நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

இருபெருந் துணைவேந்தர்களுடன் சந்திப்பு…



துணைவேந்தர்களுடன் தமிழறிஞர்கள்

பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கி.முத்துச்செழியன் அவர்களிடம் நூல் வழங்கல். அருகில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சந்திரகாந்தா ஜெயபாலன் அவர்கள்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இன்று(16.04.2013) கணினித் தமிழ் பாடத்திட்டம் குறித்த சிறப்புக் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழகத்தின் மூத்த பேராசிரியர்களுடன் இணைந்து பாடத்திட்டம் வடிவமைக்கும் வாய்ப்பு அமைந்தது.

அதுபொழுது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மாண்புநிறை துணைவேந்தர் முனைவர் சந்திரகாந்தா ஜெயபாலன் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெறும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அப்பொழுது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் முனைவர் கி. முத்துச்செழியன் அவர்களும் வருகை தந்தார்கள். தமிழ் அறிஞர் பெருமக்களுடன் இணைந்து நினைவுக்குப் படம் எடுத்துக்கொண்டோம்.

யான் எழுதிய இணையம் கற்போம் நூலினைத் துணைவேந்தர் பெருமக்களிடம் கொடுத்து வாழ்த்துப்பெற்றேன். தமிழ் இணையத்தைத் தத்தம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆர்வம் அவர்களிடம் இருந்தமை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். எதிர்காலத்தில் தமிழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் இணையம் மிகச்சிறந்த வளர்ச்சியடைய உள்ளதை இச்சந்திப்பு எனக்கு உணர்த்தியது.

இந்த நிகழ்ச்சியில் முனைவர் கி.முருகன், முனைவர் சு.பாலசுப்பிரமணியன், கணினி வல்லுநர் முத்து.நெடுமாறன், பேராசிரியர் சி.இ.மறைமலை, முனைவர் கரு.அழ. குணசேகரன், முனைவர் அ.அறிவுநம்பி, முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன், முனைவர் ந.தெய்வசுந்தரம்,முனைவர் பிலவேந்திரன், முனைவர் இராச.பவுன்துரை, முனைவர் முத்தையா, முனைவர் பிச்சை, முனைவர் துளசி.இராமசாமி உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டனர்.


துணைவேந்தர் முனைவர் சந்திரகாந்தா ஜெயபாலன் அவர்களிடம் இணையம் கற்போம் நூல் வழங்கும் மு.இளங்கோவன்

இணையம் கற்போம் நூலின் சிறப்பைத் துணைவேந்தருக்கு விளக்குதல்(மு.இ, பேராசிரியர் கரு.அழ.குணசேகரன்)

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தொகுத்து வழங்கியமைக்கு நன்றி ஐயா...