திருவாரூர் மாவட்டம்
முத்துப்பேட்டை இரகமத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்த்தாத்தா உ.வே.சா.
இலக்கிய மன்றத்தின் பத்தாம் ஆண்டுவிழா 23.08.2013 வெள்ளிக்கிழமை மாலை சரியாக ஆறு மணிக்கு
நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கலந்துகொண்டு
தலைமையுரையாற்று கின்றார். தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு. கே.வைத்தியநாதன் அவர்கள்
சிறப்புரையாற்றுகின்றார். பரிசுபெற்ற மாணவிகளின் சிறப்புரையும், கூடங்குளம் அணுமின்நிலையம்
தேவையா? தேவை இல்லையா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெறுகின்றது. விழாவில் உ.வே.சா.இலக்கிய
மன்றச்செயலாளர் திரு இராஜ்மோகன் அவர்கள் நன்றியுரையாற்றுவார். தமிழில் பேசுவோம் என்ற
முழக்கத்துடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 கருத்து:
I am Accountant of Rahmath Girls . Mat. Hr.Sec.School. I admire your speech and fork songs. The songs are very useful to students that how to to learn the tamil literature instead of text books. Thank you so much for the speech.
கருத்துரையிடுக