நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 25 பிப்ரவரி, 2015

பட்டுக்கோட்டை முத்தமிழ் மாமன்றம் நடத்தும் திருவள்ளுவர் - கம்பர் இலக்கிய விழாபட்டுக்கோட்டையில் முத்தமிழ் மாமன்றம் எனும் அமைப்புத் தொடங்கப்பட்டு அதன் இலக்கிய விழா 26.02.2015 வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் தமிழ்ப்பற்றாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்கலாம்.

இடம்: இராஜா மகால், சீனிவாசபுரம், பட்டுக்கோட்டை

நாள்: 26.02.2015 வியாழக்கிழமை

தலைமை: மருத்துவர் சி. வெ. பத்மானந்தன் அவர்கள்

வரவேற்புரை: திரு. கவிக்கோட்டை அம்பிதாசன் அவர்கள்

முன்னிலை:

சிவத்திரு. சுந்தர்லால் அவர்கள்
திரு.பொன்மழை சுந்தரசபாபதி அவர்கள்
திரு.. பன்னீர்செல்வம் அவர்கள்
திரு.இரா. பிரகாசம் அவர்கள்
திரு. நா. வீரபாண்டியன் அவர்கள்
திரு. .பார்த்திபன் அவர்கள்

இலக்கிய விழாவைத் தொடங்கிவைத்துச் சிறப்புரை:
முனைவர் மு.இளங்கோவன்

திரு. முத்து. இராமமூர்த்தி அவர்கள் தலைமையில் வள்ளுவனே மீண்டு வா என்ற தலைப்பில் கவியரங்கமும், திரு. கோ. இராசப்பா அவர்கள் தலைமையில்  வள்ளுவன் வகுத்த அறநெறியில் வாழ்ந்து காட்டிய பாத்திரம் இராமனே! ராவணனே! என்ற தலைப்பில் பட்டிமண்டபமும் நடைபெற உள்ளன.

பட்டுக்கோட்டை சத்யா உள்ளிட்ட தமிழ்த்தொண்டர்களால் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலக்கிய ஆர்வலர்களைப் பட்டுக்கோட்டை முத்தமிழ் மாமன்றம் அழைத்து மகிழ்கின்றது.


1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

விழாசிறக்க வாழ்த்துக்கள் ஐயா