as the knowledge ofTholkappiyam among world scholars,” Mu.Elangovan, Secretary of the Association told The Hindu . The first work of grammar extant in Tamil is Tholkappiyam . Mazhavai Mahalingaiyar brought it in printed form in 1847 for the first time, taking it from palm-leaf manuscripts.

This work has 1,600 verses and is divided into three chapters-- Ezhuththathigaaram, Sollathigaaram, Porulathigaaram. Grammatical and linguistic materials contained in this work are of a very high standard, and linguists from all over the world admire it and adhere to it. Much research has been done and continues to be done, by scholars of Tamil Nadu and other parts of the world, based on the text.

This association will be having its headquarters in France. Branches of this association will be started in every country and they will function under the guidance of suitable scholars. “The main activity of this association will be to conduct conferences annually . Particulars about Tholkappiyam editions, its research scholars, essays , and translations will be collected and made available in the internet. All information about the text will be given in simplified form,” said Prof. Elangovan.

A committee of scholars will identify researchers, and scholars who have been helpful in spreading Tholkappiyam. With their recommendation, such of those scholars will be honoured with awards in the name of Seeni Naina Mohammed,  a Tholkappiyam scholar who lived in Malaysia.


courtesy: The Hindu, 14.09.2015

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

தொல்காப்பியம் பதிப்பு விவரங்கள்தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். ஓலைச்சுவடியிலிருந்து மழவை மகாலிங்க ஐயர் அவர்களால் 1847 இல் முதன்முதல் இந்த நூல் அச்சு வடிவம் கண்டுள்ளது. ஆனால் 1680 இல் இந்த நூலின் ஓலைச்சுவடிகள் பிரான்சு நாட்டுக்குச் சென்றுள்ளது என்று அறியமுடிகின்றது. எனவே தொல்காப்பியக் கல்வி தமிழகத்தில் பரவலாக இருந்துள்ளதை அறியமுடிகின்றது. முந்தைய பதிப்புகள் குறித்த குறிப்புகள் போதிய அளவு கிடைக்காமையால் அறிஞருலகம் உண்மை அறிய இயலாமல் மயங்குகின்றது. எனவே தொல்காப்பியப் பதிப்பு வரலாற்றை முழுமைப்படுத்த கிடைத்த பதிப்பு விவரங்களைப் பகிர்ந்துகொள்கின்றேன். இந்த முயற்சியில் ஆய்வாளர்கள் முன்பே ஈடுபட்டு உழைத்துள்ளனர். அவர்களுள் மு.சண்முகம் பிள்ளை, ச.மெய்யப்பன், கோ. கிருட்டிணமூர்த்தி, ச.வே.சு., பா.மதுகேசுவரன் உள்ளிட்டோரின் முயற்சி நன்றியுடன் போற்றத்தக்கது. இப்பட்டியலை முழுமைப்படுத்த அறிஞருலகம் துணைநிற்க அன்புடன் வேண்டுகின்றேன்.

