தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தின்
சிறப்பினை உலக அளவில் நிலைநாட்ட உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பு தொடங்கப்பட
உள்ளது. பிரான்சில் 27.09.2015 இல் தொடக்க விழாவும் உலகத் தொல்காப்பிய அறிஞர்களின்
கலந்துரையாடல் கூட்டமும், நடைபெறுகின்றன. இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்,
இங்கிலாந்து, கனடா, பிரான்சு, செர்மனி, சுவிசு, அமெரிக்கா, குவைத்து, சவுதி அரேபியா
உள்ளிட்ட நாடுகளிலிருந்து அறிஞர் பெருமக்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
முதற்கண் உலகத் தொல்காப்பிய மன்றத்தின்
இணையதளத் தொடக்கவிழாவும், பிரான்சு நிகழ்ச்சி குறித்த கலந்துரையாடல் கூட்டமும் புதுவையில் நடைபெற உள்ளன. அனைவரும் கலந்துகொள்ள
அன்புடன் அழைக்கின்றோம்.
நாள்:
18.08.2015 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இடம்: செகா கலைக்கூடம்(Sega Art Gallery), நீடா இராசப்பையர் தெரு, புதுச்சேரி
தலைமை:
முனைவர் சு. அழகேசன் அவர்கள் (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)
முன்னிலை:
பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார்
அவர்கள்
திரு. அரங்க. மாரிமுத்து அவர்கள்
வரவேற்புரை: முனைவர் ப. பத்மநாபன்
அவர்கள் (செய்தித்துறையின் மேனாள் துணை இயக்குநர்)
நோக்கவுரை: முனைவர் மு.இளங்கோவன்
அவர்கள்( செயலர், உலகத் தொல்காப்பிய மன்றம்)
இணையதளம் தொடங்கிவைத்து
வாழ்த்துரை
திரு. து. மணிகண்டன் அவர்கள் இ.ஆ.ப.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர்
கருத்துரை வழங்குவோர்:
பேராசிரியர் கு.
சிவமணி அவர்கள் (செம்மொழி நிறுவன மேனாள் ஆய்வறிஞர்)
முனைவர் க. இளமதி சானகிராமன் அவர்கள்
(புதுவைப் பல்கலைக்கழகம்)
முனைவர் ஒப்பிலா. மதிவாணன் அவர்கள் (சென்னைப் பல்கலைக்கழகம்
முனைவர் அரங்க. பாரி அவர்கள் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
முனைவர் போ. சத்தியமூர்த்தி
அவர்கள் (மதுரை காமராசர் பல்கலைக் கழகம்)
நன்றியுரை: திரு. செ. திருவாசகம் அவர்கள்
1 கருத்து:
நிகழ்வுகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக