நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 15 டிசம்பர், 2010

தமிழ் இணையப் பயிலரங்கம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சு.ஆடுதுறை என்னும் சிற்றூரில் அமைந்துள்ள அறிவகம் நூலக அரங்கில் தமிழ் இணையப் பயிலரங்கம் 18.12.2010 காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியை அமெரிக்காவில் வாழும் திரு. கரு. மலர்ச்செல்வன் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள். சு.ஆடுதுறை, அதனைச் சார்ந்த பிற சிற்றூர்களில் வாழும் மாணவர்கள் பொதுமக்கள் பயன்பெறும்படி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன், திருமுதுகுன்றம் முனைவர் இரத்தின.புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டு இணையப் பயிற்சியை வழங்குகின்றனர். நிகழ்ச்சியில் கடலூர் திரைப்பட இயக்கத்தின் செயலாளர் சாமிக்கச்சிராயர், திட்டக்குடித் திரைப்படத்தின் இயக்குநர் சுந்தரன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர்.

தமிழ் ஆர்வலர்கள், இணைய ஆர்வலர்களைச் சு.ஆடுதுறை அறிவகம் நூலகத்தின் பொறுப்பாளர் வரவேற்று மகிழ்கின்றார்.

சு.ஆடுதுறை செல்லும் வழி:

விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி வழியாகப் பெரம்பலூர் அல்லது தொழுதூர் செல்லும் பேருந்துகளில் ஏறி ஆக்கனூர் அல்லது பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும்(விரைவுப் பேருந்துகளில் ஏறி வருவோர் நடத்துநரிடம் ஆக்கனூரில் நிற்கும்படி வேண்டிக்கொண்டு இறங்கவும். திட்டக்குடியிலிருந்து 5 கல் தொலைவு ஆக்கனூர்).அங்கிருந்து ஆற்றைக் கடந்து சு.ஆடுதுறையை அடையலாம்.

2 கருத்துகள்:

Ravichandran Somu சொன்னது…

Karu.Malarselvan is my close friend. He informed me about this workshop. I am at the airport now... coming to India and I'll try to join this workshop.

Anbudan,
-Ravichandran

rishaban சொன்னது…

நிகழ்ச்சி இனிதே நடைபெற வாழ்த்துக்கள்