நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 3 செப்டம்பர், 2012

கூழமந்தல் மகாவீரர் சிலை...
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உள்ள ஊர் கூழமந்தல் ஆகும். இவ்வூரின் சாலையின் மேற்குப் பகுதியில் உள்ள நிலத்தில் மகாவீரர் சிலை இருந்துள்ளது. நில உரிமையாளர் இந்தச் சிலையைப் பாதுகாப்பாக வைத்திருந்ததுடன் குறிப்பிட்ட நிலத்தை அன்பளிப்பாக வழங்கிக் கோயில் கட்டுவதற்கும் உதவியுள்ளார். கலை நுட்பம் வாய்ந்த மகாவீரர் சிலை சோழர்காலத்தில் வடிக்கப்பட்டிருக்க வேண்டும். கூழமந்தலில் சிவன்கோயில், பேசும் பெருமாள்கோயில், சமணக்கோயில் இருந்துள்ளன. எனவே மக்கள் சமய வேறுபாடின்றி இவ்வூரில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை இச்சான்றுகளால் அறியமுடிகின்றது.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தகவலுக்கு மிக்க நன்றி சார்...

போதிவர்மா சொன்னது…

பதிவிற்கு மிக்க நன்றி

போதிவர்மா சொன்னது…

பதிவிற்கு மிக்க நன்றி