நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

புதுவையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் விளக்கம் மற்றும் உதவிக் கூட்டம்புதுவை அம்மா சமூக சேவா மையமும் இந்தியன் குரல் அமைப்பும் இணைந்து நடத்தும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் விளக்கம் மற்றும் உதவிக் கூட்டம் புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 16.09.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் நடைபெற உள்ளது.

திரு.கே.ஆர்.இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் திருமதி வீ.கண்ணம்மா அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார். வழக்கறிஞர் ஆர்.பிரவின் குமார், திரு ஹேமச்சந்திரன் வாழ்த்துரை வழங்குகின்றனர். ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கத்தின் பொதுச்செயலாளர் திரு. எம். சிவராஜ் அவர்கள் சிறப்புரையாற்றுகின்றார்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றிய அடிப்படைச் செய்திகள் முதல் அனைத்து விளக்கங்களும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

விழாவில் “இதுதான் தகவல் அறியும் உரிமைச்சட்டம்” என்ற நூல்(விலை 250 உருவா) விற்பனைக்குக் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை: