உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் புதுச்சேரி, நீட ராசப்பையர் வீதியில் உள்ள செகா கலைக்கூடத்தில் தொல்காப்பியம் குறித்த இரண்டாம் தொடர்பொழிவு நடைபெற உள்ளது.
நாள்: 16.03.2016, புதன்கிழமை, நேரம் மாலை 6.30. மணி முதல் 8 மணி வரை.
புதுவைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் மானிடவியல்துறை அறிஞருமான முனைவர் ஆ.செல்லப்பெருமாள் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறிதல்சார் மானிடவியல் நோக்கில் தொல்காப்பியம் என்ற
தலைப்பில் உரையாற்றுகின்றார்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நூல்
தொல்காப்பியம் ஆகும். இதில் இடம்பெறும் தமிழ் மொழியின் இலக்கணம் கூறும் பகுதிகள் உலக அறிஞர்களை வியப்படையச்
செய்கின்றன. இந்த நூலில் இடம்பெறும் மானிடவியல் சார்ந்த செய்திகளை
முனைவர் ஆ. செல்லப்பெருமாள் விளக்க உள்ளார். இவர் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சேவியர் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல்
மையத்தில் மானிடவியல் துறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக