நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

சின்னமருது தீனதயாளபாண்டியனின் “காவியம்” வளர வாழ்த்துகள்!





அண்ணன் செயபாஸ்கரன் அவர்களின் வழியாகத் திரு. சின்னமருது தீனதயாளபாண்டியன் அவர்களைப் பற்றிப் பலவாண்டுகளுக்கு முன்பே அறிவேன். திரு. சின்னமருது தீனதயாளபாண்டியன் வெளியிட்ட ஆவணப்படங்களின் வழியாகத் அவர்களின் சமூக அக்கறையை அறிந்தேன். மருது இருவர், ரேகை என்னும் இரு ஆவணப்படங்களின் வெளியீடுகள் கண்டு திரு. சின்னமருது தீனதயாளபாண்டியன் அவர்களின் மேல் எனக்கு மிகுந்த மதிப்பு ஏற்பட்டது. நாட்டுப்புறவியல் என்ற என் நூலில் இது பற்றிய ஒரு மகிழ்வைப் பதிந்துள்ளேன்.

திரு. சின்னமருது தீனதயாளபாண்டியன் அவர்கள் ஒரு தரம் வாய்ந்த பள்ளியைத் தொடங்கியுள்ளதாகவும் உலகத் தரம் வாய்ந்த கல்வி அங்கு அளிக்கப்படுவதாகவும் மீண்டும் அறிந்தபொழுது மகிழ்ச்சியுற்றேன். மிகப்பெரும் கட்டுமான நிறுவனங்களை நடத்துவதாகவும், பன்னாட்டு நிறுவனத்தில் உயர்பொறுப்பு வகிப்பதாகவும் அடுக்கடுக்காக அவரின் புகழ்ச்செய்திகளைக் கேட்கும்பொழுதெல்லாம் இன்பம் ஊற்றெடுக்கும். குறைந்த வயதில் இத்தகு சாதனை படைத்தமைக்குக் காரணம் வீரம் விளைந்த மன்னர் பரம்பரையல்லவா? என்று அமைதியடைவேன்.

சின்னமருது தீனதாயளபாண்டியன் அவர்கள்

திரு. சின்னமருது தீனதயாளபாண்டியன் அவர்களின் தொட்டது துலங்கும் வினையாண்மைக்கு எடுத்துக்காட்டாகப் “பல்சுவை காவியம்” என்ற கலை இலக்கிய சமூக மாத இதழ் ஒன்று இந்தப் புத்தாண்டிலிருந்து வெளிவருவது கண்டு மகிழ்கின்றேன். தமிழ்ப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்தும் திரு. சின்னமருது தீனதயாளபாண்டியன் அவர்களின் தமிழ்ப்பணி தொடர நெஞ்சார வாழ்த்துகின்றேன்.

காவியம் என்ற இந்த இதழ் KAVIYAN CONSTRUCTION PVT.LTD(KCPL) என்னும் அமைப்பின் சார்பில் வெளிவருகின்றது. இந்த இதழ் கட்டுமான நிறுவனம் ஒன்றின் இதழ் என்றாலும் கலை, இலக்கியம், சமூக விழிப்புணர்ச்சிச் செய்திகளுக்கு முதன்மையளிக்கும் இதழ்.

இயக்குநர் தாமிரா எழுதிய சிறப்புச்சிறுகதை “தொடர்பு எல்லைக்கு அப்பால்” இந்த இதழில் இடம்பெற்றுள்ளது. சேவை வரி, ஊடுருவிப் பாயும் ஊடகம், மூவலூர் இராமாமிர்த அம்மையார்,  உணவே உயிரைக் கொல்லாதே, நாடிச் சுவடிகளில் நவபாசானம், யானை பாதுகாக்கப்படவேண்டிய பேருயிர், சதுரகிரி (பயணக்கட்டுரை), இளம்பிறை கவிதை போன்ற கட்டுரைகளும் கவிதைகளும், பயனுடைய துணுக்குச்செய்திகளும் இந்த இதழுக்குப் பெருமை சேர்க்கின்றன.

காவியம் விற்பனை பெருகட்டும்!
கன்னித் தமிழ்மொழி வளரட்டும்!

முகவரி:

ஆசிரியர்,
பல்சுவை காவியம்,
1/62-14, ரவி காலனி முதல்தெரு,
பவுல் பெல்சு சாலை,
புனித தோமையார் மலை,
சென்னை- 600 016

இணையத்தில் படிக்க: www.kaviyam.in
மின்னஞ்சல்: info@kaviyam.in
தொலைபேசி: 044- 43589876
செல்பேசி: 9677741200

தனி இதழ்: விலை உருவா 20 - 00

1 கருத்து:

கவியாழி சொன்னது…

பரிந்துரைக்குப் பாராட்டுக்கள் .அவரின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்