நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற புதுவைப் பல்கலைக்கழக ஆய்வாளர் இரா. வீரமணிக்குத் தங்கப்பதக்கம், த.பி.சொ. அரிராம் சேட்டு நினைவுச் சுழற் கோப்பை முதலியவற்றை வழங்கி மகிழ்ந்தேன்.
அதுபோல் இரண்டாம் பரிசு பெற்ற திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி மாணவர் கோ. அருண்குமாருக்கு நூல் பரிசு வழங்கி, வாழ்த்தினேன்.
பேச்சுப்போட்டியில் வாகை சூடிய சட்டக்கல்லூரி மாணவர் அபிகேசுக்கு வெற்றிக்கோப்பை, சான்றிதழ் வழங்கி, வாழ்த்தினேன். அருகில் பேராசிரியர் பா. வளன் அரசு உள்ளிட்ட தமிழறிஞர்கள். இடம்: மாநிலத் தமிழ்ச் சங்கம், பாளையங்கோட்டை, நாள்: 07/02/2026.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக