நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 26 மே, 2016

நாட்டுப்புறப் பண்பாட்டு ஆய்வாளர் முனைவர் எழிலவன்


முனைவர் எழிலவன்

பேராசிரியரும் கவிஞருமாகிய த. பழமலை அவர்கள் தம் படைப்புகளைப் பற்றிக் கருத்துரைக்கும்பொழுது தமக்கு முன்னோடியாக இருந்தவர் கவிஞர் எழிலவன் என்று சொன்னபொழுதுதான் எங்களுக்கு எழிலவன் என்ற பெயர் அறிமுகம் ஆனது. போலிகள் உலவுவதும் திறமையானவர்கள் அடக்கமாக இருப்பதும் உலகின் பொதுவிதி என்பதால்தான் எழிலவன் போன்ற திறமையானவர்களின் மேல் புகழ்வெளிச்சம் அடிக்கப்படாமல் இருந்துள்ளது போலும்!.

கவிஞர் எழிலவன் அவர்கள் கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி வட்டம், காடாம்புலியூரில் பிறந்தவர்(15.06.1949). இவர் பெற்றோர் சி. நாராயணசாமி கச்சிராயர், திருவாட்டி ரோகிணி அம்மாள். தொடக்கக் கல்வியைக் காடாம்புலியூரில் பயின்ற இவர் உயர்நிலைக் கல்வியைப் பண்ணுருட்டியில் பயின்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புகுமுக வகுப்பு, இளங்கலை பயின்ற இவர், முதுகலைப் பட்டங்களை ஆங்கில இலக்கியம், மொழியியல் பாடங்களைப் பயின்று பெற்றவர். பல்வேறு கல்வி நிறுவனங்களில் அதிகாரியாகவும், பேராசிரியராகவும் பணியாற்றி 2007 இல் பணியோய்வு பெற்று இப்பொழுது நாகைப்பட்டினத்தில் வாழ்ந்து வருகின்றார்.

எழிலவன் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர். பல்வேறு கவியரங்கேறி முன்னணிக் கவிஞர்களின் தலைமையில் கவிதை பாடியவர்.  அவ்வகையில் அகில இந்திய வானொலிகளில் (திருச்சி, புதுவை, சென்னை & காரைகால் பண்பலை) மொத்தம் 90 கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. இருநூற்றுக்கும் மேற்பட்ட கவியரங்குகளில் உவமைக் கவிஞர் சுரதா, கே.சி.எஸ். அருணாசலம், மு.மேத்தா, நா. காமராசன், பொன்னடியான், புத்தனேரி சுப்பிரமணியன், மீரா, பாலா ஆகிய முன்னணிக் கவிஞர்களுடன் பங்கேற்றுள்ளார். ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களுக்குத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மதிப்புரை, திறனாய்வு, அணிந்துரை எழுதியுள்ளார். எழுத்தாளர் மௌனியுடன் ஐந்தண்டுகள் இலக்கியத் தொடர்பில் இருந்தவர்.

ஆனந்த விகடன், அவள் விகடன், தாமரை, கண்ணதாசன், தீபம், கணையாழி, பொன்னகரம், கல்கி, முல்லைச்சரம், அமுதசுரபி, கவிதாமண்டலம், பல்லவநாதம், இனப்போர், சிந்தனையாளன், குயில், தமிழ்ப்பணி, மக்கள் நோக்கு, கவியமுதம், பூஞ்சோலை, அலிபாபா, தினகரன், தமிழோசை நாளிதழ், உரிமை வேட்கை, அன்னம், முக்கனி, நடவு, மாற்று, குளம், ஆழி, ஆவாரம்பூ, மருதூர் முரசு, சங்கு, மாணவர் முழக்கம், தேனமுதம், தமிழணங்கு, ஃபாசில்ஸ், நியூஸ் லெட்டர், ஏசியன் ஃபோல்க்லோர் ஸ்டடீஸ், சகாப்தம், கண்ணியம், தை, காலச்சுவடு, கவிதாசரம், கருப்புச் சொற்கள், செம்மண், வையம்,  போன்ற இதழ்களிலும் இஸ்கஸ் மலர், அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆண்டு மலர்கள், திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி ஆண்டுமலர்கள், இந்து ஆங்கில நாளிதழ், பாட மறந்த கவிதைகள், குருவித் தோரணம், மண்வாசம், மாறி வரும் சமூகம், சிறுவர் வழக்காறுகள், பாரத் கல்லூரி கருத்தரங்குத் தொகுதி, தமிழர் அடையாளங்கள் போன்ற கவிதை மற்றும் தொகுப்பு நூல்களிலும் இவர்தம் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

மரவாடியில் போதிமரம் என்ற இவரின் கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் தீபம் இதழில் வெளிவந்த பெருமைக்குரியன. தீபம் ஆசிரியர் நா. பார்த்தசாரதியால் வாய்ப்புகள் வழங்கப்பெற்று, சமூகச் சீர்திருத்தக் கவிதைகள் பலவற்றை எழுதியவர்.  ‘ அலுவலகக் கூண்டுக்குள் ஒரு வானம் அடைப்பட்டுக் கிடக்கின்றதுஎன்று படைப்புணர்வு நிறைந்த அரசு ஊழியர்களின் நிலையை எடுத்துக்காட்டிய பெருமை இவரின் படைப்புகளுக்கு உண்டு.

நாட்டுப்புறவியல் அறிஞர் ஆலன் டான்டிஸ் அவர்களின் ஆய்வின் பாதிப்பால் தமிழ்ப்பண்பாட்டில் எண்கள் என்ற இவர்தம் நூல் உருவானது. தமிழ்ப்பண்பாட்டில் எண்கள் பெறும் இடத்தை மிக விரிவாக இவர் ஆராய்ந்துள்ளார். குறிப்பாக மூன்று என்ற எண் தமிழர்களின் படைப்பு, பண்பாடு, பழக்கவழக்கம் ஆகியவற்றில் செலுத்தும் ஆதிக்கத்தை வேர்மூலம் கண்டு ஆராய்ந்தவர். இவர்தம் கட்டுரைச் சிறப்பை எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் போன்றவர்கள் பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளமை இங்குக் கவனத்தில் கொள்ளத்தக்கது.

 எழிலவனின் படைப்பு நூல்கள்:

1.  மானிட கீதம்(கவிதை - 1977)
2.   மரவாடியில் போதிமரம்(கவிதை - 2004)
3.  முந்திரிக் காட்டு முகவரிகள்(ஆய்வு – 2006)
4.   கடவுளின் கடைசி ஆசை(கவிதை – 2006)
5.   Folktales of Tamil Nadu (ஆங்கில மொழிபெயர்ப்பு) (2005)
6.   Folk Performing Arts of Tamil Nadu (2011 & 2015)
7.  பின்னையிட்ட தீ  (கவிதை அச்சில்)
8.   நதியில் சில தீவுகள் (கவிதை அச்சில்)
9.   தமிழகத்தின் மரபுக் கலைகள் (ஆய்வு 2010)
10. தமிழ்ப் பண்பாட்டில் எண்கள்  (ஆய்வு 2015)                             

தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் அரங்கேறிய களங்கள்:-

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்; திருவையாறு, தமிழ் நாட்டுப்புறவியல் இசைக்கலை மாமன்றம்; பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரி தஞ்சாவூர்; பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோவை; திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி, திருவாரூர்.

ஆங்கிலக் கட்டுரைகள்:-

(FOSSILS சார்பாகவும் UGC., மற்றும் தேசிய பன்னாட்டுக் கருத்தரங்குகளிலும்) காகதீயப் பல்கலைக் கழகம் வாரங்கல்; மதுரை காமராசர் பல்கலைக் கழகம்; கோழிக்கோடு பல்கலைக் கழகம்; திராவிடப் பல்கலைக் கழகம் குப்பம்; கன்னடப் பல்கலைக் கழகம் ஹம்பி; மைசூர் பல்கலைக் கழகம்; ஸ்காட் கிறித்துவக் கல்லூரி நாகர்கோயில்; சிப்கா கல்லூரி கேரளா; மன்னர் சரபோசி அரசினர் தன்னாட்சிக் கல்லூரி, தஞ்சாவூர்; புதுவை மொழியியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம், புதுச்சேரி; ப்ராவிடன்ஸ் கல்லூரி, உதகமண்டலம்; பாரதியார் பல்கலைக் கழகம், கோவை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனக் கருத்தரங்கு, நெய்வேலி ஆகிய இடங்களில் ஆய்வுரை வழங்கிய பெருமைக்குரியவர்.

திராவிடப் பல்கலைக் கழகம் தயாரித்துள்ள நாட்டுப்புறவியல் கலைக் களஞ்சியத்திற்குப் பல்வேறு கட்டுரைகள் எழுதியளித்துள்ளார்.

இதழாசிரியர் அனுபவம்:-

முக்கனி  (1968) – மாணவர் மாத இதழ்
மண்வாசம்(2002) – நாட்டுப்புறவியல் ஆய்வுத் தொகுப்பு
வையம்(2007– முதல்) கவிதைக் காலாண்டிதழ்

தெரிந்த மொழிகள்:- தமிழ், ஆங்கிலம், [மலையாளம், உருசிய மொழி ஓரளவு]

சிறப்புச் செய்திகள்:-

v  தமிழக அளவில் கல்கி (1982) நடத்திய மரபுக் கவிதைப் போட்டியில் தேர்வு.
v  புதுவை பாரதி நூற்றாண்டு விழாவில் பாரதி பட்டயம் பெற்றமை.
v  சென்னைத் தொலைக்காட்சி DD1 (1998)-ல் நடத்திய கவிதைப் போட்டியில் ஒன்பதாயிரம் கவிதைகட்கு நடுவே முதற்பரிசு.
v  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்; குடந்தை அரசு தன்னாட்சிக் கல்லூரி இவற்றில் இவரது கவிதைகள் முறையே முதுகலை, இளங்கலை மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டிருந்த.
v  தமிழ்நாட்டின் பல்கலைக் கழங்களில் எழிலவன் கவிதைகள் பற்றி இதுவரை பன்னிரண்டு எம்.ஃபில் பட்ட ஆய்வுகள் நிகழ்த்தப் பெற்றுள்ளன.
v  கவிஞர் கண்ணதாசனால் மங்கல வாழ்த்துப் பாடல் பெற்றவர்.
v  கேரளத்தின் புகழ் பெற்ற நாளேடான மலையாள மனோரமா இவரது நேர்காணல் செய்தியினைப் புகைப்படத்துடன் 25.01.2007- ல் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
v  கவிதைக்காக, குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்களின் கடித வாழ்த்துப் பெற்றவர்.
v  அச்சமில்லை (2008) மாத இதழ் விளிம்பு நிலை மக்களின் படைப்பாளி என்னும் முறையில் இவரது தகுதிகளையும் பேறுகளையும் முன்னிலைப்படுத்தி விவரக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
v  தமிழ் ஓசை நாளிதழில் மரபு வழிக் கலைகள் பற்றித் தொடர் கட்டுரைகள் மே – 2008 முதல் 50 வாரங்கள் எழுதியுள்ளார்.
v  நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் 06.07.2011 அன்று இவருக்குச் சிறந்த எழுத்தாளர்விருதும், பொற்கிழியும் வழங்கி விழா எடுத்துள்ளது.
v  தினத்தந்தி நாளேடு இவர் பற்றி 2012 பிப்ரவரி  இதழில் மரபுக் கலைகளை ஆவணமாக்கும் எழுத்தாளர்என்ற தலைப்பில் செய்திக் கட்டுரையினை வெளியிட்டுள்ளது.
v  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், நெய்வேலித் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான கருத்தரங்கில் (08.02.2014) இவர் சார்ந்த சாதனை விவரங்கள் நிறுவனக் கையேட்டில் இடம் பெற்றுள்ளன.
v  இவரது தமிழகத்தின் நிகழ்த்துக் கலைகள் என்னும் ஆங்கில நூலை புதுதில்லி அகன்ஷா பதிப்பகம் வெளியிட்டுச் சிறப்புச் சேர்த்துள்ளது.
v  ழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன், ஜூனியர் விகடன் இதழில் (செப். 2015) தனது உணவு யுத்தம்கட்டுரையில் எழிலவனின் கட்டுரையொன்றை (நாட்டுப்புறத்தில் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள்) உரிய அங்கீகாரத்துடன் எடுத்தாண்டுள்ளார்.

v  கலைஞர் தொலைக்காட்சி இவரது நேர்காணலை 23.07.2015 அன்று காலை 8 – 8.30 மணியளவில் சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பியுள்ளது.

தமிழகத்தின் பெருங்கவிஞர்களால் பின்வருமாறு பாராட்டப் பெற்றுள்ளார்:

1.‘வித்தகன், கலையின் நேயன்’   - கண்ணதாசன்
2.‘கவித்தென்றல்’      - கே.சி.எஸ். அருணாசலம்
3.‘எழுச்சிக் கவிஞர்’     - பொன்னடியார்
4.‘கவிதைக் குயில்’    - நா. காமராசன்
5.‘செம்மண் இலக்கிய முன்னோடி’   - த. பழமலய்

ஆங்கிலப் படைப்பு & மொழிபெயர்ப்புப் பணிகள்:-

1.Folk Performing Arts of Tamil Nadu – (Project meant for South Zone Cultural Centre, Thanjavur).
2.Kaasa valanadu – an Historical Study – Ph.D. (Dissertation) – Translation
3.Folk Tales of South India – Tamil Nadu(for Folklore Society of South Indian Languages Trivandrum).
4.A number of poems from English to Tamil & vice versa – Translated and published in various journals.
5.Attended the Translation Workshop held at Tamil University(2004)
6.Participated as Expert in the Translation Workshop held at the Tamil University (2011) in collaboration with the Central
Institute of Classical Tamil.
7.Translated some verses of Pazhamozhi Naanuuru.
8.Attended the workshop at the Indira Gandhi National Centre For Arts, New Delhi (2008).
9.Conducted a Departmental seminar on Functional English at E.G.S.P Arts and Science College, Nagapattinam.
10.Extended guidance at various levels to more than a dozen Ph. D. candidates.


1 கருத்து:

முனைவர் இரத்தின.புகழேந்தி சொன்னது…

முனைவர் எழிலவன் பற்றிய முழுதான பதிவுக்கு நன்றி. அவருடன் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவன் என்ற வகையில் நானும் பெருமைப்படுகிறேன்.