நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 28 பிப்ரவரி, 2013

வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியில் இணையத் தமிழ் அறிமுகம்வேலூர் சாயிநாதபுரத்தில் அமைந்துள்ள தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியில் இணையத் தமிழ் அறிமுக நிகழ்வு நடைபெற உள்ளது. வள்ளல் ந.கிருஷ்ணசாமி முதலியார் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டித் தமிழ்த்துறை நடத்தும் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இக் கல்லூரியில் பயிலும் மாணவிகள், பணிபுரியும் பேராசிரியர்கள் வேலூர் சார்ந்த மற்ற கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற உள்ளனர். மேலும் வேலூரில் வாழும் தமிழ்ப்பற்றாளர்களும் கலந்துகொண்டு தமிழ் இணைய அறிமுகம்பெற உள்ளனர்.

நாள்: 02.03.2013 (சனிக்கிழமை)
நேரம்: காலை 10 மணிமுதல்
இடம்: டி பிளாக், கருத்தரங்கக் கூடம், டி.கே.எம்.கல்லூரி, வேலூர்

கருத்துகள் இல்லை: