நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 14 ஜூன், 2008

தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்க விழாவில் இதுவரை பேசியவர்கள்...

தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கத்தொடக்க விழா சென்னை இமேச் அரங்கில் சிறப்பாக நடந்துகொண்டுள்ளது. இதுவரை பழமலை, இரா.இளங்குமரனார், கவிக்கோ அப்துல்ரகுமான், இன்குலாப், பொற்கோ, இரவிக்குமார், பிரபஞ்சன், உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் பேசியுள்ளனர்.

அப்துல் ரகுமான் தமிழிசை,தமிழ்ப்பண்பாடு பற்றி மிகச்சிறப்பாகப்பேசினார்.தமிழர்கள் பத்துப்பாட்டை விட்டுவிட்டு இன்று குத்துப்பாட்டில் ஈடுபட்டுள்ளதைக்கண்டித்தார்.

உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் வால்டுவிட்மன் பாடலை விடுதலை செய்தான்.ஆனால் அங்கு உழைத்த,இரத்தம் சிந்தியவர்களைப்பாடவில்லை என்றார்.
மேல்நாட்டு நாகரிகத்தைக்கண்டித்தார்.

மீண்டும் தொடர்வேன்...

1 கருத்து:

bala சொன்னது…

//தமிழர்கள் பத்துப்பாட்டை விட்டுவிட்டு இன்று குத்துப்பாட்டில் ஈடுபட்டுள்ளதைக்கண்டித்தார்//

அடப் பாவி,

மஞ்ச துண்டு அய்யாவை,இத விட கேவலமா யாரும் திட்ட முடியாது.

பாலா