அன்புடையீர்
வணக்கம்.
உலகத்
தொல்காப்பிய மன்றம் 2015,
செப்டம்பர் மாதம் 27 ஆம்
நாள் பிரான்சில் தொடக்க
விழாவினைக் கண்டது. அதனை அடுத்து
கனடா, துபாய் உள்ளிட்ட நாடுகளில்
இதன் தொடக்க நிகழ்வுகள் சிறப்பாக
நடந்தன. உலகத் தொல்காப்பிய மன்றம்
ஆய்வு நோக்கில் சில பணிகளை அமைதியாகச்
செய்துவருகின்றது. விரைந்து
அப்பணிகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரும். இந்நிலையில் உலகத்
தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் தொல்காப்பியத் தொடர்ப்பொழிவினை மாதந்தோறும் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம்.
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாளில் மாலை 6.30 மணி முதல் 7. 30 மணி
வரை ஒருமணி நேரம் தொல்காப்பியம் குறித்த ஆய்வுரையை அறிஞர்
ஒருவர் வழங்குவார். தொல்காப்பிய நூலின் அமைப்பு, மூலப்பதிப்புகள்,
மொழிபெயர்ப்புகள், உரைகள், தொல்காப்பிய ஆய்வுகள் குறித்து அறிஞர்களின் பொழிவுகள் அமையும்.
புதுச்சேரி
நகரில் நடைபெறும் இந்த நிகழ்வுக்குத் தமிழ் அன்பர்களும், தொல்காப்பிய ஆர்வலர்களும்
வருகை தரலாம். குறித்த நேரத்தில் நிகழ்ச்சியைத் தொடங்குவதும் குறித்த நேரத்தில் முடிப்பதும்
பின்பற்றப்படும். வரும் பிப்ரவரி 6 இல் (காரிக் கிழமை) முதல்
நிகழ்வு தொடங்க உள்ளது.
பொழிவாளர்
விவரம், நிகழ்ச்சி நடைபெறும் இடம் விரைந்து அறிவிக்கப்பெறும்.
புதுவை
நிகழ்வினை முனைவர் ப. பத்மநாபன் அவர்களும், திரு. செ. திருவாசகம் அவர்களும் முனைவர்
மு.இளங்கோவன் அவர்களும் ஒருங்கிணைக்க உள்ளனர்.
தொடர்புகொள்ள:
முனைவர்
ப. பத்மநாபன் + 9443658700
திரு. செ. திருவாசகம் + 9585509560
முனைவர்
மு. இளங்கோவன் + 9442029053
1 கருத்து:
தொடர்ப்பொழிவு சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
கருத்துரையிடுக