நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

இன்று (15.02.2015) சன் நியூஸ் தொலைக்காட்சியில் என் செவ்வி ஒளிபரப்பானது!  சன் நியூஸ் தொலைக்காட்சியில் இன்று 15.02.2015 மாலை 7.30 மணிக்கு என் செவ்வி ஒளிபரப்பானது. 

அண்மையில் செய்தியாளர்கள் ஊன்சோறு குறித்து என்னிடம் செவ்வி கண்டனர். புறநானூறு, மதுரைக்காஞ்சி, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் ஊன்சோறு குறித்த குறிப்புகள் இருப்பதை எடுத்துரைத்து இன்றைய “பிரியாணி”க்கு முன்னோடி நம் உணவாக இருக்கலாம் என்ற கருத்தை வெளிப்படுத்தினேன். 

செவ்வி கண்ட செய்தியாளர், ஒளி ஓவியர், ஒளிபரப்பிய சன் நியூஸ் தொலைக்காட்சி ஆகியோர்க்கு நன்றியன்.

முழு நிகழ்வையும் பார்க்க இங்கு அழுத்துக

படம் உதவி: அரவணைப்பு கு.இளங்கோவன்

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மகிழ்ந்தேன்
வாழ்த்துக்கள் ஐயா