நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 19 டிசம்பர், 2007

தமிழகப் பல்கலைக்கழக இணையதளங்கள் யாருக்கு?

தமிழகத்தில் ஆட்சிமொழிச்சட்டம் கொண்டுவரப்பட்டாலும் அச்சட்டம் நடைமுறையில் இல்லை என்பதற்குப் பலசான்றுகள் உள்ளன.தமிழகத்தில் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்களின் தகவல்கள் யாவும் ஆங்கிலத்தில் உள்ளமையை இங்கு நினைவிற்கொள்க.

பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்,பதிவாளர்கள் தமிழ்ப்பற்றாளர்களாக இல்லாமையே இதற்குக்காணரம்.தமிழ்ப்பற்றுடன் விளங்கிய முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் துணைவேந்தராக விளங்கியபொழது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்
ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.அதனை மற்ற பல்கலைக்கழகத்தாரும் நடைமுறைப்படுத்தலாமே!

அயல்நாட்டினருக்கு இணையதளத் தகவல்கள் எனப் பொய்க்காரணம் புகல்வோர் அதிகம்.நம் பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் தமிழர்களே அதிகம்.அயல்நாட்டினர் எண்ணிக்கையை எண்ணிச் சொல்லிவிடலாம்.நிலை
இவ்வாறு இருக்க தமிழிலும் ஆங்கிலத்திலும் தகவல்கொண்ட இணையதளத்தைப் பெற்ற பல்கலைக்கழகமாகத் தமிழ்ப்பல்கலைக்கழகம் மட்டும் இயங்குகிறது. ஏனைய தமிழகப் பல்கலைக்கழகங்கள் தமிழில் தகவல்களைத் தராமல் ஆங்கில அடிமைகளின் கூடாரமாக விளங்குவதை எவ்வாறு மாற்றுவது?.இந்தியக் குடிமகனின் வளர்ச்சிக்கு மொழி உள்ளிட்ட எவையும் தடையாக இருக்கக்கூடாது என்பதுதானே நம் அனைவரின் விருப்பமாக உள்ளது.

அரசின் சட்டத்தை மீறுபவர்களை என் செய்வது?அரசின் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதானே பொறுப்பில் உள்ளவர்களின் கடமையாக இருக்கமுடியும் ?தொடர்புடையவர்களுக்கு எடுத்துச்சொல்வோம்.

10 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

முனைவரே,

உங்கள் வலைப்பதிவில் பக்கப்பட்டையில்

\\I did research in 1. Tamil Language, Tamil Literature and Tamil Nadu during the period of Maratiyar for M.Phil Degree. 2. Twentieth Century Tamil Poetry : An Explanation, History and Evaluation of the Bharathidasan Tradition for Ph.D. Degree. \\

என்று போட்டுள்ளீர்களே, யாருக்காக? உங்கள் வலைப்பதிவை எத்தனை அமெரிக்கர்கள் படிக்கிறார்கள்?

இப்பொழுதுதாவது புரிகிறதா.........

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வணக்கம்.
வலைப்பூ வடிவமைப்பினை
முன்பு நண்பர்களால் செய்தேன்.
தமிழை உள்ளிடத் தொரியாததால்
ஆங்கிலத்தில் தட்டச்சிட்டேன்.

அண்மையில்தான் நானே செய்யும்படி
அறிந்துகொண்டேன்.விரைவில் பக்கப்பட்டையைத் தமிழாக்கிக் கொள்வேன்.
இடித்துரைத்தமைக்கு நன்றி.
மு.இ

பார்வைகள் சொன்னது…

அன்புள்ள நண்பர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு, வணக்கம். தங்களின் குமுறல் முறையன்று. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமையும் கல்வி வணிகமயமாகி விட்ட நிலையில், பல்கலைக்கழகச் செய்திகள் எவ்வாறு தமிழில் இருக்கும். ஆங்கிலத்தில் இருந்தால்தான் எல்லாரையும் ஏமாற்றலாம். மேலும் இன்றைய நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் செல்வந்தர்களுக்கானது என்ற நிலைக்கு மாறிவிட்டது. ஏழைகளுக்கு இடமில்லை என்பது தெளிவான உண்மை. எல்.கே.ஜி.யில் ஏழைகள் ஆண்டுக்கு சுமார் 5ஆயிரம் தொகை கட்டியும் மாதம் 300ரூபாய் தொகை கட்டியும், படிப்பதைப் பெருமையாகவும் பெரிய படிப்பாக(ஆங்கிலம் வழியை) நினைக்கையில் ஏன் பல்கலைக்கழகங்களின் இணைய தளங்கள் தமிழில் இருக்கவேண்டும். ஆங்கிலத்தில் இருக்கட்டும். ஒருநாள் ஏழைகள் அறிவுபெற்று புரட்சி செய்யட்டும். அதுவரையில் முதலாளிய சிந்தனைக் கொண்ட இந்த ஆங்கில வழி கல்வி வளர்ந்துகொண்டே இருக்கும். தவிர்க்கமுடியாது.
தமிழன்புடன்,
முனைவர் தி.நெடுஞ்செழியன்
தமிழ் இணைப் பேராசிரியர்
ஏவிசி கல்லூரி(தன்னாட்சி)
மன்னம்பந்தல் - மயிலாடுதுறை.

இப்படி தமிழ் தமிழ் என்று முனங்கிக்கொண்டு - பொறியியல் படிப்பையும் தமிழாக்கிடாதிங்க சார்...

போட்டித்தேர்வுல தமிழக மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச முடியாமல் தட்டுத்தடுமாறும்போது கண்ணீர் வருவதில்லை...

ரத்தம் தான் வருது....

அதுக்காக ஆங்கிலத்துக்கு கொடி பிடிக்க வரலை...தமிழ்பற்றும் இருக்கனும்...பிறமொழிகள் மீதும் வெறுப்பு கூடாது (அது மொழி திணிப்பாக இல்லாதவரை)

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

நண்பர் திரு.தி.நெ.அவர்களுக்கு
தங்கள் மடலுக்கு நன்றி.தங்கள்
உள்ளம் அறிவேன்.
அமெரிக்கக் கனவில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே கட்டைவிரல் பதிவுகள் இந்நாட்டில்
இருப்பதை நினைவிற்கொள்ளுங்கள்.
அவ்வடித்தட்டு மக்களுக்கும்,அவர்களின் மரபினருக்கும் அவரவர் தாய்மொழியில் கல்வி,ஆட்சி,முறைமன்றம்,வழிபாடு
நடக்க வேண்டுகிறோம்.முன்னணி
பணக்கார நிறுவனமான மைக்கரோசாப்டு,கூகுள் நிறுவனங்கள்
தமிழில் சேவை தரும்பொழுது
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில்
வானூர்தி,மகிழ்வுந்துகளில் பறந்து,காற்று வளிப்பாட்டு அறைகளில் அமர்ந்திருப்பவர்களை
எங்கள் மொழியில், எங்களுக்குப் புரியும்படி எழுதுங்கள்,பேசுங்கள் என்கிறோம்.
'தமிழ்விடுதலை அடையட்டும்' என்ற பாவேந்தர் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

விருபா - Viruba சொன்னது…

\\பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்,பதிவாளர்கள் தமிழ்ப்பற்றாளர்களாக இல்லாமையே இதற்குக்காணரம்.\\

இந்தப் பட்டியலில் இன்னமும் பலர் உள்ளார்கள்.

தமிழ் நாடு அரசின் பொது நூலகத் துறை ஒவ்வொரு ஆண்டும் புத்தகங்களை எழுத்தாளர்களிடமும், பதிப்பகங்களிடமும் இருந்து தமிழ்ப் புத்தகங்களைக் கொள்முதல் செய்வது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இதற்கான ஆணை இன்னமும் ஆங்கிலத்தில்தான் அனுப்பப்படுகின்றது.

வாங்குவது தமிழ் நாடு அரசு
வழங்குவது தமிழ் எழுத்தாளர்கள்
வாங்கப்படுவது தமிழ்ப் புத்தகங்கள்
இதற்கான ஆணை மட்டும் ஆங்கிலத்தில்.

இப்பதிவில் உங்களை இடித்துரைக்க ஒரு முகமறியா நபர் வந்ததுபோல், யாராவது இடித்துரைக்க வந்தால்தான் உண்டு.

பெயரில்லா சொன்னது…

உங்களைப் போன்று பெரிய இடத் தொடர்புகள் இருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினால் நன்று.

மற்றவர்களுக்கு - இணையத்தளத்தில் ஆங்கிலம் வேண்டாம் என்று யார் சொன்னார்கள்? தமிழிலும் வேண்டும் என்று தானே கேட்கிறோம்.

நேர்முகத் தேர்வில் ஆங்கிலம் பேசாமல் திணறுகிறார்கள் என்ற ஒரு ஜல்லியைக் கண்டு சலித்து விட்டது. lkg முதல் ஆங்கில வழியில் படித்தும் ஆங்கிலம் பேசத் தெரியாத எத்தனையோ பேரை அறிவேன். பேச்சாற்றல், மொழிப்புலமை இதற்கும் பயிற்று மொழிக்கும் முழுத் தொடர்பு இல்லை.

இன்னொன்று, கூகுள் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தமிழில் சேவை தருவதை நினைத்து யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம் :) அது முழுக்க முழுக்க சந்தை வாய்ப்புகளை கணக்கிட்டு செய்வது. மூளையுள்ள எந்த நிறுவனமும் இதைச் செய்வதில் வியப்பில்லை.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

செந்தழல் அவர்களுக்கு வணக்கம்.
ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளைக்
கற்பது நன்று என்பதைத் தங்களைவிட
நான் நன்கு அறிவேன்.
என் தாய்மொழியைப் படிக்காமல் பல
இலக்கம் மக்கள் விரல்பதிவர்களாக
உள்ளனர்.அவர்களுக்கு என் தாய்
மொழியில் தகவல்களைக் கொடு
என்கிறோம்.தாய்மொழி மட்டும்
அறிந்த சப்பான்,சீன அறிஞர்கள்
நோபல்பரிசு வாங்கும் தரத்தில் இருக்க
ஆங்கிலம் கற்ற நம் மேதைகள் தில்லி
மாநகரில் இந்தி தெரியாததால் கழிப்பறைக்குச்செல்ல முடியாமல்
திண்டாடியதை நான் அறிவேன்.
பள்ளிக்குச் செல்லாத பல மாடு,ஆடு
மேய்க்கும் தோழர்கள் ஆரோவில் நகரில் ஆங்கிலம் பேசுவதைப் பார்க்கலாம்
மைக்ரோசாப்டு,கூகுள் போன்ற நிறுவனங்கள் வட்டாரமொழியைப்
பயன்படுத்தினால்தான் வளரமுடியும்
என்று தமிழைப்பயன்படுத்தும்பொழுது
அரசு நிறுவனங்களில், கல்விக் கூடங்களில் தமிழ் ஏன் பயன்படுத்தப்படவில்லை?
இதுதான் நம் வினா?
அண்டைமாநிலத்தில் கன்னடம் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும்பொழுது இங்கு ஏன் பயன்படுத்துவதில்லை?
கருநாடகத்தில் ஆங்கிலக்கூச்சல்
போடமுடியாது என்பதைத் தாங்கள்
அறிவீர்கள்தானே?