1.   மழவை மகாலிங்க ஐயர், எழுத்து, நச்சர், ஆக. 1847.
2.   சாமுவேல் பிள்ளை, தொல். நன். மூலம், செப். 1858.
3.   சி.வை. தாமோதரம் பிள்ளை, சொல். சேனா, செப். 1868.
4.   இராசகோபால பிள்ளை, சொல். சேனா, நவம். 1868.
5.   சுப்பராய செட்டியார், சொல். சேனா, நவ. 1868.
6.   ஆறுமுக நாவலர், சூத்திர விருத்திசிவஞானமுனிவர், 1868.
7.   சி.வை.தாமோதரம் பிள்ளை, பொருள், நச்சர், பேரா, 1885.
8.   சி.வை.தாமோதரம் பிள்ளை, எழுத்து, நச்சர், சூன். 1891.
9.   சி.வை.தாமோதரம் பிள்ளை, சொல். நச்சர், 1892.
10. அரசன் சண்முகனார், பாயிரம். சண்முக விருத்தி, 1905.
11. பவானந்தம் பிள்ளை, பொருள் (1,2) நச்சர், 1916.
12. பவானந்தம் பிள்ளை, பொருள் (3,4,5) நச்சர், 1916.
13. பவானந்தம் பிள்ளை, பொருள், பேரா, 1917.
14. ரா. ராகவையங்கார், பொருள் (8) நச்சர், 1917.
15. கா. நமச்சிவாய முதலியார், பொருள் (1,2), இளம்., 1920.
16. ..சிதம்பரம் பிள்ளை, பொருள். (1,2), இளம், 1921.
17. கா. நமச்சிவாய முதலியார், எழுத்து, சொல் (மூலம்), மார்ச் 1922.
18. புன்னைவனநாத முதலியார், தொல்.மூலம், மே 1922.
19. கா. நமச்சிவாய முதலியார், பாயிரங்கள், 1922.
20. சதாசிவ பண்டாரத்தார், பொதுப்பாயிரம், 1923.
21. கனகசுந்தரம் பிள்ளை, எழுத்து, நச்சர், 1923.
22. கந்தசாமியார், சொல். சேனா, மார்ச் 1923.
23. கா. நமச்சிவாய முதலியார், பொருள், மூலம், 1924.
24. கா. நமச்சிவாய முதலியார், சொல், இளம்., 1927.
25. ..சி., எழுத்து, இளம், 1928.
26. ரா.வேங்கடாசலம் பிள்ளை, சொல், தெய்வ., 1929.
27. பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார், சொல், குறிப்புரை, 1930.
28. பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரியார், எழுத்து, (மொழி), 1930.
29. ..சி., பொருள் (3,4,5) இளம், 1933.
30. தொல்காப்பியம், பொருளதிகாரம்(ஆங்கிலம்)வாசுதேவ சர்மா(1933)
31. ஆறுமுக நாவலர், சொல், சேனா, 1934.
32. எஸ். கனகசபாபதிப் பிள்ளை, பொருள். நச்சர், 1934.
33. எஸ். கனகசபாபதிப் பிள்ளை, பொருள்., பேரா., 1935.
34. தொல்.பொருள்2 ஆம் பாகம். பேரா.உரை (வே.துரைசாமி ஐயர் ஒப்பிட்டுஆய்ந்து, மா.நா. சோமசுந்தரம்  பிள்ளை எழுதிய அரிய ஆராய்ச்சிக் குறிப்புடன்),1935
35. ..நாகமணி, பொருள்-மேற்கோள்விளக்க அகராதி, 1935.
36. ..சி. எஸ்.வை.பிள்ளை, பொருள் (6,9), 1935.
37. ..சி, எஸ்.வை.பிள்ளை, பொருள், இளம். 1935.
38. யாழ்ப்பாணம் கணேசையர், எழுத்து, நச்சர், 1937.
39. பி.சா.சு. சாஸ்திரியார், எழுத்து, குறிப்புரை, 1937.
40. பி.சா.சு. சாஸ்திரியார், சொல் (1,2,3) (மொழி), 1937.
41. கணேசையர், சொல் சேனா, 1938.
42. தி.சு. பாலசுந்தரம் பிள்ளை, பொருள் (1) விளக்கம், ஏப்ரல்,1938.
43. மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, சொல் நச்சர், 1941.
44. சோமசுந்தர பாரதியார், பொருள் (1), 1942.
45. சோமசுந்தர பாரதியார், பொருள் (2), 1942.
46. சோமசுந்தர பாரதியார், பொருள் (6), 1942.
47. தி.சு.பாலசுந்தரம் பிள்ளை, தொல்-மூலம், மார்ச் 1943.
48. கணேசையர், பொருள், பேரா., 1943.
49. வேங்கடராஜுலு ரெட்டியார், எழுத்து, ஆராய்ச்சி, அக்.1944.
50. தேவநேயப் பாவாணர், எழுத்து, நச்சர், 1944.
51. பி.சா.சு. சாஸ்திரியார், சொல் (மொழி), 1945.
52. தேவநேயப் பாவாணர், சொல், சேனா, 1946.
53. கழகம், பொருள்(1,2 நச்சர்), 1947.
54. கணேசையர், பொருள்., நச்சர், 1948.
55. .எஸ்.வரதராஜ ஐயர், பொருள் (1,3) (மொழி), 1948.
56. .எஸ்.வரதராஜ ஐயர், பொருள் (4,5) (மொழி), 1948.
57. பி.சா.சு. சாஸ்திரியார், பொருள் (1,2) (மொழி), 1949.
58. கழகம், பொருள் (3-5) நச்சர், 1950.
59. கழகம், பொருள், பேரா, 1951.
60. தி..கனகசுந்தரம் பிள்ளை, சொல். நச்சர்,1952.
61. கழகம், பொருள் (1,2) இளம்., 1952.
62. பி.சா.சு. சாஸ்திரியார், பொருள் (3,4,5), மொழி, 1952.
63. கழகம், பொருள், இளம். 1953.
64. . பூவராகம் பிள்ளை, சொல், சேனா, 1954.
65. தொல்காப்பியம், தி.சு.பாலசுந்தரம் பிள்ளை, கழகம், 1954
66. கு. சுந்தரமூர்த்தி, எழுத்து, இளம், 1955.
67. பி.சா.சு., பொருள் (6-9) மொழி, 1956.
68. பதிப்பாசிரியர் குழு (மர்ரே ராஜம்), தொல் மூலம், 1960.
69. புலியூர் கேசிகன், தொல், முழுவதும், 1961,1964
70. கு. சுந்தரமூர்த்தி, சொல். நச்சர், 1962.
71. இராம. கோவிந்தசாமி, சொல். நச்சர், 1962.(சரசுவதிமகால் வெளியீடு)
72. வெள்ளைவாரணனார், தொல்.நன்.எழுத்து, 1962.
73. கு. சுந்தரமூர்த்தி, சொல். இளம், 1963.
74. கு. சுந்தரமூர்த்தி, சொல். தெய்வ, 1963.
75. வி..சுப்பிரமணியன்,ஆபிரகாம் அருளப்பன், சொல். (1-4 இயல்கள்), 1963.
76. இலக்குவனார், தொல் (மொழிபெயர்ப்பு), 1963. 1994
77. தொல்காப்பிய சூத்திரவிருத்தி, கழகம், 1964
78. கு. சுந்தரமூர்த்தி, சொல்.கல்.பழைய, 1964.
79. கு.சுந்தரமூர்த்தி, எழுத்துநச்சர், 1965.
80. கு. சுந்தரமூர்த்தி, தொல், பொருள் (8) நச்சர், 1965.
81. கு.சுந்தரமூர்த்தி, சொல், சேனா, 1966.
82. இராம. கோவிந்தசாமி, எழுத்து, நச்சர், 1967.
83. .வே.சுப்பிரமணியன், .தொகை (எழுத்து), 1967.
84. புலவர் குழந்தை, தொல், பொருள், 1968.
85. தண்டபாணி தேசிகர், சூத்திரவிருத்தி, 1968.
86. ஆபிரகாம் அருளப்பன், பொருள் (8), 1968.
87. வடலூரனார், தொல்.(வளம்), 1969.
88. அடிகளாசிரியர், எழுத்து, இளம், 1969.
89. கு.மா.திருநாவுக்கரசு, சொல், சேனா, 1970.
90. வெள்ளைவாரணனார், தொல்.நன்.சொல்., செப்.1971.
91. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சொல்.கல்.பழைய, 1971.
92. .வே.சு., .தொகை(சொல்), 1971.
93. ரா.சீனிவாசன், தொல்.நன்.1972.
94. வடலூரனார், பொருள் (8), 1974.
95. மு. அருணாசலம் பிள்ளை, தொல். பொருள். (1) .., 1975.
96. அறவாணன், தாயம்மாள் அறவாணன், தொல். களஞ்சியம், 1975.
97. அறவாணன், தொல். ஒப்பியல், 1975.
98. .கு.ஆதித்தர், தொல். சொல். 1977.
99. .வே.சு., .தொகை(யாப்பு, பாட்டியல்), 1978.
100.    கு. சுந்தரமூர்த்தி, எழுத்து, இளம், உரைவளம், 1979.
101.    . சிவலிங்கனார், சிறப்புப் பாயிரம், செப்.1980.
102.    . சிவலிங்கனார், நூன்மரபு, டிச.1980.
103.    தொல்காப்பியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பு 1981
104.    . சிவலிங்கனார், மொழிமரபு, சூன்.1981.
105.    கு. பகவதி, மரபியல், 1981.
106.    . சிவலிங்கனார், பிறப்பியல், டிச.1981.
107.    . சிவலிங்கனார், புணரியல், மார்ச். 1982.
108.    . சிவலிங்கனார், தொகைமரபு, மே. 1982.
109.    . சிவலிங்கனார், கிளவியாக்கம், சூலை 1982.
110.    . சிவலிங்கனார், உருபியல், நவ. 1982.
111.    . சிவலிங்கனார், உயிர் மயங்கியல், டிச. 1982.
112.    . சிவலிங்கனார், புள்ளி மயங்கியல், ஏப். 1983.
113.    . சிவலிங்கனார், குற்றியலுகரப் புணரியல், செப். 1983.
114.    . சிவலிங்கனார், வேற்றுமையியல், அக்.1983.
