நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 13 ஏப்ரல், 2015

ஹலோ எப்.எம். பண்பலை வானொலியில் என் சிறப்பு நேர்காணல்...


  


அன்புள்ள நண்பர்களுக்கு,
ஹலோ எப்.எம். வானொலியில் 14.04.2015 (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி முதல் 10 மணி வரை என் சிறப்பு நேர்காணல் ஒலிபரப்பாக உள்ளது.  
  அண்மையில் திருநெல்வேலி சென்றிருந்தபொழுது என் அருமை நண்பர்கள் திரு. சிவசங்கரன், திரு. கணபதி. சுப்பிரமணியம், பேராசிரியர் ஆனந்தன் ஆகியோர் இந்த நேர்காணலுக்கு உதவி செய்தனர். திரு. வெங்கட்ராமன் அவர்கள் மிகச்சிறப்பாக என்னை நேர்காணல் செய்தார். திரு. வெங்கட்ராமன் அவர்களிடம் மூத்த இதழாளருக்கு உரிய அறிவுமுதிர்ச்சியும், மகிழ்ச்சியுடன் பழகி செய்திகளை வெளிக்கொண்டுவரும் பாங்கும் இருப்பதை அறிந்து வியந்தேன்.

  திரு. வெங்கட்ராமன் அவர்களுக்கும், ஹலோ எப் எம் வானொலியின் நிர்வாகத்தினருக்கும், நிகழ்ச்சியைக் கேட்டு, என் முயற்சியை ஊக்கப்படுத்த உள்ள தங்களுக்கும் என் நன்றி.


  தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் இந்த நிகழ்ச்சியைக் கேட்கலாம். அயல்நாட்டு நண்பர்கள் இணையத்தின் வழியாகக் கேட்கலாம்.

ஹலோ எப் எம் பக்கம் செல்ல இங்கே செல்லவும்
1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் ஐயா