நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

சென்னையில் திருவருட்பா இசைவிழா- தமிழிசை விழா
திருபுவனம் கு. ஆத்மநாதன் அவர்கள்

“இன்னிசை ஏந்தல்” திருபுவனம்  கு. ஆத்மநாதன் அவர்களின் பெருமுயற்சியில் சென்னையில் திருவருட்பா இசைவிழா, தமிழிசை விழா மிகச்சிறப்பாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

இடம் : பசும்பொன் தேவர் மண்டபம், அபிபுல்லா சாலை, தியாகராயர் நகர், சென்னை- 600017

நாள்: 21.12.2012 முதல் 25.12.2012 வரை

நேரம் : மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

முதல்நாள் நிகழ்வில் இன்னிசை ஏந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்களின் அருட்பா இசை நடைபெறும். மேலும் சின்னமனூர் சித்ரா குழுவினரின் அருட்பா நாட்டியமும் இடம்பெறும்.

இரண்டாம் நாள் நிகழ்வில் கிஷோர்குமார் குழுவினர் வழங்கும் வள்ளலார் வாழ்வியல் வில்லுப்பாட்டு, “அருட்பா அமுது” அன்னபூரனி அவர்களின் அருட்பா இசை, நடனமாமணி புஷ்பகலா இரமேஷ் அவர்களின் அருட்பா நாட்டியம் நடைபெறும்.

மூன்றாம் நாள் நிகழ்வில் அருளாளர் பழனி, தீபிகா வழங்கும் அருட்பா இசை, சுவாமிநாதன் அவர்களின் அருட்பா நாட்டியம் நடைபெறும்.

24.12.2012 மடிப்பாக்கம் உமாசங்கர், யுவன்பாலா வாய்ப்பாட்டும், கலைமாமணி இந்திரா ராசன் குழுவினர் வழங்கும் திருக்குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகமும் நடைபெறும்.

நிறைவுநாள் நிகழ்வில் கலைமாமணி சிவக்குமார் அவர்களின் வாய்ப்பாட்டும், கலைமாமணி கேமமாலினி இராசுவின் பாரதியாரின் பன்முகங்கள் நாட்டியமும் நடைபெறும்.

தொடர்புக்கு:

இன்னிசை ஏந்தல் திருபுவனம் கு. ஆத்மநாதன் அவர்கள்,
என் 6, என் தெரு, கீழ்ப்பாக்கம் கார்டன்,
சென்னை – 600 010

தொலைபேசி(இல்லம்) : 00 91 44 6545 5989
செல்பேசி: 00 91 93801 25989


1 கருத்து:

naanjil சொன்னது…


தமிழிசை நிகழ்ச்சி அறிந்து நிரம்ப மகிழ்ச்சி. வாசிங்டனிலும் ஒர் தமிழிசை நிகழ்ச்சி டிசம்பர் திங்கள் 16 திகதி முருகர் கோவில் கலைக்கூடத்தில் நடக்கவிருக்கிறது. திரு. ஆத்மநாதன் அய்யா பெட்னா விழாவில் பலமுறை பாடியிருக்கிறார்க்ள்.
அன்புன்டன்
நாஞ்சில் பீற்றர்