நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 7 டிசம்பர், 2012

தாமரை பெருஞ்சித்திரனார் மறைவு
அம்மா தாமரை பெருஞ்சித்திரனார் அவர்கள் 

தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களின் அருமைத் துணைவியார் அம்மா தாமரை பெருஞ்சித்திரனார் அவர்கள் இன்று(07.12.2012) காலை 10.30 மணிக்குச் சென்னையில் இயற்கை எய்தினார்கள். அம்மா அவர்களுக்கு அகவை 79. பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் தமிழ்ப்பணிக்கு மிகச்சிறந்த துணையாக இருந்த அம்மா அவர்கள் குடும்பத்தைப் பேணுவதில் முதன்மையாக ஈடுபட்டிருந்தவர். ஐயா அவர்களின் கொள்கையில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர்கள். ஐயா சிறைக்கு ஏகிய நாள்களில் குடும்பத்தையும், குழந்தைகளையும் காத்ததுடன் தென்மொழிக் குடும்பத்தின் தூணாக விளங்கியவர். ஐயாவின் மறைவுக்குப் பிறகு தென்மொழி வெளியீட்டிலும், இயக்க நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தம் கடமையை ஆற்றியவர்கள். தாமரை பெருஞ்சித்திரனார் அவர்களின் இறுதி ஊர்வலம் நாளை(08.12.2012) காலை 10 மணிக்குச் சென்னை, மேடவாக்கம் பாவலரேறு தமிழ்க்களத்திலிருந்து புறப்படும்.
கருத்துகள் இல்லை: