நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 14 ஜூலை, 2012

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவருக்குப் புதுச்சேரியில் வரவேற்பு


மலேசியத் தமிழ் எழுத்தாளர் பெ.இராசேந்திரனுக்கு முனைவர் வி.முத்து அவர்கள் பொன்னாடை அணிவித்தல். அருகில் மன்னர்மன்னன், பொறிஞர் பாலு

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன் அவர்கள் புதுச்சேரிக்கு வருகைபுரிந்துள்ளார். அவரையும் அவருடன் வந்த மலேசியத் தமிழ் எழுத்தாளர்களையும் இன்று(14.07.2012) புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் புதுவைத் தமிழறிஞர்கள் வரவேற்றுப் பாராட்டிப் பேசினர்.

தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார். பாரிசு பார்த்தசாரதி அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

இனிய நந்தவனம் என்னும் இதழின் புதுவைச் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. இனிய நந்தவனம் இதழின் ஆசிரியர் சந்திரசேகரன் அவர்களும் கலந்துகொண்டார்.

புதுவைத் தமிழ்ச்சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். நிறைவில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன் ஏற்புரையாற்றினார். மலேசியாவில் இலக்கிய வளர்ச்சிக்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆற்றிவரும் பணிகளையும் மலேசியத் தமிழர்களின் தமிழ் உணர்வையும் எடுத்துரைத்தார்.


மலேசியத் தமிழ் எழுத்தாளர் பெ.இராசேந்திரன் உரை


முனைவர் வி.முத்து தலைமையுரை


இனிய நந்தவனம் இதழ் வெளியீடு


பெ.இராசேந்திரன் அவர்களுடன் புதுவைத் தமிழறிஞர்கள்,ஆர்வலர்கள்

3 கருத்துகள்:

பரிதியன்பன் சொன்னது…

புதுவைத் தமிழ்ச் சங்க செயுதியினை உலகறிய செய்யும் பேராசிரியருக்கு நன்றிகள்

Unknown சொன்னது…

வணக்கம். அற்புதமான வரவேற்பை வழங்கிய ஐயா முத்து அவர்களுக்கும், புதுவை தமிழ்ச்சங்கத்திற்கும் என் அன்பான நன்றி கலந்த வணக்கங்கள்! தமிழோடு வாழ்வோம்!

Unknown சொன்னது…

வணக்கம். புதுவை மண்ணில் அற்புதமான வரவேற்பை நல்கிய புதுவை தமிழ்ச்சங்கத்திற்கும். ஏற்பாடு செய்த ஐயா முத்து அவர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.
அன்புடன்
கே.எஸ்.செண்பகவள்ளி