தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்
கணினித்தமிழ், நாட்டுப்புறவியல் குறித்த பட்டயச்சான்று(Diploma) படிப்புகள் தொடங்கப்பட
உள்ளன. பாடத்திட்டம் குறித்த கலந்துரையாடலும் துறைசார் வல்லுநர்களின் கருத்துரைகளும்
இடம்பெற உள்ளன.
முரசு அஞ்சல், செல்லினம் ஆகிய மென்பொருள்களை
வழங்கியவரும் தமிழ் இணைய முன்னோடிகளுள் ஒருவருமான முரசு முத்தெழிலன் (மலேசியா) அவர்கள்
கலந்துகொண்டு “கணினி அலைபேசியில் தமிழ்ப் பயன்பாடு - இன்றைய நிலை” என்னும் தலைப்பில்
சிறப்புரை வழங்க உள்ளார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர்
முனைவர் சந்திரகாந்தா ஜெயபாலன் அவர்கள் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
பேராசிரியர் கி.முருகன், முனைவர் சு.விஜயன்,
முனைவர் சு.பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
நாள்:
17.04.2013 நேரம்: பிற்பகல் 2.30 மணி
இடம்:
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக