தமிழர்களின் மரபுவழியில் அமைந்த பண்ணிசையை
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் திசைதோறும் சென்று முழங்கியவர் இசையறிஞர்,
ஏழிசைத் தலைமகன், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். ஐயா அவர்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தும் முகமாகச்
சங்க நூல்களிலும், சிலப்பதிகாரத்திலும், பக்திப் பனுவல்களிலும் நிறைந்து விளங்கும்
இசைப்பாடல்களைப் பண்ணாராய்ச்சி வித்தகர் அவர்களின் குரலுடன் காட்சிப்படுத்தி வழங்க
உள்ளோம்.
உலகப் பரப்பில் பரந்து வாழும் தமிழர்கள் தங்கள் தொல்லிசையைக் காட்சிகளின் பின்புலத்தில் விரைவில் கேட்கலாம். இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேடித்தொகுத்த இசையாய்வுப்புதையல் இன்னும் சில நாள்களில் வெளியீடு காண உள்ளது. தமிழிசையார்வலர்கள் இருகை நீட்டி வரவேற்பார்கள் என்று நம்புகின்றோம்.
படத்தொகுப்புப் பணியிலும், இசைத்துல்லியப் பணியிலும் வளரும் இசையறிஞர் திரு. இராஜ்குமார் இராஜமாணிக்கம் அவர்கள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார். தமிழர்களின் தொல்லிசை, கலை மீட்பு முயற்சி கைகூட உள்ள மகிழ்வில் வயல்வெளித் திரைக்களத்தினர் இப்படைப்பை வழங்க உள்ளனர். தமிழர்தம் தொல்லிசை மீட்பு குறித்த ஒரு செலவு நயப்பு இது.

3 கருத்துகள்:
ஆகா அற்புதம் ஐயா
வித்தகரின் உருவம் உருப்பெரும் காட்சி மனதைக் கொள்ளை கொள்கின்றது ஐயா.
ஆவணப் படத்தின் தன்மையை இம்முன்னோட்டமே அருமையாய் விளக்குகிறது
முழு படத்தினையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
தங்களின் அயரா கடும் உழைப்பும் பாராட்டிற்கு உரியது ஐயா
தாங்கள் மேற்கொள்ளும் பணிகளைத் திட்டமிட்டு செவ்வனே செய்வீர்கள் என்பதை நான் தங்களுடைய பல பதிவுகளில் கண்டுள்ளேன். இப்பதிவும் அதற்கு ஒரு சான்று. தங்களின் முயற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
தங்கள் படைப்பு அனைத்தும் அருமை ஐயா. தாங்கள் மேற்கொள்ளும் பணிகளைத் திட்டமிட்டு செவ்வனே செய்வீர்கள் என்பதை நான் தங்களுடைய பல பதிவுகளில் கண்டுள்ளேன். தங்களின் அயரா கடும் உழைப்பும் பாராட்டிற்கு உரியது ஐயா.
கருத்துரையிடுக