பேராசிரியர் சா. வளவன்
சென்னைப்
பச்சையப்பன் கல்லூரியின் முன்னைத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர்
சா. வளவன் அவர்கள் இன்று (29.04.2016) மாலை 6 மணியளவில்
இயற்கை எய்தினார்கள் என்பதை
ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். அவருடன் பல்வேறு கருத்தரங்குகளில்
கலந்துகொண்டு, உரையாடியுள்ளேன். சென்னை வானொலி நிகழ்வு ஒன்றில் அவருடன் கலந்துகொண்டுள்ளேன்.
நாட்டுப்புறவியல் துறையில் ஈடுபாடு கொண்டவர். பல்வேறு நூல்களையும் கட்டுரைகளையும் தமிழுக்குத்
தந்தவர். அனைவரிடத்தும் நிறைந்த அன்புடன் பழகும் பண்பாளர். அன்னாரின் மறைவால் வருந்தும்
தமிழுள்ளங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்!

2 கருத்துகள்:
ஆழ்ந்த இரங்கல்கள்.
எளியர்,அறிவில் வலியா்,என் நினைவுக்கு எட்டியவரை அருமை மனிதா்.
கருத்துரையிடுக