நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 24 ஜூன், 2010

செம்மொழி மாநாடு இரண்டாம் நாள் நிகழ்வுகள்-படங்கள்


மயில்சாமி அண்ணாதுரை,நான்


மயில்சாமி அண்ணாதுரை,நான்,நா.கணேசன்(நாசா விண்வெளி)


நான்,மயில்சாமி அண்ணாதுரை(என் இணையம் கற்போம் நூலுடன்),நாசா.கணேசன்

24.06.2010 செம்மொழி இரண்டாம் நாள் ஆய்வரங்கத் தொடக்கவிழா காலை 9.30மணிக்கு மிகச்சிறப்பாகத் தொடங்கி நடைபெற்றது.ஆய்வரங்கச் சிறப்பு நிகழ்வாகத் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் சிறப்புரையில் தமிழுக்குச் செய்ய வேண்டிய பணிகளைத் தமிழறிஞர்கள் ஆணையிட்டுச் சொன்னால் தமிழக அரசு செய்யக் கடமைப்பட்டிருக்கிறது என்று சொன்னதும் அரங்கில் இருந்த பன்னாட்டுத் தமிழறிஞர்களும் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

பேராசிரியர் கா.சிவத்தம்பி தலைமையில் பன்னாட்டு அறிஞர்கள் வாழ்த்துரைத்தனர்.
12.மணிக்குத் தமிழ் இணைய மாநாடு தொடங்கியது.மருத்துவர் பூங்கோதை அருணா அவர்களின் வரவேற்பும் நடுவண் அமைச்சர் திரு.ஆ.இராசா அவர்களின் சிறப்புரையும் கொண்டு விழா சிறப்பாக நடந்தது.

நான் இணைய மாநாடு தொடங்கும் நேரத்தில் வேறொரு அரங்கில் கட்டுரை படிக்க வேண்டியிருந்தது.சிறிது நேரம் இருந்து விட்டு என் கடமையாற்றச் சென்றேன்.
ஆங்காங்கு நாட்டுப் பேராசிரியரும் மிகச்சிறந்த அகராதியியல் அறிஞருமான கிரிகோரி சோம்சு அவர்கள் தலைமையில் தமிழ் மின் அகரமுதலிகள் என்ற கட்டுரையைக் காட்சி விளக்கத்துடன் வழங்கினேன். கட்டுரையை நாளை இணையத்தில் ஏற்றுவேன்.

அதன் பிறகு பகலுணவுக்குச் சென்றேன்.சிறந்த உணவு ஏற்பாடு.
அதன் பின்னர் நண்பர்கள் சந்திப்பு.ஆய்வரங்க நிகழ்வு உற்றுநோக்கல் என்று நேரம் போனதே தெரியவில்லை. நண்பர் முகுந்து,மயூரன் ஆகியோரைக் கண்டு உரையாடினேன்.

அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களும்,நாசா கணேசனும் தொழில்நுட்பம் சார்ந்த அரங்கில் இருந்தனர்.நா.கணேசன் அவர்கள் மிகச்சிறந்த செய்திகளை அரங்கிற்கு முன்வைத்தார். அமர்வு முடிந்ததும் நான்,மயில்சாமி அண்ணாதுரை,நா.கணேசன் ஆகியோர் உரையாடி மகிழ்ந்தோம்.என் இணையம் கற்போம் நூலை மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு வழங்கினேன்.என் இணையப் பணி பற்றி நா.கணேசன் அவர்கள் எடுத்துரைத்தார். நான் மாணவர்களுக்குத் தமிழ் இணையம் பயிற்றுவிப்பதை அறிந்து மயில்சாமி அண்ணாதுரை மகிழ்ந்தார்.

பின்னர்த் தமிழ் இணையக் கண்காட்சி அரங்கிற்கு நானும் நண்பர் புகழேந்தியும் வந்தோம்.
அங்கிருந்த தமிழ் விக்கிப்பீடியா ஆர்வலர்களைக் கண்டு உரையாடி அவர்களிடம் இருந்து விடைபெற்று இரவு 9 மணியளவில் தங்கும் விடுதிக்கு வந்தேன்.நேரம் இன்மையால் விரிவாக எழுத முடியவில்லை.நினைவுக்குச் சில படங்களை இணைக்கின்றேன்.


நான்,பேராசிரியர் கிரிகோரி சோம்சு


பேராசிரியர் கிரிகோரி சோம்சு


நானும் சிலம்பொலி ஐயாவும்


முனைவர் ச.வே.சுப்பிரமணியனுடன் நான்


நான்,மயூரன்,முகுந்து



பதிவுலக முன்னோடிகளுடன்



கண்காட்சியைக் காண வரிசையில் காத்து நிற்கும் மக்கள்



பதிவுலக நண்பர்களுடன்(இணையக் கண்காட்சி அரங்கில்)

7 கருத்துகள்:

-/பெயரிலி. சொன்னது…

முனைவார் மு. இளங்கோவன் அய்யா, "இவர்களுடன் நான்: ஒரு புகைப்படத்தொகுப்பு - 2010" என்று ஆண்டாண்டுக்கு நூற்றொகுதி ஒன்றென வெளியிடச் சித்தங் கொண்டிருக்கின்றீர்களா?

செம்மொழி மகாநாட்டினைச் சிறப்பிக்கும் படங்களை உடனுக்குடன் தரும் தங்கள் சீறிய சேவைக்கு வாழ்த்து

-/பெயரிலி. சொன்னது…

http://tamilmakkalkural.blogspot.com/2009/10/thiruma-srilanka-visitthiruma-and.html

-/பெயரிலி. சொன்னது…

http://tamilmakkalkural.blogspot.com/2009/10/rajapakchetrbalukanimozhithirumavalavan.html

-/பெயரிலி. சொன்னது…

http://www.slnewsonline.net/Tamil_Nadu_MP_greet_Mahinda_Rajapaksa_Oct_2009.jpg

-/பெயரிலி. சொன்னது…

அமெரிககாவிலிருந்து இலவச விமானச்சீட்டிலே விழாவுக்கு வருவதெப்படி என்றேதும் கட்டுரை வாசிக்கப்பட்டதா என்றும் எழுதுங்கள் முனைவர் அய்யா.

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

அருமை! நேரடி வர்ணனை போல நடை அழகு!

ராம்ஜி_யாஹூ சொன்னது…

nice, thanks for sharing