நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 24 ஜனவரி, 2026

திண்டுக்கல்லில் புலவர் பெருமக்கள் ஏற்பாட்டில் ஒரு புலமைத் திருவிழா!

    திண்டுக்கல் மாநகரில் தமிழமுது அறக்கட்டளை சார்பில் 25.01.2026 காலை 10.31 மணிக்கு “நாவுக்கரசர்” சு. நஞ்சப்பனார் தலைமையிலும் இலக்கணச் செம்மல் புலவர் துரை. தில்லான் அவர்கள் முன்னிலையிலும் புலவர் பெருமக்கள் ஏற்பாட்டில் ஒரு புலமைத் திருவிழா நடைபெறுகின்றது. தமிழ் இணையத்தை மக்கள் மன்றத்திற்குக் கொண்டுசென்ற மாண்புக்காகவும், இணையத்தில் தமிழறிஞர்களின் வாழ்வைப் பதிவுசெய்துவரும் பான்மைக்காகவும் முனைவர் மு.இளங்கோவனாகிய எனக்குத் 'தமிழ் இணையச் செம்மல் 'என்னும் உயரிய சிறப்பாரம் (விருது) நல்கிப் பாராட்ட உள்ளனர்.

    அந்நிகழ்வின் பெருமைமிகு அங்கமாக மூத்த புலவர் பெருமக்களும், தமிழ்த்தொண்டில் முன்னின்று உழைத்தவர்களுமான புலவர் பெருந்தகை அருணா பொன்னுசாமியார் (கருவூர்), ஆன்மீகச் செம்மல் க. வீ. வேதநாயகம் (ஈரோடு), புதுவெள்ளம் த. இராமலிங்கம் (நெய்வேலி), கவியருவி கரு. சின்னத்தம்பியார் (உடுமலைப்பேடை), இலக்கணச் செம்மல்  பெ. கறுப்பண்ணனார் (கருவூர்), புலவர் பெருமான் ப. பா. கோபால் (திண்டுக்கல்) முதலான சான்றோர்கள் உரைநிகழ்த்தி, என்னை ஊக்கப்படுத்த உள்ளனர்.

    வாய்ப்புடையோர் வாழ்த்த வாருங்கள். கடமையில் நின்றோர் கவின்மலர் தூவுங்கள்.

கருத்துகள் இல்லை: