நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

தமிழக அரசின் மடிக்கணினியைப் பயன்படுத்திக் குற்றாலம் மகளிர்கல்லூரி மாணவிகள் பயிற்சி

முனைவர் மு.இளங்கோவன் பயிற்சியளிப்ப‍தை ஆர்வமுடன் உற்றுநோக்கும் குற்றாலம் பராசக்திக் கல்லூரி மாணவிகள்
குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் நடைபெறும் தமிழ் இணையப் பயிலரங்கில் தமிழக அரசு வழங்கிய மடிக்கணினியைப் பயன்படுத்தி மாணவிகள் பயிற்சி பெற்றனர்.

இக்கணினியை இணையத்தில் இணைத்து, தங்களுக்குத் தேவையான பாடநூல்ககளை நூலகத் தளங்களிலிருந்து தரவிறக்கிக்கொண்டனர். தங்கள் ஆசிரியர்களுக்கு அனுப்ப உள்ள மடல்களைத் தட்டச்சிட்டும், விண்ணப்பங்களை வடிவமைத்தும் பயன்படுத்தப் பழகினர். கணினியில் உள்ள தமிழ் எழுத்துருக்களைக் கொண்டு தமிழில் தட்டச்சுப் பழகியது மாணவிகளுக்கு எளிதாக இருந்ததாகக் கருத்துரைத்தனர். உணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடர்கின்றது...

கருத்துகள் இல்லை: