நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 25 ஜூன், 2009

நாகர்கோயில் அஞ்சல்பெட்டியும் மணிக்கூண்டும்...


அஞ்சல்பெட்டி

கேரளத்தொடர்புடன் இருக்கும் ஊர் நாகர்கோயில்.1947 ஆம் ஆண்டுக்கு முன்புவரை திருவாங்கூர் மன்னரின் செல்வாக்கு இந்த ஊரில் அதிகம்.ஆங்கில ஆட்சியும் இருந்தது.திருவாங்கூர் பகுதிக்கு உட்பட்ட இடங்களுக்குச் செல்ல தனி அஞ்சல் பெட்டியும் ஆங்கில அரசுக்கு உட்பட்ட பகுதிகளுக்குச் செல்ல தனி அஞ்சல்பெட்டியும் இருந்ததாம்.

அஞ்சல்பெட்டி

திருவாங்கூர் அஞ்சல் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெட்டி இன்று இந்திய அஞ்சல்துறையின் பயன்பாட்டில் உள்ளது.இரும்பால் வார்க்கப்பட்டுள்ளது அஞ்சல்பெட்டி.நாகர்கோயில் போகாதவர்களுக்குப் பார்வைக்கு இந்தப் பெட்டியும் அருகில் உள்ள முதன்மை வாய்ந்த நூற்றாண்டு கண்ட மணிக்கூண்டும் படமாகத் தருகிறேன்.கண்டு மகிழுங்கள்.

மணிக்கூண்டு

1 கருத்து:

குப்பன்.யாஹூ சொன்னது…

மிகவும் அருமை, அறிய தகவல், நன்றிகள்.

எத்தனையோ முறை நாஞ்சில் வந்துள்ளேன், இதை பார்த்தது இல்லை, அதுவும் மணிக்கூண்டு அருகில் இருக்கும் நேசத் நேசத் கபெ க்கே அடிக்கடி வருவேன். அடுத்த முறை கண்டிப்பாக பார்க்கிறேன்.

குப்பன்_யாஹூ