திருச்சிராப்பள்ளி, திருவரங்கம், காந்திசாலையில்
அமைந்துள்ள இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு
நூற்றாண்டுப் பெருவிழா 29.11.2014 மாலை ஆறு மணிக்கு நடைபெற உள்ளது.
புரவலர் க. தமிழழகன் அவர்கள் வரவேற்புரை
நல்க, திரு. இராம. சுப்பிரமணியன், திரு. குமர. நமசிவாயமூர்த்தி முன்னிலையில் இந்தப்
பெருவிழா நடைபெற உள்ளது.
இராச. இளங்கோவன் அவர்கள் அறிமுகவுரையாற்றவும், புலவர் புவியரசு அவர்கள் தலைமை தாங்கவும் இந்த விழா நடைபெறுகின்றது. திருமழபாடி புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் தொடக்கவுரையாற்றவும், பெரும்பாண நம்பி முனைவர் த. கனகசபை அவர்கள் (பாரதிதாசன் பல்கலைக்கழகப்
பேராசிரியர்) விழாப் பேருரையாற்றவும் உள்ளனர்.
பண்ணாய்வான் ப. சு அவர்களின் படத்தினைத்
திறந்து வைக்க திரு. தங்க. கலியமூர்த்தி அவர்கள் இசைந்துள்ளார்கள். அருள்மனச் சான்றோர்
எம். ஆர். எஸ். கேசவன் அவர்களின் திருக்கையினால் முனைவர் மு. இளங்கோவனுக்குப் பண்ணாய்வான்
ப.சு. சீர் பரவுவார் என்னும் உயரிய விருதளித்துப் பாராட்ட உள்ளனர். தமிழ்மாமணி முனைவர்
ப. சுப்பிரமணியன் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுறும். தமிழார்வலர்களை
இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கத்தினர் அன்புடன்
வரவேற்கின்றனர்.
2 கருத்துகள்:
தங்களின் அயரா பணிக்குப்
பொருத்தமான பட்டம் ஐயா
வாழ்த்துக்கள்
தங்களின் முயற்சிக்குக் கிடைத்த பெரும் பரிசு. தங்களின் சாதனைகள் தொடரவும், மென்மேலும் விருதுகள் பெறவும் வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக