பாவலர்மணி
வாணிதாசனார், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார், நடமாடும் தமிழ் திருக்குறள்
பெருமாள் ஆகிய சான்றோர் பெருமக்களின் தமிழ்ப்பணியைப் போற்றும் வகையில் 13.12.2014 இல்
காரி(சனி)க்கிழமை காலை 10 மணி முதல் முழுநாள் நிகழ்வாக நூற்றாண்டு விழா சீரும் சிறப்புமாக
நடைபெற உள்ளது.
இடம்:
விசயவர்த்தினி திருமண மண்டபம், பாகூர், புதுச்சேரி மாநிலம்
காலை பத்து மணிக்கு முதல்
அமர்வு பாவலர் வாணிதாசனார் விழாவாக நடைபெறுகின்றது. புலவர் கதிர். முத்தையன் நோக்கவுரையாற்ற, பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா, பேராசிரியர் இராச. குழந்தைவேலனார், சொல்லாய்வுச்செல்வர்
சு. வேல்முருகன் உள்ளிட்ட அறிஞர்கள் உரையாற்றுகின்றனர்.
பிற்பகல்
2 மணிக்கு இரண்டாம் அமர்வு குடந்தை ப. சுந்தரேசனார் விழாவாக நடைபெறுகின்றது. பாவலர்
சு. சண்முகசுந்தரம், பாவலர் தா. அன்புவாணன் வெற்றிச்செல்வி, முனைவர் மு.இளங்கோவன்,
இறைநெறி இமயவன் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படத்தின்
முன்னோட்டம் அறிஞர் பெருமக்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட உள்ளது.
மூன்றாம்
அமர்வு மாலை 4 மணிக்குத் தொடங்கி 7 மணிவரை நடைபெறுகின்றது. புலவர்
சி. வெற்றிவேந்தன், பாவலர் சீனு. அரிமாப்பாண்டியன், தழல் ஆசிரியர் தேன்மொழி உள்ளிட்டோர்
உரையாற்றுகின்றனர்.
சிறப்பு
விருந்தினர்களாக அமைச்சர் பெருமக்கள் மாண்புமிகு தி. தியாகராசன், மாண்புமிகு பெ. இராசவேலு ஆகியோர் கலந்துகொண்டு
உரையாற்ற உள்ளனர். தமிழுக்கு உழைத்த அறிஞர் பெருமக்களின் நூற்றாண்டு விழாவுக்குப் பாவணர்
பயிற்றகத்தார் அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.
1 கருத்து:
விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
கருத்துரையிடுக