நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 20 மார்ச், 2016

அந்தமான் தமிழர்களை ஆய்வுலகிற்கு அறிமுகப்படுத்திய முனைவர் ஒப்பிலா. மதிவாணன்…


முனைவர் ஒப்பிலா. மதிவாணன்
(துறைத்தலைவர், தமிழ் இலக்கியத்துறை,சென்னைப் பல்கலைக்கழகம்)


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தைப் பார்வையிடவும் மூதறிஞர் .சுப. மாணிக்கனாரின் நூல்களை விலைக்கு வாங்கவும் 1992 இல் சிதம்பரம் சென்றிருந்தேன். அங்குப் பணியாற்றிய பேராசிரியர் . மெய்யப்பனார், . சுப. மாணிக்கம் அவர்களின் நூல்களை அன்பளிப்பாக வழங்கியதுடன் அருகில் இருந்த தம் மாணவர்கள், ஆய்வாளர்கள் சிலரையும் எனக்கு அறிமுகம் செய்தார். அப்பொழுது மாணவராக இருந்த அரங்க. பாரி அவர்கள் (அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் இன்றைய தலைவர்) இளந்தாடியுடன் என் கண்முன் தெரிந்தார். அருகில் இருந்த ஆய்வாளர் ஒப்பிலா. மதிவாணன் அவர்களையும் மெய்யப்பனார் உரிமையுடன் அறிமுகம் செய்தார்.

ஒப்பிலா. மதிவாணன் அவர்களின் ஆய்வுத்தலைப்புஅந்தமானில் தமிழும் தமிழரும்என்பது அறிந்து வியப்புற்றேன். ஏனெனில் நான் அறிந்த அன்றைய ஆய்வுலகம் சிற்றிலக்கியம், பக்தி நூல்கள், புதினங்களைத் தாண்டாமல் இருந்தது. இந்த நிலையில் அவர்தம் அந்தமான் ஆய்வு அனுபவங்களைக் கேட்டு, ஆர்வம் மேலிட்டு உரையாடினேன். அந்தமான் என்பது குற்றவாளிகளைக் கொண்டுபோய் அடைக்கும் சிறையைக் கொண்ட பகுதி எனவும், பழங்குடி மக்கள் அங்கு நிறைந்து வாழ்கின்றனர் எனவும் மட்டும் அந்த ஊர் எங்களுக்கு அறிமுகம் ஆகியிருந்தது. ஒப்பிலா மதிவாணன் அவர்களின் ஆய்வு அனுபவங்களைக் கேட்ட பிறகு, அங்கு வாழும் தமிழர்களைப் பற்றியும், தமிழ்ச்சங்கம், தமிழ்ப்படைப்பாளிகள் பற்றியும் அறிய முடிந்தது.

காலங்கள் உருண்டோடின…

1997 இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு உதவியாளர் பணிக்கு எனக்கு நேர்காணல் அழைப்பு வந்தது. நேர்காணலுக்குச் சென்றபொழுது முனைவர் ஒப்பிலா. மதிவாணன் அவர்களை நீண்ட இடைவேளைக்குப் பிறகு சந்திக்க நேர்ந்தது. இருவரும் உதவியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். அங்கு ஓராண்டு உடனுறையும் வாழ்க்கை அமைந்தது. ஆய்வுத்தொடர்பாகவும், தமிழ்ச்சமூகம் சார்ந்தும் முனைவர் ஒப்பிலா. மதிவாணன் தொடர்ந்து மேற்கொண்டிருந்த பணிகள் அறிந்து வியப்புற்றேன். அவர்தம் பன்முக ஆளுமை எங்களுக்கு முன்மாதிரியாக இருந்தது. உலகம் போற்றும் பல கட்டுரைகளை அவர் வரைந்து, அவை அந்நாளைய நாளேடுகளில் வெளிவந்து, அனைவரின் பாராட்டையும் பெற்றன.

முனைவர் ஒப்பிலா. மதிவாணன் அரசும் தமிழும் என்ற தலைப்பில் எழுதிய நூலினை அந்நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் மதுரைத் தமிழ்ச்  சங்கத்தைத் தொடங்கிய நாளில் வெளியிட்டு, நூலாசிரியருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துரைத்த செய்தி நண்பர்கள் பலருக்கும் தெரியாத செய்தியாகும். தமிழ்க்கல்வி சார்ந்தும், தமிழ்க் கல்வித்துறை சார்ந்தும் தொடர்ந்து சிந்திக்கும் ஒப்பிலா. மதிவாணனைச் சிங்கப்பூர் அரசு தம் கல்வி அமைச்சில் தமிழ்க்கல்வி குறித்த ஆலோசகராக நியமித்துப் பெருமைகொண்டது. பன்னாட்டுக் கருத்தரங்குகளில் ஆய்வுரை வழங்க இவர் அயலகப் பயணங்களை மேற்கொண்டவர். உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கி, உலக அளவில் தொல்காப்பிய ஆய்வையும், பரவலையும் கொண்டுசெல்ல வேண்டும் என்று நாங்கள் எண்ணியபொழுது நல்ல நெறியாளராக அமைந்து எங்களை நெறிப்படுத்தியதை இங்கு நினைவுகூர வேண்டும். ஒப்பிலா மதிவாணனின் பார்வை என்பது உலகு தழுவியது, பெரும் திட்டமிடலுடன் அமைந்தது என்பதை அருகிலிருந்து பலமுறை அறிந்துள்ளேன்.

முனைவர் ஒப்பிலா. மதிவாணன் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் இரும்புலிக்குறிச்சி என்னும் ஊரில் வாழ்ந்த ஒப்பிலாமணி, சேது அம்மாள் ஆகியோரின் அருமைப் புதல்வராக 08.01.1961 இல் பிறந்தவர். ஐந்தாம் வகுப்பு வரை இரும்புலிக்குறிச்சியிலும், ஆறு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை அன்னமங்கலம் சிறுமலர் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். புகுமுக வகுப்பை அரியலூர் அரசு கல்லூரியில் பயின்றவர். தம் இளங்கலை, முதுகலை, இளம் முனைவர், முனைவர் பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றவர்.

இந்திய அரசின் அறிவொளிக் கல்வி இயக்கத்திற்காகக் கடலூரில் ஈராண்டு பணிபுரிந்த இவர், தனியார் கல்லூரிகளிலும், அரசு கல்லூரிகளிலும் சிலவாண்டுகள் பணிபுரிந்த பிறகு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் இணைந்து, தற்பொழுது சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறையில் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் விளங்குகின்றார். இவர்தம் பணிகளையும், தமிழுலகப் பங்களிப்பையும் நிரல்படுத்தி அறிஞருலகத்தின் பார்வைக்கு வைக்கின்றேன்.

ஒப்பிலா. மதிவாணன் கல்வி குறித்த விவரம்:

புகுமுக வகுப்பு               :      சென்னைப் பல்கலைக்கழகம்
இளங்கலை (தமிழ்)     1981      :              அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
முதுகலை (தமிழ்)       1983     :              அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
முதுகலை (மொழியியல்)2011     :              அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
ஆய்வியல் நிறைஞர்    1985      :              அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
கல்வியியல்            1997      :              அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
முனைவர் பட்டம்       1992      :              அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
மொழியியல் பட்டயம்  1984      :              அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
நாட்டுப்புறவியல்(சான்றிதழ்)1988             அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
இதழியல் சான்றிதழ் படிப்பு 1989 :    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்


பெற்ற விருதுகள்

இளங்கலையில் முதல் மதிப்பெண் பெற்றமைக்காகவும், முதுகலையில் முதல் மதிப்பெண் பெற்றமைக்காகவும் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் மணிவிழா விருது பெற்றவர் ( 1983).

கண்ணியச் செம்மல் விருது, 2011 இல் பெற்றவர்.


2. ஆராய்ச்சிப் பணி

1.   1983 – 1984ஆம் ஆண்டுகளில் ஆய்வில் நிறைஞர் (முழுநேரம்), தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (தமிழக அரசின் தமிழ்ப்பணி, 1977 முதல் 1983)
2.   1985 – 1991ஆம் ஆண்டுகளில் முனைவர் பட்ட ஆய்வாளர் (முழுநேரம்), தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்லைக்கழகம் (அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தமிழும் தமிழரும்)
3.    19 மார்ச் 1997 முதல் 21 மார்ச் 1998 வரை ஆராய்ச்சி உதவியாளர் பணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.


3.  நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்பு

1. இயக்குநர், பதிப்புத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (11.01.2010 – 03.01.2012)
2. இயக்குநர், பதிப்புத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (01.06.2015 முதல்..)
3. ஒருங்கிணைப்பாளர், சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் (26.06.2012 முதல் ஜீன் 2014)
4. ஒருங்கிணைப்பாளர், நேர்முகத் தொடா் வகுப்புகள் (தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், அராபிக், உருது, இந்தி), தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம் (ஏப்ரல் 2008 – ஏப்ரல் 2009)
5. ஒருங்கிணைப்பாளர், நேர்முகத் தொடா் வகுப்புகள் (இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பி.ஏ., பி.லிட்., மற்றும் எம்.ஏ., தமிழ்ப்பிரிவு), புறநகர் மையங்கள் (தொலைநிலைக் கல்வி நிறுவனம்), சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை (2010 – 2011).
6. உறுப்பினர், பயணநிதிநல்கை மற்றும் பதிப்புக்குழு, சென்னைப் பல்லைக்கழகம், சென்னை.
7. உறுப்பினர், ஆசிரியர் குழு, பல்கலைக்கழகச் செய்தி மடல், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை (2010 – 2011)
8. உறுப்பினர், பதிப்பக அச்சகங்களைத் தெரிவுசெய்யும் ஆய்வுக்குழு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
9. உறுப்பினர், புத்தகம் மற்றும் ஆவணக் காப்புப் பகுதி ஆய்வுக்குழு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
10. முதன்மைக் கண்காணிப்பாளர், தொலைநிலைக் கல்வி நிறுவன ஆய்வியல் நிறைஞர் பட்டத் தோ்வுகள், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை (2007 முதல் 2009).
11. துணை முதன்மைக் கண்காணிப்பாளர், தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் தேர்வுகள், கொல்கத்தா மையம் (20.05.2011 – 31.05. 2011)
12. சென்னைப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி நிறுவத்தின் வாயிலாகத் தமிழ்ச் சான்றிதழ் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு   நடத்தியமை (2008 – 2012).


4.  கருத்தரங்க ஒருங்கிணைப்பு

1. ஒருங்கிணைப்பாளர், சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர்களுக்கான சிறப்புப் புத்தாக்கப் பயிற்சி (18 நவம்பர் 2009 – 05 டிசம்பர் 2009)
2. அமைப்புச் செயலாளர், தமிழியல் பரிமாணங்கள் - பன்னாட்டுக் கருத்தரங்கம், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம் (23 – 24 மார்ச் 2013)
3. ஒருங்கிணைப்பாளர், தமிழ் வரிவடிவ நிலையில் சொற்சேர்ப்புக் கோட்பாடு விதிமுறை உருவாக்கம், பன்னாட்டுக் கருத்தரங்கம், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம் (07 – 08 டிசம்பர் 2013).
4. ஒருங்கிணைப்பாளர், தமிழ் இணையம் பயிலரங்கம், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம் (22 டிசம்பர் 2013)
5. ஒருங்கிணைப்பாளர், கவிதை உலகினில் நல்லிணக்கம் - பன்னாட்டுக் கருத்தரங்கம், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம், மலாயாப் பல்கலைக்கழகம், மலேசியா மற்றும் கலைஞன் பதிப்பகம் சென்னை (11 ஜுன் 2014).

5.  அ) இவர்தம் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றவா்கள்

1. முனைவர் நீலா செல்வராஜ், 2007, பெரியபுராணத்தில் வாழ்வியல் சிந்தனைகள்.
2. முனைவர் கோ. ஜெயந்தி, 2008, சங்க இலக்கியத்தில் அரச புலவர்கள்.
3. முனைவர் ப.சு. மூவேந்தன், 2010, பொற்கோவின் திருக்குறள் உரைத்திறன்.
4. முனைவர் க. சுந்தரராஜன், 2011, ஊரன் அடிகளாரின் ஒப்பியல் நோக்கு.
5. முனைவர் ப.வெ. வெங்கடேசன், 2011, கல்வெட்டுகள் - ஓா் ஆய்வு
6. முனைவர் க. அனுராதா, 2012, ஐம்பெருங்காப்பியங்களில் திருமண முறைகள்.
7. முனைவர் வ. கீதப்ரியா, 2012, சங்க இலக்கியத்தில் உயிர் நேயம்.
8. முனைவர் ம. தாமஸ், 2012, விவிலியக் கண்ணோட்டத்தில் தமிழகச் சித்தர்கள்.
9. முனைவர் மு. வெண்ணிலா, 2012, இலங்கைப் பரணி பதிப்பாய்வு.
10. முனைவர் அ. நசீமா, 2013, திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக்கதைகள் ஓர் ஆய்வு
11. முனைவர் கோ. விஜயராணி, 2015,  தமிழ்மொழி மிகுபுழக்கமில்லாத குடும்பத்து மாணவா்கள் எதிா்நோக்கும் சிக்கல்களும் தீா்வுகளும்
12. முனைவர் சி. சுப்புலெட்சுமி, 2015, தமிழ் எழுத்துக்களின் அறிமுகம் சிக்கல்களும் தீா்வுகளும்

 ஆ) இவர்தம்  மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆய்வேடு
      பணித்துள்ளவா்கள்

13. சா.வீரராகவன், 2014, தமிழ்த் திரைப்படங்களில் இயக்குநா் வி.சேகா்
      – ஒரு வரலாற்று நோக்கு
14. மு.பானுகோபன், 2014, கண்ணதாசன் திரையிசைப் பாடல்களில்  
      சமுதாயச் சிந்தனைகள்
15. விஜயாள், 2015, இக்காலக் கவிதைகளில் பெண்மொழி
16. தமிழரசி சுப்பிரமணியம், 2015, மாணவா்களின் படித்துணா்திறன்
     சிக்கல்களும் தீா்வுகளும்

 7.   துணைவேந்தரின் நியமன உறுப்பினா்

1.உறுப்பினர், பணியிடம் நிரப்புதல், காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கீழம்பி, காஞ்சிபுரம் மாவட்டம்.
2.உறுப்பினர், பணியிடம் நிரப்புதல், நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கண்ணடபாளையம், சென்னை – 600062.
3.உறுப்பினர், பணியிடம் நிரப்புதல், ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஏனத்தூர், காஞ்சிபுரம் – 631561.
4.உறுப்பினர், பணியிடம் நிரப்புதல், சர் தியாகராயா கல்லூரி, கோட்டூர்புரம், சென்னை – 600021.
5.உறுப்பினர், பணியிடம் நிரப்புதல், எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காட்டாங்குளத்தூர், சென்னை.
6.உறுப்பினர், பணியிடம் நிரப்புதல், எஸ்.எஸ்.எஸ். ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தி.நகர், சென்னை.
7.உறுப்பினா், பணியிடம் நிரப்புதல், நியு பிரின்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேடவாக்கம், சென்னை.
8.உறுப்பினர், பணியிடம் நிரப்புதல், பச்சையப்பன் அறக்கட்டளை சார் கல்லூரிகள், சென்னை.
9.தலைவா், ஆய்வுக்குழு, புதிய படிப்பு மையம், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம், அப்பலோ கணினிக் கல்வி நிறுவனம், தி. நகர், சென்னை – 600017.
10.தலைவா், ஆய்வுக்குழு, புதிய படிப்பு மையம், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைகக்ழகம், ஸ்ரீ சாய் பாலாஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் – 624001.
11.உறுப்பினர், ஆய்வுக்குழு, புதிய படிப்பு மையம், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம், குளோபல் நிறுவனம், ஓசூர் – 635109.
12.உறுப்பினர், ஆய்வுக்குழு, புதிய படிப்பு மையம், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம், பி.எம். சங்கம், பெங்களூரு – 560042.
13.உறுப்பினர், ஆய்வுக்குழு, புதிய படிப்பு மையம், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம், டைமன்ட் டாட் அகாதெமி, பெங்களூரு – 560071.
14.உறுப்பினர், ஆய்வுக்குழு, புதிய படிப்பு மையம், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம், குளோரிக் குளோபல் தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம், ஓசூர் – 560021.
15. உறுப்பினர், ஆய்வுக்குழு, புதிய படிப்பு மையம், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம், ஏஐஎம்எஸ் அகாதெமி, பூந்தமல்லி, சென்னை – 600056.
16. உறுப்பினர், ஆய்வுக்குழு, புதிய படிப்பு மையம், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம், பாரத் முதுகலை கல்லூரி, மைலாப்பூர், சென்னை – 600004.
17. உறுப்பினர், ஆய்வுக்குழு, புதிய படிப்பு மையம், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம், கேலக்ஸி மேலாண்மை நிறுவனம், ஆர்.ஏ. புரம், சென்னை – 600002.
18. உறுப்பினர், ஆய்வுக்குழு, புதிய படிப்பு மையம், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம், எஸ்.பி.இ. டிரஸ்ட், மைலாப்பூர், சென்னை – 600004.
19. தலைவா், ஆய்வுக்குழு, புதிய படிப்பு மையம், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம், ராஜுவ் காந்தி நினைவு தொலைத்தொடர்பு பயிற்சி மையம், மீனம்பாக்கம், சென்னை – 600027 (27.07.2012).
20. தலைவா், ஆய்வுக்குழு, புதிய படிப்பு மையம், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம், பிராந்திய தொலைத்தொடர்பு பயிற்சி மையம், மறைமலைநகர், சென்னை – 603209 (27.07.2012).
21. தலைவா், ஆய்வுக்குழு, புதிய படிப்பு மையம், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம், கொல்கத்தா.
22. தலைவா், ஆய்வுக்குழு, புதிய படிப்பு மையம், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம், கொச்சின் (07.08.2012 – 08.08.2012).

8.   வல்லுநா் – பாடத்திட்டக்குழு

1. தமிழ்த்துறை, மீனாட்சி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சென்னை – 24.
2. தமிழ்த்துறை, பாரதிதாசன் அரசு கல்லூரி (மகளிர்), புதுச்சேரி – 605003.
3. தமிழ்த்துறை, இஸ்லாமியாக் கல்லூரி, வாணியம்பாடி, வேலூர்.
4. தமிழ்த்துறை, தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை – 600005.

9.  உறுப்பினா் - பிற பல்கலைக்கழகத் தேர்வுக்குழு

1.            அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.
2.            பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
3.            திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர்.
4.            புதுவைப் பல்கலைக்கழகம் (நடுவணரசு), புதுச்சேரி.
5.            திருவேங்கடவன் பல்கலைக்கழகம், திருப்பதி, ஆந்திரா

10.  உறுப்பினா் சமூக அமைப்புகள்

1. வாழ்நாள் உறுப்பினர் இந்திய பல்கலைக்கழக தமிழ் ஆசிரியர் மன்றம்
2.வாழ்நாள் உறுப்பினர் அனைத்திந்திய தமிழ் இலக்கிய அமைப்பு, தஞ்சை
3.வாழ்நாள் உறுப்பினர் இந்திய தொலைநிலைக் கல்வி அமைப்பு, வாரங்கல், ஆந்திரா
4. வாழ்வியல் உறுப்பினர் நோக்கு (பன்னாட்டு இதழ்), சென்னை

11. அழைப்பின் பேரில் விரிவுரை

1.வளமைப் பேச்சாளர், ஒப்பிலக்கியம், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, 24.07.2006.
2. வளமைப் பேச்சாளர், வகுப்பறை மேலாண்மை, தமிழ் மொழி ஆசிரியர்கள் (சிங்கப்பூர்), 03.09.2008.
3. அமா்வுத் தலைமை, நவீனக் கவிஞர்கள் கருத்தரங்கம், எஸ்.ஐ.வி.இ.டி. கல்லுரி, சென்னை – 600073.
4.வளமைப் பேச்சாளர், (குறிஞ்சிப்பாட்டில் அகத்திணை மரபுகள்), தமிழ்த்துறை, ஊரிஸ் கல்லூரி, வேலூர் (20.03.2009).
5.வளமைப் பேச்சாளர், (புறநானூற்றில் விழுமியங்கள்) சங்க இலக்கிய பயிற்சிப்பட்டறை மற்றும் பயிலரங்கு, தமிழ்த்துறை, ஸ்ரீவெங்கடேசுவரா பல்கலைக்கழகம், திருப்பதி, ஆந்திர மாநிலம். (06.04.2009).
6.வளமைப் பேச்சாளர், (அழகியல் கோட்பாடுகள்) சங்க இலக்கிய பயிற்சிப்பட்டறை மற்றும் பயிலரங்கு, தமிழ்த்துறை, மன்னர் கல்லூரி, திருவையாறு (18.03.2011).
7.அமா்வுத் தலைமை, காமராசர் அறக்கட்டளைச் சொற்பொழிவு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை (25.03.2011).
8.அமா்வுத் தலைமை, தமிழ் இலக்கியத்தில் வளங்கள் (தேசியக் கருத்தரங்கம்), இமையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வாணியம்பாடி (06.01.2012).
9.அமா்வுத் தலைமை, தொண்டை நாட்டுச் சான்றோர் (தேசியக் கருத்தரங்கம்), தமிழ்த்துறை, இஸ்லாமியா கல்லூரி, வேலூர் (2012).
10. அமா்வுத் தலைமை, சிற்பியின் படைப்புத் திறன் (தேசியக் கருத்தரங்கம்), தமிழ்த்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி (28.03.2012).
11.வளமைப் பேச்சாளர், (இலக்கியக் கல்வி கற்பித்தல்) பாரம்பரியக் கல்வி முறை குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம், தமிழ்த்துறை, ஸ்ரீஇலட்சுமி கல்வியியல் கல்லூரி, ஜெயங்கொண்டம் (05 – 07 பிப்ரவரி 2015).
12.வளமைப் பேச்சாளர், (திருக்குறள் வீ. முனுசாமி உரைத்திறன்) திருக்குறள் உரை வளர்ச்சி பயிற்சிப்பட்டறை மற்றும் பயிலரங்கு, தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர் (14.02.2014).
13.வளமைப் பேச்சாளர், (மணிமேகலை: அடிக்கருத்து மற்றும் காட்சிப்படுத்தம்) செவ்வியல் இலக்கியங்களில் அடிக்கருத்தும் காட்சிப்படுத்தமும் பயிற்சிப்பட்டறை மற்றும் பயிலரங்கு, தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் (பிப்ரவரி 2015).

12. அயல்நாட்டு மதியுரைஞா்

அயல்நாட்டு மதியுரைஞர் 2010 முதல் 2014 வரை, தமிழ்ப் பாடத்திட்ட வரைவுக்குழு, கல்வி அமைச்சு, சிங்கப்பூர்

13. அயல்நாட்டுக் கல்விப்பயணம்
1.தேவநேயப்பாவாணரின் பன்னாட்டுக் கருத்தங்கு, கோலாலம்புர், (27 மே 2002)
2. தமிழ் மொழிக் கருத்தரங்கம், கல்வி அமைச்சு மற்றும் நன்யாங் கல்விக் கழகம், சிங்கப்பூர் (03 செப்டம்பா் 2008)
3. தமிழ் மொழிப் பாடத்திட்ட வரைவுக்குழுப் பயிலரங்கம், கல்வி அமைச்சு, சிங்கப்பூர் (17-18 நவம்பா் 2008)
4. தமிழ்மொழிப் பாடத்திட்ட வரைவுக்குழுப் பயிலரங்கம், கல்வி அமைச்சு, சிங்கப்பூர் (13 – 15 நவம்பர் 2010).
5. தமிழ் மொழிப் பாடத்திட்ட வரைவுக்குழுப் பயிலரங்கம், கல்வி அமைச்சு, சிங்கப்பூர் (24 – 26 நவம்பர் 2010).
6. தமிழ் மொழிப் பாடத்திட்ட வரைவுக்குழுப் பயிலரங்கம், கல்வி அமைச்சு, சிங்கப்பூர் (19 – 21 ஜுலை 2011).
7. தமிழ் மொழிப் பாடத்திட்ட வரைவுக்குழுப் பயிலரங்கம், கல்வி அமைச்சு, சிங்கப்பூர் (17 – 19 ஜுலை 2012).
8. தமிழ் மொழிப் பாடத்திட்ட வரைவுக்குழுப் பயிலரங்கம், கல்வி அமைச்சு, சிங்கப்பூர் (17 – 19 ஜுலை 2013).
9. ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, கோலாலம்புர், (29 சனவரி முதல் 02 பிப்ரவரி, 2015)

14. கலந்துகொண்ட புத்தொளி மற்றும் புத்தாக்கப் பயிற்சிகள்

1. சென்னைப் பல்கலைக்கழகக் கல்விப் பணியாளா் கல்லூரி நடத்திய புத்தாக்கப் பயிற்சி (03.07.2001 – 30.07.2001).
2.சென்னைப் பல்கலைக்கழகக் கல்விப் பணியாளா் கல்லூரி நடத்திய பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் நடத்தப்பட்ட புத்தொளிப் பயிற்சி (29.11.2005 – 19.12.2005)
3.சென்னைப் பல்கலைக்கழகக் கல்விப் பணியாளா் கல்லூரி நடத்திய புத்தொளிப் பயிற்சி (13.11.2007 – 03.12.2007).
4. சென்னைப் பல்கலைக்கழகக் கல்விப் பணியாளா் கல்லூரி அலுவலா் மற்றும் மாணவ குறைதீா்ப்பு மற்றும் ஆா்வமூட்டல்என்னும் பொருண்மையில் நடத்திய குறும் பயிற்சி (18.02.2013 – 23.02.2013)

15. வெளியீடுகள்






அ) புத்தகம்
1. அரசும் தமிழும் (1986, மதுரை தழுக்கம் மைதானத்தில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் சங்கத் தொடக்கவிழாவில் தமிழ்நாடு முதலமைச்சா் டாக்டா் எம்.ஜி.ஆர். அவா்களால் வெளியிடப்பட்டது)
2.    கலை அறிவியல் கலைச்சொல்லாக்கம்          1995
3.    பன்னோக்குத் தமிழாய்வு                       1997
4.   அந்தமான் தமிழும் தமிழரும்                    2000
5. சமூகமும் சமுதாயமும்                         2000
6.   பயன்பாட்டுத் தமிழ்                            2007

ஆ) பாட புத்தகங்கள் (சென்னைப் பல்கலைக்கழகத்
      தொலைநிலைக் கல்வி நிறுவனம்)
1.            III பி.ஏ., தமிழ்       2002                            சங்கம் - நற்றிணை    
                                                            2002                                    சங்கம் - அகநானூறு   
2.            IIபி.ஏ., - பி.லிட்.,               2005                                    இலக்கணம் தண்டி
3.            II பி.ஏ., - பி.லிட்     2005              தமிழக வரலாறும்பண்பாடும் (11 – 20)
4.            அடிப்படைத் தமிழ்   2005                      மொழித்தாள் (பாடம்        16 – 18)
5.            II எம்.ஏ., தமிழ்          2006                                    சங்க இலக்கியம் 
6.       II பி.ஏ., தமிழ்      2006         சமயப் பாடல்கள்,  சிற்றிலக்கியம், காப்பியம்
7.            III பி.லிட்., தமிழ்         2007                                    இதழியல்
8.            III பி.ஏ., தமிழ்           2007                                    சங்க இலக்கியம்
9.            III பி.ஏ., - பி.லிட்.,       2007     இதழியில் மற்றும் மொழிபெயர்ப்பியல்
10.         III பி.ஏ., - பி.லிட்.,       2007    திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
11.         I எம்.ஏ., தமிழ்        2007                                    இலக்கியக் கொள்கைகள்
12.         I எம்.ஏ., தமிழ்           2008                                    பெரியாரியல்

இ) கட்டுரைகள் (தின இதழ்)
தினமணி
1.            துணைவேந்தர் நியமனம்: சிக்கல்கள் தீர்வுகள்          08.08.1997
2.            விரிசல் ஏற்பட்டால் விபரீதம்                   09.12.1997
3.            தேர்தல் புறக்கணிப்பு தீர்வாகுமா?                                                      13.01.1998
4.            இனியொரு விதி செய்வோம்                    11.03.1998
5.            சட்டமேதைகளின் எச்சரிக்கை                   26.01.2002
6.            21-ம் நூற்றாண்டில் சென்னைப் பல்கலை.              05.09.2006
7.            பல்கலைப் பொதுச்சட்டத்தில் மாற்றம் தேவை         18.04.2007
8.            துணைவேந்தரைத் தெரிவு செய்யஞ்.            12.12.2012
9.            தேவை தேசிய வளர்ச்சியில் பொதுநோக்கு             04.02.2013
10.         தோ்தல் அறிக்கை என்னும் வாக்குறுதி ஆவணம் 07.03.2016
              
தமிழோசை
1.            நீர்வளப் பாதுகாப்பு விழிப்புணர்வு                      23.12.2007
2.            வகுப்பறை மேலாண்மையும் திறன் மேம்பாடும்        23.09.2008


ஈ) ஆய்வுக் கட்டுரைகள்

1.            புதுக்கவிதையில் விடுகதைகள்
2.            சமூகமும் சமுதாயமும்
3.            அந்தமான் - நிக்கோபார் வரலாறு
4.            சங்ககாலச் சமுதாய அரசியல்
5.            ஆட்சிச் சொல் உருவாக்கமும் பயன்பாடும்
6.            அந்தமானில் இதழியல் வளர்ச்சி
7.            கலைச்சொல் உருவாக்கமும் பயன்பாடும்
8.            கலைச்சொற்கள் : மொழி பெயர்ப்பும் மொழியாக்கமும்
9.            மருத்துவக் கல்வி : பாடமாக்கமும் அமைப்பியலும்
10.         இலக்கியம்: வெளிநாட்டு உறவுகள்
11.         இந்திய தேசிய இயக்கமும் தமிழ்ச் சிறுகதைகளும்
12.         பாரதியார் கவிதைகள்: முரண்பாடுகளும் அமைதியும்.
13.         பாவாணர்: மொழிக் கொள்கைகள்
14.         திருஞானசம்பந்தர்: யாப்பியல் நோக்கு
15.         ஆட்சித் தமிழ்ச் சொற்கள்: ஒரு திறனாய்வு
16.         தொல்காப்பியத்தில் பக்தி நெறி
17.         திரு. வி.க. கிறித்துவ நேயம்
18.         செவ்வியல் தமிழ்: ஆளுமைப் பண்புகள்
19.         ஒப்பியல் ஆய்வில் தமிழறிஞர்கள்
20.         உயர்கல்வியில் தமிழ்ப் பாடமாக்கம்: மறு சீரமைப்பு
21.         வள்ளுவம் போற்றும் பெண்ணியம்
22.         இந்திய ஐரோப்பியக் காப்பியங்களில் பாவிகம்
23.         குறிஞ்சிப்பாட்டில் அகத்திணை மரபுகள்
24.         புறநானூற்றில் விழுமியங்கள்
25.         வகுப்பறை மேலாண்மையும் திறன் மேம்பாடும்
26.         சிற்றிதழ்க் கவிதைகளின் உள்ளடக்கமும் உருவமும்
27.         Quality governance in open and Distance Education..
28.         சங்க இலக்கியத்தில் அழகியல்
29.         தமிழ் மணம் பரப்பிய தகைமையர்
30.         அச்சுப்பனுவலில் இடைவெளி பெறுமிடம்
31.         மணிமேலை: அடிக்கருத்தும் காட்சிப்படுத்தமும்
32.         இலக்கியக் கல்வி கற்பித்தல்
33.         திருக்குறள் வீ. முனுசாமி உரைத்திறன்

16.         மாநாடுகள் / கருத்தரங்குகள்

அ) பன்னாட்டுக் கருத்தரங்கம்

1. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற திராவிட மொழியியல் பன்னாட்டுக் கருத்தரங்கம் (17 – 21 ஜுன் 1997).
2. சென்னைப் பல்கலைக்கழக மொழித்துறையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு, ‘அலுவலகப் பயன்பாட்டுச் சொல்லகராதி ஓர் திறனாய்வுஎன்ற தலைப்பில் கட்டுரை வழங்கப்பட்டது (21 – 23 மார்ச் 2005)
3.அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு, ‘உயர்கல்வியில் தமிழ்ப்பாடமாக்கம்: மறுசீரமைப்புஎன்ற தலைப்பில் கட்டுரை வழங்கப்பட்டது (23 – 24 பிப்ரவரி 2007).
4. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு, ‘வள்ளுவம் போற்றிய பெண்ணியம்என்ற தலைப்பில் கட்டுரை வழங்கப்பட்டது (08 – 10 மார்ச் 2007).
5.அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு, ‘சிற்றிதழ் கவிதைகளில் உள்ளடக்கமும் உருவமும்என்ற தலைப்பில் கட்டுரை வழங்கப்பட்டது (15 – 16 பிப்ரவரி 2008).
6.  அகில இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராசர் பல்கலைக்கழத்தில் நடத்திய 44ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு, ‘தமிழ்மணம் பரப்பிய தகைமையர்என்ற தலைப்பில் கட்டுரை வழங்கப்பட்டது (18 – 19 மே 2013).

இ) தேசியக் கருத்தரங்கம்

1.அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் கலந்துகொண்டு, ‘இந்திய மொழிகளில் பக்தி இலக்கியத்தின் வளர்ச்சியும் பெருக்கமும்என்ற தலைப்பில் கட்டுரை வழங்கப்பட்டது (1984).
2.அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் கலந்துகொண்டு, ‘இந்திய இலக்கியங்களில் நாட்டுப்பற்றுஎன்ற தலைப்பில் கட்டுரை வழங்கப்பட்டது (1986).
3. அனைத்திந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், ஈரோடு (1986)
4. அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தேசியக் கருத்தரங்கம், ‘திருக்குறள் ஒரு சமயச்சார்பற்ற இலக்கியம்’ (1988).
5.அனைத்திந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் சார்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் பங்கேற்றமை (2 – 3 ஜுன் 1989).
6.அனைத்திந்திய இலக்கியப் பேரவையின் தேசியக் கருத்தரங்கில் பங்கேற்றமை, தஞ்சாவூர் (17 – 18 ஜுன் 1989).
7. அனைத்திந்திய அறிவியல் தமிழ் பேரவையின் தேசியக் கருத்தரங்கில் பங்கேற்றமை, தஞ்சாவூர் (07 – 08 அக்டோபர் 1989).
8. அனைத்திந்திய அறிவியல் தமிழ் பேரவையின் தேசியக் கருத்தரங்கில் பங்கேற்றமை, அண்ணாப் பல்கலைக்கழகம், சென்னை (1993).
9.தொல்காப்பியம் தேசியக் கருத்தரங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 600113 (25 – 26 மார்ச் 1998).
10.சங்க இலக்கியம், தேசியக் கருத்தரங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 600113 (28 மார்ச் 1998).
11.தொல்காப்பியம் தேசியக் கருத்தரங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 600113 (25 – 26 மார்ச் 1998).
12.திருஞான சம்பந்தர் இலக்கியம், தேசியக் கருத்தரங்கம், வாரணாசி (30.09.2002 – 02.10.2002).
13.இந்திய தொலைநிலைக் கல்வி அமைப்பின் 10ஆவது தேசியக் கருத்தரங்கம், கர்நாடகா திறந்தநிலை பல்கலைக்கழகம், மைசூர் (26 – 28 பிப்ரவரி 2003)
14.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் பயிலரங்கு, தொலைநிலைக் கல்வி முறையின் மதிப்பீடு: தேவை வளர்ச்சி (17 – 18 ஜனவரி 2005).
15.சென்னைப் பல்கலைக்கழக சட்டவியல் துறையில் நடைபெற்ற அறிவுசாா் சொத்துரிமை குறித்த கருத்தரங்கம், (08 மார்ச் 2005)
16.தேசியக் கருத்தரங்கம், தமிழ் கற்பித்தலில் பக்தி, சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமம், ரிஷிகேஸ் (05 – 07 மே 2005).
17.அண்ணாமலைப் பல்லைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்ககம் நடத்திய தேசியக் கருத்தரங்கம், 20ஆம் நூற்றாண்டு பக்தி இலக்கியம் (27 – 28 பிப்ரவரி 2006).
18.அண்ணாமலைப் பல்லைக்கழகத் தமிழியல் துறையில் நடைபெற்ற நவீன இலக்கியம் தேசியக் கருத்தரங்கம் (29 – 30 மார்ச் 2006).
19.அண்ணாமலைப் பல்லைக்கழகத் தமிழியல் துறையில் நடைபெற்ற நவீன இலக்கியத் தேசியக் கருத்தரங்கம் (29 – 30 மார்ச் 2006).
20.அண்ணாமலைப் பல்லைக்கழகத் தமிழியல் துறையில் நடைபெற்ற காப்பியங்கள் தேசியக் கருத்தரங்கம் (28 – 29 மார்ச் 2007).
21.அண்ணாமலைப் பல்லைக்கழகத் தமிழியல் துறையில் நடைபெற்ற நவீன இலக்கியம் தேசியக் கருத்தரங்கம் (2008).
22.அகில இந்திய தொலைநிலைக் கல்வி அமைப்பு நடத்திய தேசியக் கருத்தரங்கம், காஷ்மீர் (05 – 07 நவம்வர் 2009).
23.திருவையாறு மன்னர் கல்லூரியும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்திய பயிலரங்கு, ‘முருகியல் நோக்கில் செவ்வியல் இலக்கியங்கள்என்ற தலைப்பில் கட்டுரை வழங்கப்பட்டது (17 – 26 மார்ச் 2011).
24. வாணியம்பாடி இமையம் கலை அறிவியல் கல்லூரியும் செம்மூதாய்ப் பதிப்பகமும் இணைந்து நடத்திய தேசியக் கருத்தரங்கம், ‘தமிழிலக்கியக் கருத்துவளம்என்ற தலைப்பில் கட்டுரை வழங்கப்பட்டது (06 ஜனவரி 2012).
25. வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி தமிழ்த்துறை நடத்திய தேசியக் கருத்தரங்கம், ‘தொண்டை நாட்டுச் சான்றோர்கள்என்ற தலைப்பில் கட்டுரை வழங்கப்பட்டது (27 பிப்ரவரி 2012).
26. சென்னைப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி ஆங்கிலத் துறை முறைசாரா கல்வி முறையில் கற்றல் கற்பித்தல் என்னும் பொருண்மையில் நடத்திய பயிலரங்கம், (12 ஜீலை, 2012)
27.ஸ்ரீவெங்கடேசுவரா பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, திருப்பதி மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்திய தமிழ் தெலுங்கு செம்மொழி இலக்கியங்கள்தேசிய அளவிலான பயிலரங்கம் (15 – 17 நவம்பர் 2012) 


1 கருத்து:

Unknown சொன்னது…

மகிழ்ச்சி தொடர்ந்து இயங்குங்கள்