நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 12 மார்ச், 2013

கோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம்



தமிழ்ப் பண்பாட்டு மைய நிறுவுநர் மருத்துவர் நல்ல ஜி. பழனிசாமி

மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி(செயலர், என்.ஜி.பி.கல்வி நிறுவனங்கள்)

கோவை டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியின் நிறுவுநர் மருத்துவர் நல்ல ஜி. பழனிசாமி அவர்கள் மருத்துவத் துறையில் பேரறிவு பெற்றவர். அதுபோல் தமிழ்மொழியின் மீதும், தமிழ்ப் பண்பாட்டின்மீதும் தமிழக வரலாற்றின் மீதும் அளப்பரிய ஈடுபாடுகொண்டவர்.மருத்துவர் அவர்கள் தம் நெடுநாள் கனவான தமிழ்ப்பண்பாட்டு மையத்தைத் தொடங்கித் தமிழ்ப்பணியாற்ற முன்வந்துள்ளார். மருத்துவர் பழனிசாமி ஐயா அவர்களின் அனைத்துப் பணிகளுக்கும் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி அவர்கள் பெரிதும் உதவியாக இருந்துவருகின்றார்கள். 

இந்தத் தமிழ்ப்பண்பாட்டு மையம் தமிழுக்கு உழைத்தவர்களை - உழைப்பவர்களைச் சிறப்பிக்கவும், தமிழ் இலக்கியப் பொழிவுகள் தொடர்ந்து நடைபெறவும், தமிழ்ப் பண்பாடு, தமிழக வரலாறு மீட்கவும் பணியாற்ற உள்ளது. இந்த மையத்தைத் தொடங்க முன்வந்துள்ள கல்வி வள்ளல் நல்ல ஜி. பழனிசாமி ஐயா அவர்களைப் போற்றுவதுடன் அவர்களின் தமிழ்ப்பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெற என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தமிழ்ப்பண்பாட்டு மையம் தொடக்கவிழாவுடன் எங்கள் நெஞ்சங்கவர்ந்த பேராசிரியர் சிற்பி அவர்களின் வாழ்வியல்பணி விளக்கும் SIRPI- 75 : A LIFE OF POETRY நூல்வெளியீடும் நடைபெற உள்ளது. இரு நிகழ்ச்சிகளும் சிறக்க வாழ்த்துகள்.

இடம்: டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
நாள்: 19.03.2013 நேரம் காலை 10.00 மணி

தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில்  மருத்துவர் நல்ல ஜி. பழனிசாமி அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார். திரைக்கலைஞர் இரா.சிவக்குமார், திரு. என்.இராம், திரு. ஆர். நாகராஜ், திரு. ந.சுப்ரமணியம், திரு.மு.வேலாயுதம், பேராசிரியர் கா.செல்லப்பன், எழுத்தாளர் மாலன், பேராசிரியர் சிற்பி, முனைவர் பெ,இரா,முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.



கருத்துகள் இல்லை: