நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 15 ஜனவரி, 2013

புதுவைப் பேச்சாளர் கலக்கல் காங்கேயன் அவர்கள்



கலக்கல் காங்கேயன் அவர்கள்

புதுவையின் புகழ்பெற்ற பேச்சாளர்களுள் கலக்கல் காங்கேயன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். இவரின் பிறந்த ஊர் புதுவை மாநிலம் சேதராப்பட்டு ஆகும். பெற்றோர் திருவாளர்கள் கு.லிங்கசாமி, லி.அஞ்சலை அம்மாள். 02.10.1967 இல் பிறந்த காங்கேயன் அவர்கள் புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் முதுகலை பொருளாதாரம் பயின்றவர். புதுவை அரசின் தொழிலாளர்துறையில் புள்ளி விவர ஆய்வாராகப் பணியாற்றி வருகின்றார். பட்டிமன்ற நடுவர், பாட்டுமன்ற நடுவர், இசைச் சொற்பொழிவாளர், எழுத்தாளர், செயற்குழு உறுப்பினர் (புதுவை வாசகர் வட்டம்),             பொதுக்குழு உறுப்பினர் (புதுவைத் தமிழ்சங்கம்) என்று பலநிலைகளில் செயல்படுபவர்.

கலைஞர்    தொலைக்காட்சி,          சன் தொலைக்காட்சி, ராஜ் தொலைக் காட்சி, பொதிகை தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, மெகா தொலைக் காட்சி, பாலிமர் தொலைக்காட்சிகளில் புகழ்பெற்ற பேச்சாளர்களின் தலைமையில் பேசிய பெருமைக்குரியவர். பல தொலைக்காட்சிகளில் நடுவராக இருந்தும் நிகழ்ச்சியைத் திறம்பட நடத்தியுள்ளார்.

புதுவை மற்றும் தமிழகமெங்கும் உள்ள அரிமா சங்கங்கள், சுழற்சங்கங்கள்,   புதுவை கலை பண்பாட்டுத்துறை மற்றும் இதரத் துறைகளில்  பட்டிமன்றங்கள் இசைச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.


இலக்கிய நிகழ்வுகளில் நடுவராகக்    கடந்த 10 ஆண்டுகளாக 1500 பட்டிமன்றங்களுக்கு மேல் பங்கேற்றதோடு இலக்கியச் சொற்பொழிவுகள் மற்றும் கவியரங்கங்கள், மாணவர் விழிப்புணர்வு நிகழ்வுகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். பலகுரல் நிகழ்ச்சி, இசைக்கருவிகளுடன் இணைந்து பட்டிமன்றங்களில் பாடும் திறன் பெற்றவர்        

சிங்கப்பூர், இலங்கை நாடுகளுக்குச் சென்று சிறப்புரைகள் ஆற்றிய பெருமையும் இவருக்கு உண்டு.

மாலை மலர், அவள் விகடன், வானம்பாடி போன்ற இதழ்களில் தொடர் கட்டுரைகள்      எழுதிவருகின்றார். எண்ணப்பறவை சிறகடித்து... என்ற நூலினை எழுதி வெளியிட்டுள்ளார்.

1. பல்சுவை நாவலர் விருது, 2. இயல்இசை வேந்தர் விருது 3. செந்தமிழருவி விருது.4. இலக்கியச் செல்வர் விருது 5. பாவேந்தர் புகழ் விருது. 6. கலைவாணர் விருது, 7.இலக்கியச்செம்மல் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
                                                  
முகவரி:

            திரு. லி. காங்கேயன் அவர்கள்,
            எண் 17, இரண்டாவது தெரு,
            காந்தி நகர், புதுச்சேரி-605009.

தொலைபேசி:0413 – 2271441 அலைபேசி: 9443293323

4 கருத்துகள்:

M. Shanmugam சொன்னது…

தகவலுக்கு நன்றி.

Tamil Latest Movie News

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

அய்யா வணக்கம்.
உலகமெல்லாம் புகழ்ந்தாலும் கூட உள்ளுரில் கண்டுகொள்ள மாட்டார்கள்,
“லோக்கல் மேளம்” என்பது வேறு!
ஆனால், சகோதரர் காங்கேயன் அவர்களைப் பற்றிய செய்திகளை வலையேற்றிய தங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுகிறேன். அவருடன் ஓரிரு முறை மேடையில் இணைந்து பேசி, தாங்கள் சொல்லிய அவரது திறமையை நேரிலேயே கண்டவன் நான். அவரின் திறமை மென்மேலும் வளர என் வாழ்த்துகள். தங்களுக்கு என் நன்றியும் வணக்கமும். அன்புடன் - நா.மு.
http://valarumkavithai.blogspot.in/

vimal சொன்னது…

தகவலுக்கு நன்றி சகோதரரே ஒரே ஒரு விண்ணப்பம் இதுவரை நீங்கள் குறிப்பிட்ட முக்கிய நபர்களில் புதுவையை சேர்ந்த வில்லிசை செல்வர் திரு இ.பட்டாபிராமன் அவர்களை பற்றி எழுதாதது எனக்கு வருத்தமே எனது தமிழாசிரியரும் புதுவை மக்களுக்கு மிகவும் அறிமுகமானவரும் கூட அவரை பற்றி எழுதுவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் அன்பிற்கு நன்றி.
விரைவில் எழுதுவேன்.