நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 6 அக்டோபர், 2025

தொல்லியல் அறிஞர் நடன.காசிநாதன் மறைவு!

 

அறிஞர் நடன.காசிநாதன்
(01.11.1940 -  06.10.2025)

  தமிழ்நாட்டு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை முன்னை இயக்குநரும் புகழ்பெற்ற கல்வெட்டியல் அறிஞரும், பன்னூலாசிரியருமாகிய நடன.காசிநாதன் அவர்கள் இன்று (06.10.2025) இல் இயற்கை எய்தினார். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள்,  நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 அறிஞர் நடன.காசிநாதன் அவர்களுடன் சற்றொப்ப முப்பது ஆண்டுகள் எனக்கு அறிமுகம் உண்டு. பலமுறை சந்தித்து உரையாடியுள்ளேன். அவர்களின் தமிழ்ப்பணிகளைப் சற்றொப்ப பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி ஆவணப்படுத்தியுள்ளேன். அவர்தம் தமிழ்ப்பற்றும் அறிவாராய்ச்சியும் என்றும் நமக்கு அவரை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். உலகப் புகழ்பெற்ற அறிஞருக்கு உரிய சிறப்பையும் மதிப்பையும் அவர் இறந்த பிறகாவது வழங்குவது தமிழர்களின் தலைக்கடன். தொடர்புடையவர்கள் சிந்திக்கட்டும்.


நடன.காசிநாதன் அவர்களின் புகழ்வாழ்க்கையை அறிய இங்கு அழுத்துக.

கருத்துகள் இல்லை: