நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 1 ஜூன், 2009

தொல்காப்பியப் பதிப்பாசிரியர் மழவை. மகாலிங்கையர்

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையை 1847 ஆகத்து மாதம் பதிப்பித்து முதன்முதல் வெளியிட்டவர் மழவை.மகாலிங்கையர் ஆவார்.இவர் பத்தொன்பதாம் நாற்றாண்டில் வாழ்ந்த பெரும் புலவர்.ஆங்கில அறிவும் வாய்க்கப்பெற்றவர்.ஆறுமுகநாவலர் அவர்கள் மொழிபெயர்த்த விவிலிய மொழிபெயர்ப்பே சிறந்தது எனச்சான்று வழங்கியவர்.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்.திருத்தணிகை சரவணப்பெருமாள் ஐயர்,விசாகப்பெருமாள் ஐயர் ஆகியோரிடம் பாடம் கேட்டவர். சென்னையில் வாழ்ந்தவர்.கம்பராமாயணம்,தணிகைப்புராணம் முதலிய நூல்களில் பெரும் பயிற்சி பெற்றவர்.இலக்கணப்புலமை நிரம்பப் பெற்றவர்.கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக விளங்கியவர்.

காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடம் நெருங்கியத்தொடர்புகொண்டவர்.இலகணச் சுருக்கம், பஞ்சதந்திர வசனம்,அருணாசல புராணம்-உரை,போதவாசகம்,தொல்காப்பியம் எழுத்ததிகாரம் உரை(நச்சர்) உள்ளிட்ட நூல்களைப் பதிப்பித்தவர்.

மழவராயனேந்தல் என்னும் ஊரினர்(மதுரைக்கு அருகில்).வீரசைவ மரபினர்.

தொல்காப்பியம் முதல்பதிப்பு திருவண்ணாமலை வீரபத்திரஐயரால் தமது கல்விக்கடல் அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.

1 கருத்து:

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

பயனுள்ள பதிவு.