[முனைவர் அருள் ஆறுமுகம் கண்ணன் மலேசியாவின் ஈப்போ நகரில் வாழ்ந்துவரும் கவிஞர்; எழுத்தாளர்; தமிழ்ச் செயல்பாட்டாளர். ஈப்போவில் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு நடத்தியவர். இரண்டாம் உலகத் தமிழ் இசை மாநாட்டினையும் நடத்தியவர். தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு வரும் தமிழறிஞர்களை வரவேற்று, விருந்தோம்பும் உயர் பண்பினர். தமிழகத்துடன் நல்ல தொடர்பில் உள்ளவர். பன்னூலாசிரியர்.]
முனைவர் அருள் ஆறுமுகம் கண்ணன்
மலேசிய மரபுக் கவிஞர் அருள் ஆறுமுகம் கண்ணன் அவர்கள் மலேசியா நாட்டில் உள்ள சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கோலகுபுபாரு என்ற சிற்றூரில் 06.11.1956 இல் பிறந்தவர். இவரது பாட்டனார் பெயர் தஞ்சன். பாட்டியின் பெயர் வள்ளியம்மாள். இவர்கள் தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தின் காட்டுப்பாடியைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள். இவர்களின் மகனாகப் பிறந்தவர் த.கண்ணன். த.கண்ணன்‚ நா.கோவிந்தம்மாள் இணையர்களுக்கு மகனாகப் பிறந்தவர் கவிரத்னா முனைவர் அருள் ஆறுமுகம் கண்ணன்.
தமிழ்மொழி மீது ஆர்வம்
பள்ளியில் படிக்கின்றபோதே தமிழ்மொழியின் மீதும், தமிழ் இலக்கியத்தின் மீதும் தீராத ஆர்வம் கொண்டவராக இருந்தார். தனது பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போதே பேச்சுப் போட்டி, கட்டுரை எழுதுதல், கவிதை எழுதுதல், விளையாட்டுப் போட்டி என அனைத்து வகையான போட்டிகளிலும் கலந்துகொண்டு தன் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவராகத் திகழ்ந்தார். கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி, கவிசித்தர் பெ. கோ.மலையரசன், கவிஞர் மணிதாசன், கவிஞர் பொன்முடி, சுப்பிரமணியன் முதலான கவிஞர்களின் தொடர்பால் கவிதைத்துறையில் ஈடுபாடு கொண்டவர்.
குடும்பம்
முனைவர் அருள் ஆறுமுகம் கண்ணன் அவர்களுடன் உடன் பிறந்தவர்கள் பத்துப் பேர். அனைவரும் ஒற்றுமையுடனும் நலமுடனும் உள்ளனர். இவர் தங்கம்மாள் அவர்களை இல்லறத் துணையாக ஏற்றவர். இவர்களின் திருமணம் 30.12.1982 இல் நடந்தது. இவர்களுக்கு ஒரே மகன் ஜீவன் ஆவார்.
பணியும் பதவியும்
அருள் ஆறுமுகம் கண்ணன் மலேசியா நாட்டின் காவல் துறையில் உளவுத்துறை அதிகாரியாக 1977 முதல் பணி செய்தவர். மலேசிய காவல் துறையான உளவுத் துறையில் பணியின் போது பல நெருக்கடியான சோதனைகளைக் கடந்து சாதனைகளாகப் படைத்தவர்.
இலக்கியப் பணியும் பொறுப்பும்
தமிழ் மொழிக்கான பணியினை செய்வதற்கு ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம் என்ற பெயரில் மன்றம் தொடங்கப்பட்டு, தற்போதுவரை தமிழ்ப்பணி செய்து வருகிறார். ஈப்போ தமிழர் திருநாள் தலைவராகவும், மலேசியா எழுத்தாளர் சங்கத்தில் துணைத் தலைவராகவும், பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளராகவும் பொறுப்பில் இருந்துள்ளார்.
உலக மாநாடுகள்
முதல்
உலகத் தமிழ்க்கவிதை மாநாடு -2015
இரண்டாம்
உலகத் தமிழ்க்கவிதை மாநாடு – 2019
உலகத்
தமிழிசை மாநாடு 2023
உலகத்
தமிழ் எழுத்தாளர் தொடக்க மாநாடு 2024
கவிப்பேரரசு வைரமுத்து இலக்கிய விழா 2014
இலக்கிய
நிகழ்ச்சி
100 மேற்பட்ட இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
விருதுகள்
- மறைமலை அடிகளார் விருது
- எழுத்துச் சிற்பி விருது
- புலமைச் செம்மல் விருது
- பல்லவன் விருது
- முத்தமிழ்ச் செல்வன் விருது
- சமூகக் காவலன் விருது
- கவியருவி விருது
- கவி சிற்பி விருது
- கவிரத்னா விருது
- முத்தமிழ்த் தூதர் விருது
- PJK ( மாநில சுல்தான்)
- BPP (தங்கப் பதக்கம் மாமன்னர்
- PJPN (வீரப் பதக்கம் மாமன்னர்
- மதிப்புறு டாக்டர் விருது ( இந்தியா )
- தங்கப் பதக்கம் மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம்
ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தல்
பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு 5 ஆய்வுக்கட்டுரைகளைப் படைத்துள்ளார். தேசியக் கருத்தரங்குகள் 10 இல் கலந்துகொண்டுள்ளார்.
தமிழ்
இணைய வழி திறனறித் தேர்வு
பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள் நடத்திய இணைய வழித் தேர்ச்சித் சான்றிதழ் - 85 பெற்றுள்ளார்.
எழுதிய
நூல்கள்
1. மண்வாசனை
2. மகிழம்பூ
தொகுப்பு நூல்
3. மணக்கும்
சேவையும் மனித நேயமும்
4. மீண்டெழும்
மலேசிய விளையாட்டு உலகம் இலக்கு 2020
5. திருமுருகாற்றுப்படை
5 தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார்.
முத்தமிழ்ப் பாவலர் மன்றத்துக்குச் சொந்தக் கட்டடம்:
தமது தலைமையில் ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்திற்கெனச் சொந்தக் கட்டடம் ரி.ம 500,000.00 வெள்ளிக்கு வாங்கப் பெற்றது. அது தமிழ் வளர்க்கும் நிலையமாக இந்த இடம் ஈப்போவில் விளங்குகின்றது.
அருள் ஆறுமுகம் கண்ணன் கீழ்வரும் பொறுப்புகளில் உள்ளார்.
1. தலைவர், ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம்,
2. தலைவர்‚ உலகத் தமிழ்க் கவிஞர்கள் பேரமைப்பு
3. தோற்றுனர்:டாக்டர் அருள் தமிழ்க்கல்வி அறக்கட்டளை
4. முதன்மைச் செயலாளர்‚பன்னாட்டுத் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (தமிழ்நாடு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக