நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 17 ஜூலை, 2025

சீர்காழியில் தொல்காப்பிய வாழ்வியல் சிந்தனைகள் – சிறப்புரை

 


 

 சீர்காழி (கொள்ளிடம்) செம்மொழி இலக்கிய மன்றம் சார்பில் கொள்ளிடம், செம்மொழி அரங்கில் தொல்காப்பிய வாழ்வியல் சிந்தனைகள்சிறப்புரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில்  உலகத் தொல்காப்பிய மன்றத்தின் செயலர் முனைவர் மு. இளங்கோவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். 

 மேலும் மாணவர்கள் பங்குபெறும்எங்கள் ஊர்என்னும் தலைப்பிலான பேச்சுப்போட்டியும் அறிஞர்களின் கருத்துரைகளும்  இடம்பெற உள்ளன. தமிழார்வலர்களைச் செம்மொழி இலக்கிய மன்றம் அன்புடன் அழைக்கின்றது. 

  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: கவிஞர் சீர்காழி உ. செல்வராசு, சிங்கப்பூர் 

 நாள்:20.07.2025,ஞாயிற்றுக்கிழமை. நேரம்: காலை 9 மணி முதல் 2 மணி   வரை. 

இடம்: செம்மொழி அரங்கு, முதன்மைச்சாலை, கொள்ளிடம், சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம்.

கருத்துகள் இல்லை: