நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் வெளியீடு…

 


இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழிக் காப்பு முயற்சியில் ஈடுபட்ட அறிஞர்களுள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதன்மையானவர் ஆவார். இவர்தம் பாடல்களும் உரைநடையும் ஒன்றையொன்று போட்டியிட்டுப் புலமைநலம் காட்டுவனவாகும். 

பாவலரேறு அவர்கள் தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் என்னும் தூய தமிழ் ஏடுகளை வெளியிட்டுத் தமிழ்த்தொண்டாற்றியவர். பன்னூல்களைத் தமிழ்நலம் நோக்கி எழுதிய பெருமைக்குரியவர். இத் தமிழ்த் தலைமகனாரின் எழுத்தடைவுகள் முழுமைப்படுத்தப்பட்டு, இன்று (05.01.2025) ஞாயிற்றுக்கிழமை காலை, சென்னையில் வெளியீடு காண உள்ளன. தமிழ் அறிஞர்கள், தென்மொழி அன்பர்கள், தமிழ்த்தொண்டர்கள் ஒன்றுகூடும் இப்பெருவிழா வரலாற்று முதன்மை வாய்ந்த விழாவாகும்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இவ் எழுத்தடைவுகளை உலகத் தமிழர்கள் ஆர்வமுடன் கொடை நல்கி, வாங்கிப் புரத்தல் வேண்டும். படித்தலும் உலகம் முழுவதும் பாவலரேறுவின் எழுத்துகளைப் பரப்புவதும் தமிழர்தம் தலைக்கடமையாகும். இவ் அரிய முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எம் பாராட்டுகளும் வாழ்த்துகளும். 

வாருங்கள்!. இன்று சென்னையில் சந்திப்போம். 

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் எழுத்தடைவுகளை வாங்கிச் செல்வோம்.

கருத்துகள் இல்லை: