மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் 10 ஆம் உலகத்
தமிழாசிரியர் மாநாடு 2013, சூன் 3 முதல் 5 வரை நடைபெற உள்ளது. மாநாட்டில்
பேராளர்கள் கலந்துகொண்டு தமிழ்க்கல்வி குறித்த கட்டுரை வழங்கலாம். கட்டுரைச்
சுருக்கம் அனுப்ப நிறைவுநாள் 15.01.2013
மேலும் விரங்களுக்கு: இணையதளம்
திரு.ம.மன்னர்மன்னன் அவர்கள், மலேசியா பேசி: 03-79673142
2 கருத்துகள்:
அய்யா வணக்கம்.
தமிழாசிரியர்கள் என்றால் -
இதுபோலும் கருத்தரங்குகளைப் பொறுத்த வரை, கல்லூரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் “தமிழ்ப் பேராசிரியர்கள்” என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்?
(முன்னர் ஒருமுறை இதேபோன்ற “தமிழாசிரியர் மன்ற” கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொள்ளும் ஆவலுடன் நான் கேட்ட போது, அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்த க.பா.அ.அய்யா அவர்கள் அப்படித்தான் பொருள்கொள்வதாகத் தெரிவித்தார்கள்)
பள்ளித் தமிழாசிரியர்களை ஏற்காமல், “தமிழாசிரியர்“ என்னும் சொல்லை மட்டும் ஏன் வைக்கிறார்கள் என்று தெரியவில்லையே!
இது குறித்த தகவலையும் தங்களின் கருத்தையும் அறிய ஆவல் - நா.மு.
புலவர்.முத்துநிலவனார் அவர்களுக்கு வணக்கம்.
மலேசியா மாநாடு முழுவதும் தமிழாசிரியர்களால் நடத்தப்படுவது. பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி குறித்து ஆய்வுரை வழங்கலாம். தாங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.
கருத்துரையிடுக