விழுப்புரம்
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியின்
தமிழ்த்துறை சார்பில் 27.02.2016 காரி(சனி)க் கிழமை நடைபெற்ற இலக்கியங்களில் பண்பாட்டுக் கூறுகள் என்னும் தலைப்பில்
அமைந்த மாநில அளவிலான கருத்தரங்கில்
கலந்துகொண்டு இலக்கியங்களில் பண்பாட்டுக் கூறுகள் என்ற தலைப்பில்
இரண்டு மணி நேரம் உரையாற்றும்
வாய்ப்பு எனக்கு அமைந்தது. கல்லூரியின் தாளார் உயர்திரு ஏ. சாமிக்கண்ணு
அவர்களும், கல்லூரி இயக்குநர் பேராசிரியர் கஸ்தூரிபாய் தனசேகரன் அவர்களும் தமிழ்த்துறைத்
தலைவர் பேராசிரியர் மு. மங்கையர்க்கரசி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
என்
உரையை முழுவதும் செவிமடுத்த கல்லூரித் தாளாளர் அவர்கள் ஒரு விருப்பம் தெரிவித்தார்.
நான் மீண்டும் ஒருமுறை அவர்களின் கல்லூரிக்கு வந்து தமிழக நாட்டுப்புறப் பாடல்களைக்
கல்லூரி மாணவிகள் அனைவரும் கேட்கும் வகையில் உரையாற்ற வேண்டும் என்பதே அந்த விருப்பம்.
சற்றொப்ப மூவாயிரம் மாணவிகள் பயிலும் கல்லூரியைப் போற்றிப் புரக்கும் தமிழ்ப்பற்று
நிறைந்த கல்லூரியின் தாளாளர் திரு. ஏ. சாமிக்கண்ணு அவர்கள் இந்நாடு முன்னேற தாய்மொழிவழிக் கல்வியை நடைமுறைப்படுத்த
வேண்டும் என்று ஆற்றிய உரையைக் கேட்டு நான் வியந்தேன். தமிழ் உணர்வு தழைத்த தாளாளர்
அவர்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன்பட்டுள்ளது.
வாய்ப்பு
நல்கிய விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியினருக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக