நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 6 டிசம்பர், 2013

பெ. பூபதியின் ஆளுமைச் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா


புதுச்சேரியின் வளர்ந்துவரும் எழுத்தாளர் திரு. பூபதி அவர்களின் ஆளுமைச் சிறுகதைகள் நூல்வெளியீட்டு விழா 07. 12. 2013  காரிக்(சனி)கிழமை மாலை ஆறு மணிக்குப் புதுச்சேரி செயிண்டு பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகின்றது.

புதுச்சேரி அரசின் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு வ.சபாபதி(எ) கோதண்டராமன் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி நூலை வெளியிடவும், புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் இயக்குநர் திரு. இ. வல்லவன் அவர்கள் நூலின் முதல்படியைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கவும் உள்ளனர். மாநிலப் பயிற்சி மையத்தின் சிறப்புப்பணி அலுவலர் முனைவர் வா. கிருட்டிணன் அவர்கள் போற்றுரை வழங்கவும்,  திருமதி அல்போன்சா கில்டா அவர்கள் வாழ்த்துரை வழங்கவும், முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் நூல் மதிப்பீட்டு உரை வழங்கவும் உள்ளனர்.

நிகழ்ச்சியின் நிறைவில் நூலாசிரியர் பெ. பூபதி அவர்கள் ஏற்புரை வழங்குவார். புதுவைத் தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் திரளாகக் கலந்துகொள்ள உள்ள இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் விழாக்குழுவினர் வரவேற்கின்றனர்.

தொடர்புக்கு: 97893 22069


பெ.பூபதி பற்றி அறிய இங்கே சொடுக்கவும்

கருத்துகள் இல்லை: