பேராசிரியர் பகுத்தறிவு அவர்கள்
தந்தை பெரியார் அவர்களால்
தமிழ்மறவர் என்று போற்றப்பட்ட புலவர்
வை. பொன்னம்பலனார் அவர்களின் இரண்டாவது மகள் பேராசிரியர் பகுத்தறிவு
அவர்கள் இன்று (28.06.2015) பிற்பகல் சென்னையில் இயற்கை எய்தினார் என்ற
செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பேராசிரியர் பகுத்தறிவு அவர்கள் 1944 இல்
பிறந்தவர். தாவரவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் பேராசிரியராகப்
பணியில் இணைந்தவர். அதன் பிறகு நாமக்கல், அரியலூர் அரசு கல்லூரிகளில் பணியாற்றியவர்.
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 33 ஆண்டுகள் தாவரவியல் துறையில் பேராசிரியராகவும்,
துறைத்தலைவராகவும், பொறுப்பு முதல்வராகவும் பணியாற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்
‘செனட்’ உறுப்பினராகவும் இருந்தவர்.
பேராசிரியர் பகுத்தறிவு அவர்களின் கணவர்
பேராசிரியர் சாமி. பிச்சைப்பிள்ளை (அறவணன்) அவர்கள் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியவர்.
இவர்களுக்கு அன்புநெடுமாறன் என்ற ஒரு மகன் உண்டு. இவர் இலண்டனினில் மருத்துவராகப் பணிபுரிகின்றார்.
பேராசிரியர் பகுத்தறிவு அவர்களின் உடல்,
சென்னை போரூரில் உள்ள எண் 2.பி, முதன்மை நிழற்சாலை, ஆலப்பாக்கம் மெட்ரோ நகர் இல்லத்தில்
01. 07. 2015 (புதன்கிழமை) காலை 7 மணிமுதல் உறவினர்கள், நண்பர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு,
பிற்பகல் பகல் 12 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
தொடர்புக்கு:
0091 - 9943249936
1 கருத்து:
ஆழ்ந்த இரங்கல்கள்.
கருத்துரையிடுக