115.    வெள்ளைவாரணனார், புறம், 1983.
116.    வெள்ளைவாரணனார், களவு, 1983.
117.    வெள்ளைவாரணனார், கற்பு, 1983.
118.    வெள்ளைவாரணனார், பொருள், 1983.
119.    . சிவலிங்கனார், வேற்றுமை மயங்கியல், மே, 1984.
120.    . சிவலிங்கனார், விளிமரபு, மே, 1984.
121.    . சிவலிங்கனார், பெயரியல், சூலை 1984.
122.    . சிவலிங்கனார், வினையியல், செப். 1984.
123.    டி. ஆல்பர்ட், எழுத்து, சொல் (மொழிபெயர்ப்பு), 1985. ..நி.
124.    கு. சுந்தரமூர்த்தி, பொருள், பேரா., 1985.
125.    அடிகளாசிரியர், செய்யுளியல், இளம், 1985.
126.    வெள்ளைவாரணனார், உவமவியல், 1985.
127.    வெள்ளைவாரணனார், மெய்ப்பாடு, 1986.
128.    . சிவலிங்கனார், இடையியல், சூலை, 1986.
129.    கு. சுந்தரமூர்த்தி, பொருள், நச்சர், 1986.
130.    . சிவலிங்கனார், உரியியல் (..), அக். 1987.
131.    அடிகளாசிரியர், சொல், இளம், செப். 1988.
132.    . பாலசுந்தரம், எழுத்து, செப்.1988.
133.    . பாலசுந்தரம், சொல், அக்.1988.
134.    . சிவலிங்கனார், எச்சவியல் (..), டிச.1988.
135.    . வேணுகோபாலன், சொல், சேனா, 1989.
136.    . வெள்ளைவாரணனார், செய்யுளியல் (..), 1989.
137.    கு. சுந்தரமூர்த்தி, சொல், சேனா, 1989.
138.    . பாலசுந்தரம், பொருள் (3,7), அக்.1989.
139.    . பாலசுந்தரம், பொருள், (1,2), நவ. 1989.
140.    இராம. சுப்பிரமணியன், எழுத்து (பேருரை), 1989.
141.    நிர்மல் செல்வமணி, அகம் (மொழிபெயர்ப்பு), 1989.
142.    . சிவலிங்கனார், அகத்திணையியல் (..), மார்ச் 1991.
143.    கமில்சுவலபில், எழுத்து, சொல்(மொழிபெயர்ப்பு), 1972 முதல் 1985.IITS, Chennai
144.    தொல்காப்பியம் (எழுத்து,சொல்), நா. மகாலிங்கம் பதிப்பு 1994
145.    தொல்காப்பியம் (பொருள் படலம்) நா. மகாலிங்கம் பதிப்பு 1994
146.    தொல், சொல். பிரெஞ்சு மொழிபெயர்ப்பு, செவ்வியார்,1996, Part II 2008.
147.    .வே.சுப்பிரமணியம் தொல்காப்பியம் தெளிவுரை(2000)
148.    தொல்காப்பியம் பொருள், பேராசிரியர், வாழ்வியல் விளக்கம்,இரா.இளங்குமரன், தி.வே.கோபாலையர்(2000)
149.    தொல்.பொருள். நச்சர், வாழ்வியல் விளக்கம், இரா. இளங்குமனார், தி.வே.கோபாலையர், 2002
150.    தொல்காப்பியம், சொற்பொருட் களஞ்சியம், இரா.இளங்குமரனார், 2002 
151.    தொல்.சொல்.சேனா. வாழ்வியல் விளக்கம், 2003
152.    தொல்.சொல்.கல்லாடம். வாழ்வியல் விளக்கம், 2003
153.    தொல்.எழுத்து. இளம். வாழ்வியல் விளக்கம், 2003
154.    தொல்.எழுத்து. நச்சர். வாழ்வியல் விளக்கம், 2003
155.    தொல்.சொல்.தெய்வச்சிலை. வாழ்வியல் விளக்கம், 2003
156.    தொல்காப்பியக் கலைச்சொல் களஞ்சியம், பார்க்கர்,2003
157.    கலைஞர் மு. கருணாநிதி, தொல்காப்பியப் பூங்கா,2003
158. Tolkaappiyam in English, Content and Cultural Translation, S.V. Subramanian, 2004
159.    . திருஞானசம்பந்தம், தொல். – எழுத்து, நயவுரை, சூன் 2009.
159.    . திருஞானசம்பந்தம், தொல். – சொல், நயவுரை 2009
160.    The Earliest complete Grammar of studies in Tolkapiyam, Edit. Dr. Marudanayagam, 2010
161.    தொல். எழுத்து. . பாலசுந்தரம் உரை, பெ.மாதையன் பதிப்பு 2012
162.    தொல். சொல். .பாலசுந்தரம் உரை, பெ.மாதையன் பதிப்பு, 2012
163.    தொல். பொருள்.(3 பகுதி), . பாலசுந்தரம் உரை, பெ.மாதையன் பதிப்பு, 2012