நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 28 மார்ச், 2016

திருவண்ணாமலையில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்கம்...


 பேராசிரியர் இ.சூசை உரை

உலகத் தொல்காப்பிய மன்றத்தின் திருவண்ணாமலை கிளை தொடக்க விழா 27.03.2016 ஞாயிறு மாலை 6.30  மணிக்குத் தொடங்கி, 8 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தொண்டர் அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் பேராசிரியர் இரா. சங்கர் வரவேற்புரையாற்றினார். முனைவர் வே. நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார்.  முனைவர் ப. பத்மநாபன் முன்னிலையுரையாற்றினார். முனைவர் மு. இளங்கோவன் கலந்துகொண்டு மன்றத்தின் நோக்கங்களைப் பதிவு செய்தார். புலவர் ஜோ. தெய்வநீதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள தூயவளனார் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் . சூசை அவர்கள் தொல்காப்பியம் ஓர் அகராதியியல் பேழை என்ற தலைப்பில் ஒருமணி நேரம் அரியதோர் சிறப்புரையாற்றினார். தொல்காப்பியர் அகராதியியல் அறிஞராக விளங்கும் பாங்கினைத் தொல்காப்பியத்திலிருந்தும், அறிஞர்களின் நூல்களிலிருந்தும் மேற்கோள் காட்டிப் பேசினார். தேவிகாபுரம் தமிழாசிரியர் அர. விவேகானந்தன் நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலையில் வாழும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு பெருமை சேர்த்தனர்.

முனைவர் வே.நெடுஞ்செழியன் உரை

அருள்வேந்தன் பாவைச்செல்வி உரை
மு.இளங்கோவன் உரை
பங்கேற்றோர் - ஒரு பகுதியினர்


பார்வையாளர்கள்- ஒரு பகுதியினர்
1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

விழா நிகழ்வுகள் கண்டு மகிழ்ந்தேன் ஐயா