நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 16 பிப்ரவரி, 2013

திருப்பூர் பார்க்சு கல்லூரியில் தேசிய அளவிலான தமிழ் இணையப் பயிலரங்கம்திருப்பூர் மாநகரில் “கல்வித் தம்பதியர்” என மக்களால் போற்றப்படும் முனைவர் பி.வி.இரவி, திருமதி கே.பிரேமா இரவி அவர்களின் கல்வி நிறுவனங்களுள் ஒன்றான பார்க்சு கல்லூரியில் (park's college) தேசிய அளவிலான தமிழ் இணையப் பயிலரங்கம் ஒன்றை நடத்தத் தமிழ்த்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

கல்லூரிப் பேராசிரியர்கள், ஆர்வலர்கள், முதுகலை மாணவர்கள், இளம் முனைவர் பட்டம், முனைவர் பட்டம் பயிலும் ஆய்வாளர்கள் தமிழ்த்துறை சார்ந்த மாணவர்கள் இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டு பயன்பெறலாம். தமிழ் இணையதள வளர்ச்சி, தமிழ்த்தட்டச்சு, மின்னூல்கள், இணையவழிக் கல்வி, வலைப்பூ உருவாக்கம், விக்கிப்பீடியா பங்களிப்பு, சமூக வலைத்தளங்கள் குறித்த அறிமுகமும் செய்முறைப் பயிற்சியும் வழங்கப்பட உள்ளன. ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

நாள்: 23.02.2013 சனிக்கிழமை, காலை 10 மணி முதல் 4.30 மணி வரை

இடம்: பார்க்சு கல்லூரி(தன்னாட்சி), சின்னக்கரை, திருப்பூர், தமிழ்நாடு

தொடர்புக்கு:
முனைவர் சாமி சுந்தரம், தமிழ்த்துறைத் தலைவர் - 9566656617
முனைவர் பா. உமாராணி -9965148965 

கருத்துகள் இல்லை: