நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 6 டிசம்பர், 2014

வேலூர் மருத்துவர் பத்மா அம்மா அவர்கள் மறைவு


  வேலூரில் புகழ்பெற்ற மருத்துவராகவும், தமிழ் ஆர்வலராகவும் விளங்கிய எங்கள் அம்மா மருத்துவர் பத்மா சமரசம் அவர்கள் 04.12.2014 காலை 5.30 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற செய்தியை இப்பொழுது தற்செயலாக அறிய நேர்ந்தது. பலவாண்டுகள் பழகிய அந்தத் தாயைச் சென்ற கிழமை வேலூர் சென்றபொழுதும் காணமுடியாமல் திரும்பியிருந்தேன். மீண்டும் காணவே முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. 

  தமிழ் இதழ்களில் மருத்துவம் குறித்துப் பல கட்டுரைகள் எழுதியவர். நூல்களும் வடித்துள்ளார். பலருக்கு இலவயமாக மருத்துவம் பார்த்த தாயுள்ளத்தினர். அகவை முதிர்ந்த நிலையிலும் ஆர்வமாகத் தமிழ் இணையம் அறிந்தவர்கள்.

  நான் வேலூர் செல்லும்பொழுது தாயாக இருந்து தாங்கிப்பிடித்தவர்கள். அவர்களை இழந்து வருந்தும் வழக்குரைஞர் தெ. சமரசம் ஐயாவுக்கும் உடன் பிறப்பு மருத்துவர் இனியன் ஐயா, மற்றும் குடும்பத்தினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்